03.11.2013 ஞாயிறு பிற்பகல் 03.00 மணி, SALLE SAINT BRUNO, 9, RUE SAINT BRUNO, 75018 PARIS
SAINT BERNARD தேவாலயம் அருகில் ,Métro : LA CHAPELLE
குமரன் நினைவுப் பேருரை: யமுனா ராஜேந்திரன் – ‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’
போராட்டத்தினுள் வாழும் மனிதர்கள் முதன்மையாக இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். உச்சபட்சமாக உயிரை இழக்க நேரும். நிலவிய சமூகம் ஏற்படுத்தி வைத்த அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள், பொறுப்புக்கள் போன்றவற்றை இவர்கள் மீற நேரிடும். தவிர்க்கவியலாமல் வன்முறையை எதிர்கொள்ளவும் செலுத்தவும் நேரிடும். அனைத்துக்கும் மேலாக இலக்கை எய்தும் நோக்கில் தோல்வியை எதிர்கொள்ளவும் நேரிடும். அப்போது தாம் இழந்தவையும் மீறியவையும் அர்த்தமுள்ளவைதானா என்கிற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். அவ்வேளை உளச்சிதைவுக்கும் நம்பிக்கையின்மைக்கும் அவர்கள் உள்ளாகவும் நேரிடும். இதனையும் மீறித்தான் மனிதர்கள் தம் இருப்புக்கும் விடுதலைக்கும் போரிட்டபடியே இருக்கிறார்கள். இதுவே மனிதகுலத்தின் வரலாறு. ஈழப் போராட்டத்தினையிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் வாழ்வும் இவ்வாறானதே. எனினும், இவர்களில் ஒரு சிலரே வரலாற்றில் வாழ்கிறார்கள். ஏன் அவ்வாறு நேர்கிறது என்பது குறித்து பார்வையாளர்கள் பங்குபெறும் உரையாடல் பிரதான உரையை அடுத்து இடம்பெறும். தோழர். குமரனுடன் வாழ்ந்த தோழர்களும் நண்பர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
நடிப்பதற்காகவே எழுதப்படும் படிப்பதற்காக மாத்திரம் எழுதப்படும் நடிப்பதற்கும் படிப்பதற்கும் எழுதப்படும் நாடகங்கள் என்று மூன்றுவகைகள் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் மு.வரதராசன் குறிப்பிட்டார். நாடகங்களை எழுதினால் நடிக்கமாத்திரமே முடியும். படிப்பதற்காக நாடகங்கள் எழுதமுடியாது எனச்சொல்லும் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாப்படங்களின் கதை வசனங்கள் கையிலே சுருட்டக்கூடிய பருமனில் சிறு நூல்களாக வெளியாகின. அவற்றைப்படித்துப்பாடமாக்கி பாடசாலைகளிலும் மற்றும் பிரதேச சனசமூகநிலையங்கள் ஊர் மன்றங்களில் நாடகம் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் (வசனம் சக்தி கிருஷ்ணசாமி) இரத்தக்கண்ணீர் (வசனம் திருவாரூர் தங்கராசு) திரைப்பட வசனத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார்கள். வரி வட்டி திறை வானம் பொழிகிறது… பூமி விளைகிறது… வயலுக்கு வந்தாயா ஏற்றம் இறைத்தாயா…அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா? மாமனா மச்சானா. என்று பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன் வசனம் பேசிய பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
அத்தியாயம் -12
ஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா? உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.
[ பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54 இதழில் வெளியான கட்டுரை.-] இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி’ மற்றும் குட்டிரேவதியின் ‘முலைகள்’ தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையில் கூட
‘எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’
என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. ‘காமத்துப்பால் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. ‘முலைகள்’ போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.
இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts) என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. கனடாவில் உள்ள கலை ஆர்வம் மிக்க மாணவர்களுக்கான பொதுப் பரிட்சையில் சித்தியடைந்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திரு திருமதி குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்து கனடிய தேசிய கீதம் கல்லூரிக்கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து எம்மினத்திற்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. செல்வி அருசி மகேஸ்வரன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராவும், திருமதி வனிதா குகேந்திரன் தொடர்பாளராகவும் கடமையாற்றினார்கள்.
சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சிலபகுதிகளை மட்டும்பார்த்து முடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப் பகுதியில் நமது நல்லூர் திருவிழா போல் உள்ளுர் மக்கள் நின்றார்கள். ஆனால் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் பெருமளவு அங்கு காணவில்லை. பள்ளிவாசல் கடைவீதி மற்றும் கோப்பி கடைகள் என எல்லாம்அருகருகே அமைந்துள்ளன.
ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.
எனது வலைப்பதிவுக்காக Night என்னும் தலைப்பிலெழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
தாய்ப்பறவை தனது
சிறகுகளைப் பரந்து
விரிக்கிறது.
கருமையின் சிறகுகள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான். இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.