அஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்

- ஹெச். ஜி. ரசூல் -– எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமான தகவலினை முகநூலில் கவிஞர் மேமன்கவி அறிவித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்வதுடன் , எமது அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் ‘பதிவுகள்’ இதழில் அன்று அவர் எழுதிய கட்டுரையொன்றினையும் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம். – பதிவுகள் –

அஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்! – மேமன்கவி –

தமிழகச் சூழலில் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கி கொண்டிருந்த நண்பர் எச். ஜி. ரசூல் அவர்கள் காலமான செய்தியினை லறீனா ஹக் அவரகளின் பதிவு வழியாக அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்த்து. இறுதி வரை அவரை சந்திக்க முடியாமல் போனது மனசை வாட்டுகிறது். அவரை சந்திக்க முடியாவிடினும் 80 கள் தொடக்கம் என் படைப்புகளை பற்றிய பார்வைகளை தன் நூல்களிலும் , கட்டுரைகளிலும் பதித்து போனவர். அவரை பற்றி சிறு பந்தியில சொல்லிவிட முடியாது் அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஈழத்து படைப்பாளிகள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். தமிழக முஸ்லிம் சமூகச் சூழலில் முற்போக்கு இயக்கம், நவீனத்துவம்,பின்காலனியம், பெண்ணியம், தலித்தியம், என பல்வேறு சிந்தனைத் தளங்களில் நின்று யோசித்தவர். இயங்கியவர் அவர்.


‘பதிவுக’ளில் அன்று: இஸ்லாமிய நவீனப் பெண்ணியம் – – ஹெச். ஜி. ரசூல் –

) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 259: அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘வில்லூன்றி மயானம்’

மல்லிகை ஆண்டு மலர் 1967அறிஞர் அ.ந.கந்தசாமிநூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது ‘மல்லிகை’ சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘வில்லூன்றி மயானம்‘ என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட ‘வில்லூன்றி மயானப்படுகொலை’ பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி ‘தினகரன்’ தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை ‘வில்லூன்றி மயானம்’ மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:  ” வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த ஆக்க எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானோ அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும், அச்சுவேலியையும், சங்கானையையும் கண்டு விட்டேன். அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறு சம்பவம்.ஆனால் என்னைப்பொறுத்த வரையில் வில்லூன்றித் தீபபொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அப்போதே நான் நம்பினேன். அது வீண் போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே – மரணத்தில் கூட எமக்குச் சமத்துவமில்லை என்ற அந்த எண்ணமே – நாளடைவில் யாழ்ப்பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்கு வித்திட்டது. அதனால் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சியாக யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

Continue Reading →

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!– எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் எழுத்தாளர் ஏ.இக்பாலின் மறைவு பற்றி முகநூலில் அறியத்தந்திருந்தார். அவரது செய்தியினைப் பகிர்ந்துகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். – பதிவுகள் –

இக்பால், ஏ. (1938.02.11) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Continue Reading →

இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு

நிகழ்வுகள் கன்டு களிப்போமா?அன்புடையீர் வணக்கம் .  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின்  அழைப்பிதழை இணைத்துள்ளேன் .   உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க   வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும்,  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு –  இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  – செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற  நிகழ்வுக்கு,  தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ,  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் ,  சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : ‘திருக்குறள்’ இரா. எல்லப்பன்  அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள்.  உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க   வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்.

Continue Reading →