‘ஜீவநதி’ சந்தா பற்றிய விபரங்கள்!

வணக்கம், இன்று (16-11-2012) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடுசெய்திருந்த ஜீவநதி கனடா சிறப்பிதழ் குறித்த கலந்துரையாடலின்போது, பல ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஜீவநதியின் தொடர்ச்சியான வருகைக்கு உதவப் பலரும் முன்வந்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும். குறிப்பாக, வருடாந்த சந்தாவான 50 டொலர் ஒரு பெரியதொகை என்பதால், ஆறுமாத சந்தாவான 25 டொலரைக் கொடுப்பது பலருக்கும் வசதியாக இருக்கும் என கவிஞர் திருமாவளவன் அவர்கள் ஆலோசனையை ஒன்றை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பலரும் உடனடியாக டொலர் 25 வழங்கி இன்றே தம்மை ஜீவநதியின் சந்தாதாரராக இணைத்துக்கொண்டனர்.வணக்கம், இன்று (16-11-2012) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடுசெய்திருந்த ஜீவநதி கனடா சிறப்பிதழ் குறித்த கலந்துரையாடலின்போது, பல ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஜீவநதியின் தொடர்ச்சியான வருகைக்கு உதவப் பலரும் முன்வந்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும். குறிப்பாக, வருடாந்த சந்தாவான 50 டொலர் ஒரு பெரியதொகை என்பதால், ஆறுமாத சந்தாவான 25 டொலரைக் கொடுப்பது பலருக்கும் வசதியாக இருக்கும் என கவிஞர் திருமாவளவன் அவர்கள் ஆலோசனையை ஒன்றை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பலரும் உடனடியாக டொலர் 25 வழங்கி இன்றே தம்மை ஜீவநதியின் சந்தாதாரராக இணைத்துக்கொண்டனர். இந்த ஏற்பாடு உங்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் வசதியாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு ஆறுமாத சந்தாவைச் செலுத்தி, சந்தாதாரராக நீங்களோ உங்கள் நண்பர்களோ சேர விரும்பினால் அதற்குரிய பணத்தையும் உங்கள் தபால் முகவரியையும் என்னிடம் சேர்ப்பித்தால் எல்லோரதும் பணத்தையும் திரட்டி அனுப்பிவைத்து, மாதாமாதம் தபாலில் ஜீவநதி உங்கள் முகவரிக்கு வந்துசேர வழிசெய்ய முடியும். உங்கள் சம்மதத்தை இந்த மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எனது தொலைபேசி வழியாகவோ (416 – 627 6583) என்னோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள். அது, ஈழத்திலிருந்து தமிழ் மீதும், தமிழிலக்கியத்தின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக, இந்தத் தீக்குளிப்பு முயற்சியில் துணிந்து ஈடுபாடுள்ள அந்த இளம் ஆர்வலர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

knavam27@hotmail.com