என்னவெல்லாமோ செய்யலாமே! உரியவர்கள் உறங்கிக்கிடக்கின்றனர் என எண்ணி உங்கள் கனவுகளைப் பூட்டி வைத்துள்ளீர்களா? அவற்றை நனவாக்க ஒரு நல் வாய்ப்பு! உங்கள் கருத்தைச் செவிமடுத்துச் செயற்படுத்த ஓர் அலுவலர் வந்துவிட்டார்! பின்னுள்ள அழைப்பின்படி நீங்கள் நேரில் பங்கேற்கலாம்! கணிணிவழி உரையாடிக் கருத்தைத் தெரிவிக்கலாம்! மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம்! உங்களைப்போன்ற ஆர்வமுள்ள நண்பர்கள் கருத்துகளையும் தெரிவிக்கச் செய்யுங்கள். எல்லாம் ஒன்று சேரும் பொழுது இணையத் தமிழுக்கு விடிவு பிறக்கும்.
தவறாதீர்! மறவாதீர்! பதிவதற்கும் கருத்தைத் தெரிவிப்பதற்கும்!
அழைப்பவர்:த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,நிதித்துறை செயலர் (செலவினம்) இயக்குநர் (பொ), தமிழ் இணையக் கல்விக்கழகம்,சென்னை, தமிழ்நாடு.
அழைக்கப்படுநர் : கணித்தமிழ் ஆர்வலர் ஒவ்வொருவரும்
அன்புடையீர், வணக்கம். உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.