எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன் எச்சரிக்கை சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக போய்க் கொண்டிருந்த எம தர்மன் “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.
அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.
மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ ‘ஹாக்’ செய்துவிட்டார்கள்! ”
“’ஹாக்’ ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்
“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”
“அப்படியா! எந்த கணக்கு !! ” என அதிர்ந்துக் கேட்டார்.
“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”
“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே ஒவ்வொரு மானிடருக்குமான மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”
“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு ‘பேக்-அப்’ எடுக்கவில்லையாம் ..ஆகையால் ‘ரி-கவர்’ செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”
“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”
உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.