கன்பராவில் கலை, இலக்கியச்சந்திப்பு

அவுஸ்திரேலியா  கன்பரா  மாநிலத்தில்  எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை   நடைபெறவுள்ள   கலை,  இலக்கியச்சந்திப்பில்  நூல்களின் அறிமுகம்,   கூத்து ஒளிப்படக்காட்சி  நிகழ்ச்சிகளுடன்  கலந்துரையாடலும்    இடம்பெறும்.  மெல்பன்,   சிட்னி,  …

Continue Reading →

பூநகரான் (பொன்னம்பலம் குகதாசன்) நினைவாக: நேற்றிருந்தார் இன்றில்லை.

‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு…

Continue Reading →

பதினேழாவது அரங்காடல் – 2015

17வது அரங்காடல் - 2015 -தேவகாந்தன்-   மனவெளி அரங்க அளிக்கைக் குழுவினரின் பதினேழாவது அரங்காடல் நிகழ்வு சித்திரை 17,2015இல் வழக்கம்போல் மார்க்கம் தியேட்டரில் நடந்து முடிந்திருக்கிறது. ஐந்து அளிக்கைகள்,சுமார் நான்கு மணிநேரத்தில்; பல்வேறு உணர்வுத் தெறிப்புகளை பார்வையாளரிடத்தில் பதித்துப் போயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும்பற்றிய விமர்சனமல்ல இக்கட்டுரை. ஒவ்வொரு அளிக்கையும் முடிவுற்ற கணத்தில் மனத்தில் எஞ்சிய உணர்வோட்டம் எது காரணமாய் ஏற்பட்டதென்ற நினைவோட்டத்தின் பதிவுமட்டுமே. மாலை 06.03க்கு தொடங்கிய இரண்டாம் காட்சியின் முதல் நிகழ்வு யாழினி ஜோதிலிங்கத்தின் ‘நீலம்’ என்பதாக இருந்தது. பிரதியின் சொல்லடர்த்தியும்,காட்சிப் படிமங்களும் காரணமாய்,முதல் அளிக்கையாக அது நிகழ்வில் அமர்த்தப்பட்ட ஒழுங்குக்காய் அமைப்பாளர்களுக்கான பார்வையாளனின் பாராட்டைக் கோரியிருந்தது. ஒரு களைப்புற்ற மனம் கனதியான பிரதியொன்றைத் தொடரும் சிரமம் இதனால் தவிர்க்கப்பட்டது. ஒரு இசை நாடகத்தின் பரிமாணத்தின் பல கூறுகளை இது தன்னகத்தே அடக்கியிருந்தது என்பது நிஜம். தீவிர அளிக்கையென்பது அதன் அசைவுகளால் மட்டுமல்ல,ஒலியும்,ஒளியுமாகிய தொழில்நுட்ப உத்திகளின்  உதவியுடன்,காட்சிப்படுத்தலின் இடையீடுறா நீட்சியின் அமைவையும் கொண்டதாய் நவீன அரங்க அளிக்கையின் அனுபவம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவமும்,முதிர்ச்சியும் பெற்றுவருவதன் அடையாளமாய் இருந்தது ‘நீலம்’.

Continue Reading →

‘பூநகரான்’ பொன்னம்பலம் குகதாசன் மறைவு!

பூநகரான் என்று கனடியத்தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட பொன்னம்பலம் குகதாசன் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினைச்சற்று முன்னர்தான் முகநூலின் மூலம் அறிந்துகொண்டேன். ‘பூநகரான்’ குகதாசனின் மறைவு பற்றிய…

Continue Reading →

பயணியின் பார்வையில் (03 & 04)

நிலத்துக்கும்  ஆகாயத்துக்குமிடையில்
அந்தரவெளியில் நீந்திவரும்
பறவைகளை   வரவேற்றுக்கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப்பறவை
எப்போது   வந்து   எங்கே  அமருமென்று…? –
  கருணாகரன்

முருகபூபதிஇந்தப்பத்தியை   எழுதும்  வேளையில்  சிங்கப்பூரின்  முன்னாள் பிரதமர்   லீ குவான் யூ  மறைந்த  செய்தி  வருகிறது.    அவருக்கு அஞ்சலி  செலுத்திக்கொண்டு  இந்தப்பத்தியை    தொடருகின்றேன். சிங்கப்பூருக்கு    சென்றதும்  மைத்துனர்  விக்னேஸ்வரன்  தனது நண்பர்களுக்கு   எனது  வருகை    பற்றி  அறிவித்தார்.   எமது  இலங்கை    மாணவர்  கல்வி    நிதியம்  தொடர்பான  தகவல்  அமர்வு கலந்துரையாடலுக்காக    அவர்  ஒரு  சந்திப்பை ஒழுங்குசெய்திருந்தார்.

