மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்குகின்றது கூவமான திருவிற்கோலம்.
திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள் 3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.
கல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர்
1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா
2. ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)
3. ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி
4. ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ
5. ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்
6. தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்
7. சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ
8. யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத
9. மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா
10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், – – – -கணபதி ப
11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை
12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து
13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்
14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்
15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்
16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன்