தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?  17 ஜூலை 2015 –  பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

அறிமுகம்
பாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் – பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?

தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 103: முகநூல் குறிப்புகள் சில.

   ‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கத்தின் மாதாந்தக் கலைந்துரையாடல்: கணினித்தமிழ் ‘வரலாறும் வளர்ச்சியும்’.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இவ்விதமானதொரு நிகழ்வை நடாத்தியதற்காக எழுத்தாளர் அகில், வைத்திய கலாநிதி லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் மற்றும் இவர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுபவர்கள் அனைவரும பாராட்டுக்குரியவர்கள்.  இச்சங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதிச்சனிக்கிழமை அன்று இது போன்று கலை, இலக்கிய மற்றும் அறிவியல் நிகழ்வொன்றினை நடத்துவது வழக்கம்.

இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருவதாகவிருந்த ஐந்து பேச்சாளர்களில் மூவரே வந்திருந்தனர். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளையில் ஆரம்ப உரையினைத்தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம பேச்சாளரான திரு.குயின்றஸ் துரைசிங்கம் ‘கணினித்த்மிழின் வளர்ச்சி,  குறிமுறை, தகுதரம், ஒருங்குறி இன்னும் இன்னோரன்ன’ என்னும் தலைப்பில் நீண்டதொரு உரையினை ஆற்றினார். கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துகள் பற்றிய சிக்கல்கள் பற்றியதாகவே அவரது உரை பெரும்பாலுமிருந்தது. ஒருங்குறி எழுத்துரு வந்துவிட்ட இந்நிலையிலும் கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துருக்கான முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. ஒருங்குறி ஓர் ஆரம்பமே என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. ‘தமிங்கிலிஸ்’ பாவித்துக் கணினியில் தட்டச்சு செய்வதைப்பற்றியும் அவரது உரை விமர்சனப்பார்வையுடன் அமைந்திருந்தது. அவர் transliteration என்பதைத்தான் ‘தமிங்கிலிஸ்’ என்று கூறிவிட்டாரென்று நினைக்கின்றேன்.   ‘ட்ரான்ஸ்லிடெரேஷன்’ என்பது ஆங்கில எழுத்துகளைப்பாவித்துத் தமிழை அல்லது ஒரு மொழி எழுத்துக்களைப்பாவித்து இன்னுமொரு மொழியினை எழுதுவதாகும். ஆனால் ‘தமிழிங்கிலிஸ்’ ஆங்கிலத்தைத்தமிழில் பேசுவதைக்குறிக்கும். இவரது பயனுள்ள நீண்ட உரையானது கணினியில் பாவிக்கப்படும் எழுத்துருகள், அவை ஏற்படுத்தும் சிரமங்கள், அவை பற்றிய ஆய்வுகள் பற்றியதாகவே அமைந்திருந்தது.

Continue Reading →

அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!

– உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். –

- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும்  தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும்  எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம்  அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும்   வலுப்படுத்த   முடியும்.
       
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த  சனாதிபதி தேர்தல்  இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.  வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள்.  அந்தத் தேர்தல் முடிவு,  எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல  மாற்றங்களைக்  கொண்டுவந்தது.  முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான  இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம்  பேச்சுச் சுதந்திரம் மற்றும்  சட்டத்தின்  ஆட்சி மற்றும்  சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு  உலக நாடுகளால்  வரவேற்கப்பட்டன.  எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள்  மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது  பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள்  தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

Continue Reading →