torontotamilsangam@gmail.com
இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை. இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் தொலைக்காட்சி இருக்கவில்லை. இலங்கை வானொலியின் தேசிய சேவையும், வர்த்தகசேவையும் இலங்கையில் மூவின மக்களையும் பெரிதும் கவர்ந்திருந்த ஊடகமாகத்திகழ்ந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டினரும் விரும்பிக்கேட்ட நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில்தான் ஒலிபரப்பாகின. நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் ஒரு திரைப்படத்தில் இலங்கைவானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் பற்றிப்பேசுவார். அந்தளவுக்கு தமிழகத்து நேயர்களையும் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் எனது குரலும் ஒலிக்காதா…? என்று ஏங்கியிருந்த காலம் ஒன்றிருந்தது.
எமது ஊருக்கு, கலைஞர் ‘சானா’ சண்முகநாதன் தமது குழுவினருடன் வந்து, குதூகலம், மத்தாப்பு முதலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பும்போது நான் மாணவன். அந்த நிகழ்ச்சி எங்கள் பாடசாலையில் 1962 ஆம் ஆண்டில் நடந்தது. பின்னாளில் எங்கள் பாடசாலை அதிபர், வித்துவான் இ.சி சோதிநாதன், ஆசிரியை திலகா தில்லைநாதன் ஆகியோர் வானொலி நாடகங்களில் பங்குபற்றும் கலைஞர்களாக இருந்தும், ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியில்கூட பங்குபற்றுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. எனினும் எனக்கும் இலக்கிய முகம் வந்தபின்னர், வி.என். மதியழகன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரின் தொடர்பினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்திருந்த இலங்கை வானொலி நிலையத்தின் படிக்கட்டுகளில் எனது கால் பதிந்தது.
சங்க இலக்கியத்தின் புறவாயிலாகக் கருதத்தக்கப் புறநானூற்றில் வேடன், வீரன், வேந்தன், சிற்றரசன் என நான்கு வகையான சமூக அடுக்குகள் காணப்படுகின்றன. ஒரே காலத்தில் இந்த நான்கு வகை சமூக அமைப்புகளும் நிலைநிறத்தப்பட்டுள்ளது. மேலும் இப்புறப்பாடல்களில் வேந்தர்களிலிருந்து விறலி வரை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். தொல் புறத்திணையான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி, என இவ் ஏழினுள் உழிஞை திணை புறநானூற்றுப் பாடல்களில் எங்குமே இடம்பெறவில்லை.
மேலும் இப்புறப்பொருளை மையமிட்டு பாடப்பட்ட நூல்களாகப் பதிற்றுப்பத்து, புறநானூறு என இரு நூல்கள் தனித்து இயங்குகின்றன. இதில் பதிற்றுப்பத்து சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் எடுத்தியம்புகின்றது. ஆனால் புறநானூறு வேட்டையாடி சேகரித்து பங்கிட்டு வாழ்ந்த இனக்குழுச் சமூகம், அதற்கு மாறாக நாகரிக வளர்ச்சியின் உச்சநிலையில் அதிகாரம் செலுத்திய மூவேந்தர்களின் சமூகம், அம்மூவேந்தர்களுக்கு போர் புரிதற் பொருட்டு உதவிய வீரயுகச் சமூகம், இனக்குழுச் சமூகத்தின் வாழ்வியலையும் மூவேந்தர்களின் நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கே பெற்று ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்ட குறுநிலமன்னர்கள் எனத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்தப் பல சமூக மக்களை அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம் புறநானூறு தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.
ஒரு சமூகம் அமைப்பு என்பது முறைப்படுத்தப்பட்ட சமூக குழுக்கள், சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் ஒழுக்கம் பிற நடத்தைகள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி அதில் மக்களை இணைக்கும்போது உண்டாகும் சமூகக் குழு அல்லது சமுதாய அமைப்பு குழுக்களை நடத்தை, பண்புகள் மூலம் ஒன்றிணைத்து அவற்றிடையே உள்ள முரண்பாடுகளை களைதல் இதன் நோக்கமாகும். அல்லது அமைப்பின் இயக்களை ஆராய்வது. (சமூகவியல் பக் : 162 – 163) இதனடிப்படையில் எந்த ஒரு சமூக அமைப்பும் தன் வாழ்வியலை விழுமியம் சார்ந்த பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் பண்பாடு என்பது மனித வாழ்வியலோடு கட்டமைக்கப்பட்டது. இது தனிமனித வாழ்விலும், மற்றவர்களோடு பழகுவதிலும் தனித்தன்மையுடன் மனிதனை உயர்த்தும் தன்மையுடையது.
இதில் மானிடவியல் நோக்கில் புறம் சார்ந்த நானூறு பாடல்களில் பத்துப் பாடல்களை மட்டும் ஆய்வுக்களமாகக் கொண்டு இனக்குழுத் தலைவன், வேந்தரை மட்டும் மையப்படுத்திச் தமிழ்ச் சமூகம் சார்ந்த இனவாழ்விலை நாகரிகம், பண்பாடு என இருபொருண்மை வழிநின்று அச்சமூகத்தின் வாழ்வியலின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைக்கிறது.
முன்னுரை
29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84 ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும் அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,
நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே (பாயிரம்)
1. உட்குறிப்புகள்
அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.
இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்
பிடிபட்டுவிட்டது போதிமரம்.
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!
அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள். அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம். அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும். இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அவனை அவள் மாற்றப் போகின்றாள். அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள். அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள். அவனையும் பேச வைக்கப் போகின்றாள். கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக , அவனை உருமாற்றிடப் போகின்றாள். இதற்கு ஒரு வழி …. அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள். இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.
‘ஹாய்…’ என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.
‘வட் அ பியூட்டிபுஃல் டே’ என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள். அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.
அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் …
‘தோர்ன்கிளிவ் பார்க்’… ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி. அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான். அவனது மாமா மகனின் ‘அபார்ட்மென்ட்’.
தனிமையான பொழுதுகளைத் துருவித் துருவி ஆராய்ந்து , புரியாத காரணங்களுக்கு அர்த்தங்களைத் தேடுவதில் தாகமெடுத்துக் கிடக்கும் மனதின் அலைச்சலில் கழிந்து கொண்டிருந்தன பொழுதுகள் ….
கடைசியாகச் செய்துகொண்டிருந்த தொழிற்சாலை வேலை ‘லெய்ட் ஓஃப்’ ஆனதிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக ‘அனெம்பிளாய்மென்ட்’டில் ஓடிக்கொன்டிருந்தது வாழ்க்கை. கடந்த நான்கு மாதங்களாக மாலை நேரங்களில் அந்தப் ‘பார்க்கி’லேயே பெரும்பாலும் அவனது பொழுது போய்க்கொண்டிருந்தது. மாமா மகன் ‘போஸ்ட் ஆபிஸ்’இல் வேலை செய்து கொண்டிருந்தான். விரைவில் அவனும் திருமணம் செய்யவிருக்கிறான். அதற்குப் பிறகு வேறிடம் பார்க்க வேண்டியதுதான்.
பார்க்கில் நன்கு இருண்டு விட்டதும் அப்படியே படுத்துக் கிடப்பான். விரிந்திருக்கும் ஆகாயத்தில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, உருமாறிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பான். பார்க்கில் நடமாட்டம் குறைந்து அமைதி பூரணமாகக் குடிகொன்டிருக்கும்போதும் அவன் படுத்திருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான். இடைக்கிடை ‘பட்ரோலி’ற்காக வரும் பொலிஸ்காரும் சற்றுத் தொலைவில் நோட்டம் விட்டுச் செல்லும்.