பொதுவாகவே  இலங்கையில்  நீடித்த  போரும் –  இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு  நேர்ந்த  அழிவுகளும்  தொடர்பாக  மலேசியா,  சிங்கப்பூர் தமிழ்   மக்களிடம்  ஆழ்ந்த  கவலை    இருந்தது.   இம்மக்களில் இலங்கைத்தமிழர்களும்    இடம்பெற்றாலும்,   மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும்    இடையில்  தமிழ்  மக்கள்  தமது  உணர்வுகளை வெளிப்படுத்துவதில்    நிரம்ப  வேறுபாடும்   நீடிக்கிறது. மலேசியாவில்   வதியும்  இந்திய  வம்சாவளியினர்  குறித்த உரிமைப்போராட்டம்    நாம்  நன்கு  அறிந்ததே.   ஆனால்,  சிங்கப்பூரில் அந்த   நிலைமை    இல்லை.    தமிழ்,  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் மொழிகளுக்கு    அரச  அங்கீகாரம்  வழங்கியவாறு   சிங்கப்பூர்   அரசு இயங்குகிறது. சிங்கப்பூரில்    நின்றவேளையில்  தைப்பூசத்திருவிழா    வெகு கோலாகலமாக    நடந்தது.  அரசின்  அமைச்சர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்ததை    தொலைக்காட்சியில்  பார்த்தேன்.    மக்களின் பக்திப்பரவசம்    கரைபுரண்டு    ஓடியது. பக்தர்கள்    வேல்  குத்தி  ஆடியவாறு  தமது  ஆழ்ந்த  நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்கள்.    வருடாந்தம்  நடக்கும்  தைப்பூசத்திருவிழா அங்கு    தொடர்ந்து  கோலாகலமாகவே   கொண்டாடப்படுகிறது. ஆனால்,   சிங்கப்பூரில்  பறவைக்காவடி  தடை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தேன்.    மனிதன்  தன்னைத்தானே    வருத்துவதை    நகரீக  உலகம்    ஏற்றுக்கொள்ளாது .  ஆனால் –  காலம்    காலமாக  நீடிக்கும் மத  நம்பிக்கையை    தடுப்பதற்கு  சில  நாடுகளின்    அரசுகள் முன்வருவதற்கு   தயக்கம்  காட்டுகின்றன.

Continue Reading →

பயணியின் பார்வையில் (2)

முருகபூபதி1990   இல்   இலக்கியவாதிகளைத்தேடியது  போன்று  25  வருடங்களின் பின்னர்   நான்  தேடவில்லை.   ஆர்வமும்  இல்லை.   சோவியத்தில் மாற்றம்  – சிங்கப்பூரில்  மாற்றம் –  கியூபாவில்  மாற்றம்.   இப்படி உலகமே   மாறிக்கொண்டு  இணைய  யுகத்தில்  வாழும்பொழுது மனிதர்களும்    மாறிவிடுவார்கள்தானே….?

அண்மையில்  சிங்கப்பூருக்குச்  சென்று   நின்ற  இரண்டு  நாட்களுக்குள்    என்னால்  சந்திக்க  முடிந்தவர்கள்  சிலர்தான். குறிப்பாக    கண்ணபிரான்,   கனகலதா,   புஸ்பலதா  நாயுடு.   ஏனோ இவர்களை  தவிர்க்கமுடியவில்லை.   சிங்கப்பூர்  செல்லும் சந்தர்ப்பங்களில்    இவர்களை   எப்படியும்  நேரம்  ஒதுக்கி சந்தித்துவிடுவேன்.

( இந்தப்பயணத்தில்  சிங்கப்பூர்   தேசிய  பல்கலைக்கழக  மானுடவியல்    பேராசிரியரான  அமெரிக்காவைச்சேர்ந்த  பேனார்ட் பேட் , அதே  பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாற்றும்     சித்தார்த்தன்  ( பேராசிரியர்கள்  மௌனகுரு – சித்திரலேகா தம்பதியரின் மகன்)   ஆகியோரை    பின்னர்  மட்டக்களப்பில்  22-02-2015  ஆம்  திகதி மகுடம்  கலை   இலக்கிய  வட்டம்  நடத்திய  சந்திப்பில்  சந்தித்தேன். இது  எதிர்பாராத  சந்திப்பு)  மைத்துனர்  விக்னேஸ்வரன் சிங்கப்பூரில் எனக்கு  எல்லா வசதியும்    செய்துகொடுப்பவர்.

தமிழ்த்தேசியத்திலும்   கவியரசு  கண்ணதாசனிடத்திலும்  தீவிர பற்றுக்கொண்டவர்.    எனக்கு  கண்ணதாசன்  குடும்பத்தினருடனும் ஓவியர்  மணியன்  செல்வனுடனும்    நட்புறவை   உருவாக்கியவர். ( எனது   கங்கை மகள்  சிறுகதைத்தொகுதியில்    ஓவியர்  மணியன் செல்வனின்    ஓவியமே  முகப்பாகியது.) 

