– புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ‘ சித்தார்த்த சேகுவேரா’, ‘பெயரிலி’, ‘திண்ணைதூங்கி’யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது ‘அலைஞனின் அலைகள்: கூழ்’ என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. – பதிவுகள் –
Monday, April 11, 2005
தன்கா – I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை, 25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11
*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).
ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை – கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)
1.
the cold walk,
silence
between us
the creek running
under ice
கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்
2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor
புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்
Continue Reading →