கவிதை: காலமும். கோலமும்..

- முனைவர் இரா. இராமகுமார் -

“காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா….
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா…..”

Continue Reading →

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

Continue Reading →

(ஆய்வு) புறநானூற்றில் மனிதவளம் மேம்பாடு

  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2

என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.

மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின்  திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே  மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.

Continue Reading →

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ

– புரட்சிகரமான எழுத்தால் புதுவித உத்திகளைக் கையாண்டு தமிழ் எழுத்து உலகில் தனக்கென ஒரு இடத்தினை பெற்று நின்ற ஈழத்து எழுத்துலகச் சிற்பி  எஸ்.பொ அவர்களின் நினைவு தினமான இன்று (நவம்பர் 26)  அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. –

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ     - எம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா , முன்னாள் கல்வி இயக்குநர் -எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள். ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார். இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது. ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார். எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார். எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம். பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார். படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது. இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது. ” தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார். காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம். வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை. முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

Continue Reading →