மகாகவிக்கு ஒரு மடல்

கால சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றும் நான் பார்வையாளரே

நன்மைகளை நினைவிலிருந்து எரித்தனர் நாகரிகம் என்று

நீ விதைத்த வார்த்தைகள் வளர்ந்தும் மரமாகவில்லை

இன்று நிமிர்ந்த நங்கைகள் கூட காணப்படுகின்றனர் காந்தமாக

மனமுடைந்து மரணிக்கின்றனர் நீ விளையாட சொல்லிய சிறுவர்கள்

 

மொழியை நீ உயிர்மூச்சாக எண்ண பிற மொழி பயில்வதே உயர்வு இங்கு

உணவுக்காக உயிர் வாட அதனை ஏற்றுக் கொண்டனர் விதி என்று

வேடிக்கையாய் கூட வீழக் கூடாது என்ற உன் வாக்கு வேடிக்கையானது

நினைவுகளில் அல்ல இங்கு முகநூல் பதவுகளில் மட்டுமே காண முடிகிறது உன்னை

காய்ந்த மாலையுடன் கல்லாய் இருக்கும் உன் அன்னையும் கரைந்து கொண்டிருக்க

உனது உணர்ச்சி நெற்பயிர்கள் வீரக் கதிராகும் முன்பே அறுவடை செய்யப்படுகிறது

 

Chandha A. R <chandhaa.r@gmail.com>