வரலாற்றினைத் திரிப்பது
பற்றிக்கூறினேன்.
அதற்குக் கவிஞர் கூறினார்
‘திரிப்பதற்கு வரலாறு ஒன்றும் கயிறல்ல’.
இன்னுமொரு இலக்கியவாதி கூறினார்
‘திரிப்பதற்கு வரலாறு ஒன்றும்
உளுத்தம் மாவுமல்ல’.
இடையில் புகுந்து மேலுமொரு
திறனாய்வாளர் செப்பினார்:
“திரிப்பதற்கு
வரலாறு ஒன்றும்
விளக்குத்திரியோ அல்லது
வெடிகுண்டுத்திரியோ ,
வெடிக்கும் பட்டாசுத்திரியோ அல்ல”
இன்று நான்
இம்பர் வானெல்லை
இராமனையே பாடிய
பாணனாக அலைந்து
‘திரி’கின்றேன், மேலுமேதாவது
‘திரி’ப்பதற்குக் கிடைக்குமா
என்று.