தமிழ் ஸ்டுடியோ.காம்: கான்ஸ் விருது பெற்ற தீபன் – திரையிடல் & கலந்துரையாடல்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!25-12-2016, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை: ரூபாய் 50/-
சிறப்பு அழைப்பாளர்: எழுத்தாளர் & நடிகர் ஷோபா சக்தி

நண்பர்களே கான்ஸ் விழாவில் விருது பெற்ற தீபன் திரைப்படம் முதன்முறையாக சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. கடந்த சென்னை திரைப்பட விழாவில் கூட இந்த படம் திரையிடப்படவில்லை. முதல்முறையாக சென்னையில் திரையிடப்பட்டு, அதில் நடித்த எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. நண்பர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்று வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரங்க வாடகைக்காக ஐம்பது ரூபாய் நன்கொடை நிர்ணயித்துள்ளோம். நன்கொடையை வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தக அங்காடியில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு ஞாயிறு நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். 9566266036, 044 42164630

தமிழ் ஸ்டுடியோ.காம்: கான்ஸ் விருது பெற்ற தீபன் - திரையிடல் & கலந்துரையாடல்

அன்புடன் ,
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.co | thamizhstudio@gmail.com