இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன. இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான் நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும். அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.
நடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது. ஈழத்து இலக்கிய உலகில் சிவனு மனோஹரன், 1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ‘ ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்’ – ‘கோடங்கி’ ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர். ” மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த… எழுதுவதற்கு அக்கறைப்படாத… சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்.” என்று மு. சிவலிங்கமும் – ” அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று சுதர்ம மகாராஜனும்-, ” சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன.” என்று ‘ஞானம்’ ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை முன்வைக்கின்றனர்.
சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு – ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன் ஆகிய ஆவணப்படங்களை தயாரித்தவரும், சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சிக்காக குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கித் தயாரித்தவருமான எழுத்தாளர் ‘கனடா’ மூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். ‘கனடா’ மூர்த்தி அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 06-01-2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில்
Clayton Community Centre Library Meeting Room மண்டபத்தில் (9-15, Cooke Street , Clayton, Victoria – 3168 ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
மின்னஞ்சல்: atlas25012016@gmail.com
இணையத்தளம்: www.atlasonline.org
A 25 page slim volume of 24 poems published by Mathusooothanan Jeyakrishnan and A L Aazath printed at A J Printers Station Road, Dehiwela is prized at Rs, 250/- The author is a senior lecturer attached to the Department of English Language teaching of the University of Colombo. As the title says she writes about the poems of soil. What soil is that? Obviously, as the Foreword writer says- “Balayogini’s poems will be read with great interest as the outside world is gaining access to North Sri Lanka after the recent cessation of war. The environmental ruins and human toll will probably give people an idea of the experiences in this land.”
Lanka born American professor Suresh Canagarajah in his Foreword also adds: “However, Balayogini’s poems give voice to her own and other peoples’ feelings and thoughts of that time”
In an appreciative analysis Canagarajah aptly points out the strength of the poet in her observations and feelings and most importantly her experiment with the craft of poetry writing. The poet has an M Phil. In Linguistics.
It’s worth quoting Prof Suresh Canagarajah again: “She provides a sensitive window into the hearts and minds of people who went through violence, poverty, bereavement, and uncertainty in their lives… orphaned children, confused child soldiers, moribund scholars, apathetic students, despondent refugees, and perfunctory political bureaucrats.“
Canagarajah also observes that “She represents experiences of love, sex, family, and friendship that transcend politics and gain poignancy being set in the painful political environment.”
What about the poet’s craft? “She is sensitive to rhythm, imagery, spacing, rhyme, and word choice as she talks about her experience” says Suresh Canagarajah. Having assimilated what Suresh has said above, let me give my comments with illustrations from Balayogini’s poems. She beautifully alludes rhythm of music to the touch of her beloved in this poem