Continue Reading →

இணையத்தள அறிமுகம்: பிரதிலிபி

இணையத்தள அறிமுகம்: பிரதிலிபி பிரதிலிபி என்றொரு இணையதளம் இந்திய மொழிகள் பலவற்றில் மின்நூலகளைத் தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இது எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களைத் தாங்களே மின்னூலாகப்… பதிப்பிக்க உதவும் தளம். என்னுடைய ஆங்கில நூலை நானே அமேசான் தளத்தில் பதிப்பித்த போது தமிழ்நூலகளையும் பதிப்பிக்க எண்ணினேன். ஆனால் அமேசான் தமிழுக்கு இடமளிப்பதில்லை

தமிழில் மின்னூல் பதிப்பிக்க வாய்ப்பளிக்கும் இணையதளங்கள் பலவற்றை ஆராய்ந்து பிரதிலிபியைத் தேர்ந்தெடுத்தேன். சுயமாகப் பதிப்பித்துக் கொள்ள உதவும் தளம் என்ற போதிலும் என்னுடைய முதல் நூலான ‘தப்புக்கணக்கு’ மற்றும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களே மின்னூலாக உருவாக்கித் தந்தார்கள்.

நீங்களும் கூட உங்கள் படைப்புக்களை மின்னூலாக அங்கு வெளியிடலாம். தொடர்புக்கு: sankar@pratilipi.com 

Continue Reading →

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய ‘யாழ்ப்பாணச்சரித்திரம்’ பற்றியதொரு பார்வை!

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் பற்றியதொரு பார்வை! இலங்கைத்தீவின் இனமுரன்பாடுகளிடையே தோன்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக உக்கிரங் கொண்டு தொடர்ந்த  யுத்தமானது, முடிவில் பாரிய இழப்புக்களையும் அழிவுகளையும் மாறாத வடுக்களையும் அனைத்து சமூகங்களிடையேயும் விட்டுச்சென்றுள்ளது.  இந்த இனமுரண்பாடுகளுக்கு முக்கியமாக சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் காரணங்களாக   இருந்துள்ள போதிலும் சமூகங்களுக்குள் இருந்துள்ள தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களும்  அவை மக்களிடையே ஏற்படுத்தியிருந்த சிந்தனை முறைமைகளுமே பிரதான பங்குகளை வகித்துள்ளன.  சிங்கள மக்களிடையே இருந்த பொய்மையான மகாவம்ச சிந்தனைகளும் தமிழ் மக்களிடையே உணர்வுற்று இருந்த கங்கை கொண்ட கடாரம் வென்ற கருத்தாக்கங்களும் முஸ்லிம் மக்களிடையே கருக்கொண்டுள்ள  ஆதித்தந்தை ஆதாம் பதித்த கால்தடங்கள் போன்ற கற்பனைச் சித்திரங்களும் இனமுரண்பாட்டின் தீவிரத்தன்மையை வலிமைப்படுத்துபவையாக இருகின்றன.  இந்த ஆண்ட பரம்பரைக் கோஷங்களில் இருந்து அனைத்து சமூகங்களும் விடுபட வேண்டிய தேவையை உணர வேண்டும். இது நடை பெரும் சந்தர்ப்பத்திலும் இனமுரண்பாடுகளை உருவாக்கும் வலுவான அத்திவாரங்கள் தகர்க்கப்படும் என்பதில் பலரும்  திடமான நம்பிக்கையை வைத்துள்ளனர். இப் புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பொய்மைகளும் தவறுகளும் நிறைந்த பழய வரலாற்று ஆவணங்கள் மீளாய்வு செய்யப்படுவதும், சரியானதும்  உண்மைகள் நிரம்பியதுமான தகவல்கள் நல்ல  முறையில் மக்களிடையே கொண்டுசெல்லப்பட வேண்டியதும் இன்று அனைவரிடையேயும் உள்ள  முக்கியமான  பணிகளாகும்.  இது குறித்த நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டியது  அறிவு ஜீவிகளினதும் துறைசார் வல்லுனர்களினதும் கடமையாகும்.

இவ்வகையில் தமிழ்  சமூகங்களை சேர்ந்த நாமும் எமது வரலாற்று ஆவணங்களை மீளாய்வு செய்ய வேண்டிய  ஒரு கடமைப்பாட்டிலும், காலகட்டத்திலும்  உள்ளோம் என்பதினை இங்கு குறிப்பிட வேண்டும். இதில் நாம் ஏற்கனவே பதிக்கப்பட்ட பல புத்தகங்களை பார்வையிட்ட போதும் அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய “யாழ்ப்பாணச்சரித்திரம்” என்ற நூல்  மிக முக்கியமானதும் அதிக வரலாற்றுத் தகவல்கள் நிறைந்ததாகவும் மீண்டும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும்  உட்படுத்தப் பட வேண்டியதாகவும் எம்மால் கருதப்படுகின்றது. 1912 இல் தனது முதற்பதிப்பினையும் 1915 இல் தனது இரண்டாவது பதிப்பினையும் கண்ட இந்நூலானது 2001 இல் ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் இனரால் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நூறு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இது தரும் தகவல்கள் இன்றும் எமக்கு அவசியமானதாகவும் தேவையானதுமாகத் தெரிகின்ற அதே வேளை, சமூகத்தில் உள்ள பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இதிலிருந்து பல தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் எமது எண்ணமும் கருத்துமாகும்.

Continue Reading →