அகநானூற்றுப்பாடல்களில்; முல்லைத்திணை மரங்களும் மலர்களும்!

சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -முன்னுரை
சங்க இலக்கியநூல்களின் மூலம் தமிழர்கள் வாழ்வியல் சு10ழலைப் பற்றிய செய்திகள் புலவர்களின் பாடலடிகளில் காணமுடிகிறது. மரங்களும், மலர்களும் அதன் தன்மையை பல புலவர்கள் தம் பாடலடியின் வழியாக ஆராய்ந்து எடுத்தாளப்பட்டதையும், புலவர்கள் தம் பாடலடிகளின் மூலமாக தலைவன் தலைவியின்  வாழ்வியலைத் தாவரங்களில் மீது செலுத்திய அறிவுதிறனைப்பற்றியும் அகநானூற்றுப்புலவர்கள்  முல்லைத்திணையின் வழியாக  இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

முல்லை மலர்களும் மரங்களும்
வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மைபெறுவது மரஇனமாகும். பொது மரஇனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையையுடைய உள்ளீட்டைக்கொண்டே வரையறுக்கப்படுகிறது. “ திண்மையான உள்ளீட்டை பதினைந்திலிருந்து இருபதடி உயரமேனும் வளர்வதுமாகிய தாவரம் மரம்” என்று தாவரவியலார் குறிப்பிடுகிறார்.

முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடா, காயா, குருந்து முதலியன  மரங்கள் மிகவும் உயரமற்ற குறுமரமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லைநிலத்தில் உள்ள மரங்களின் பூக்கள் தலைவனின் கார்கால வரவினை உணர்த்தும் கற்கால மரமாகவும், முல்லைநிலத்தில் காட்டின் அழகினைக் கூட்டுவதற்கும் ஆயர்கள் அம்மரத்தில் உள்ள செடிப்பூக்களைக்கொய்து தலையில் கூ10டிக்கொள்வதற்கும் பயன்பட்டுள்ளது. மேலும் மயிலினங்கள் கூடி ஆடக்கூடிய முல்லைநிலக்காடானது மரங்கள் அடர்ந்துக்காணப்படும் என்பதை,

மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் (அகம்.344:6)
என்ற தொடர் சுட்டுகிறது.

பிடவம்
பிடவம், முல்லைநிலத்தில் வரைக்கூடிய குறுமரம். அகநானூற்றுப்பாடல்களில் இதனைப் பிடா, பிடவு எனக் குறிப்பிடுகின்றனர். குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலக்காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மணத்தால் பெயர்பெற்ற மரங்களும் பிடவமரமும் ஒன்றாகும். இதனுடைய பூ வெண்மை நிறத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையதாகும். வினைவயிற்சென்ற தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்பருவத்தைத் தலைவிக்கு உணர்த்தும் மலராகவும். பாசறையில் இருக்கும் தலைவனுக்குக் கார்கால வரவை உணர்த்தித் தலைவியை நினைவூட்டும் அடையாளமாகவும் பிடவம் திகழ்கிறது. பிடவமலர் பற்றிய குறிப்பைத் தொல்காப்பியர் கூறுகையில், ‘யாமரக் கிளவியுமு பிடாவும் தளாவும் (தொல்.எழு:230)’ என்ற நூற்பா வழித்தந்துள்ளார்.

பிடவமரத்தை நாட்டார் வழக்கில் ‘புடன்’ என அழைப்பதாக பி.எல். சாமி குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியர் பிடவமரத்தை யாமரதோடு இணைத்துக்குறிப்பிட்டுள்ளார். பிடவமரம், யாமரத்தோடு சிறியதாகும். அகநானூற்றில் இது ‘குறும்புதல் பிடவு’ (அகம்.154:4) எனப்படுகிறது. பிடவினைப்புதலாகக் கருதவியலாது. ஏனெனில் அகநானூற்றில் ‘முடக்கால் பிடவு’ (அகம்.344:3) என்று கூறி இதன்மேல் மயில்கள் ஆடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு கருத்துக்களுக்கும் விளக்கம் கூறும் கோவை. இளஞ்சேரன், ‘குறும்புதல் பிடவு’ என்பதற்கு குறுமையாகத் தழையால் புதல்போலும் செறிந்துள்ள பிடவு எனப்பொருள் கொள்ளல் வேண்டும் எனக்குறிப்பிட்டு படவினை சிறிய மரமாகக்கொள்ள வேண்டும்’ எனச் சுட்டியுள்ளார்.

பிடவமரத்தின் தோற்றத்தினைக்கூறும் அகநானூற்றுப்பாடியப்புலவர் மதுரைமருதம் இளநாகனார்மரம் சிறியதாகவும் அடிப்பகுதி கருமையாகவும், அதன் பூக்கள் விரிந்த வெண்மை நிறத்திலும் கொத்தாக மாலைப்பொழுதில் குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலத்தில் மலரும் என்பதை,

சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் (அகம்.34:1-2)

என்ற பாடலில் பதிவு செய்துள்ளார்.

பிடவின் மலர்
பிடவ மரத்தின் பூவெண்மை நிறத்தில் நறுமணத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையது. கார்காலம் வந்ததும் கொத்தாக வெண்மை நிறத்தில் மலர்ந்த பிடவமலர்கள் நல்வினைப்போல் காட்சியளிப்பதாக,

………… நிலவெனத்
தொகுமுகை விரிந்த முக்காற் பிடவின் (அகம்.344:2-3)

என்று மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் குறிப்பிடுகிறார். கார்கால வரவை, பிடவமலர்கள் தலைவனுக்கு அறிவுறுத்தி பாறையில் இருக்கும். அவனுள் தலைவியின் நினைப்பை மீட்டுகின்றன. இதனை,

சுரும்பிமிர் பூதப் பிடவுத்தளை யவிழ
அரும்பொறி மஞ்ஞை யால ………. (அகம்.304:11-12)

என்று இடைக்காடனார் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முல்லை நிலச்சு10ழலில் வளரக்கூடிய பிடவமலர் மலரும் காலத்தில் காடு முழுவதும் மணம் பரப்பும் என்பதை,

வெண்பிடவு அவிழ்ந்து வீகமழ் புறவில் (அகம்.184:7)
காடே கம்மென றன்றே (அகம்.23:5)

எனும் தொடர்களின் மூலம் அறிய முடிகிறது. பிடவமலர் வரலாற்றுக்குறிப்புடைய மரமாகவும் காட்சியளிக்கிறது. பிடவமரத்தின் பெயரால் ‘பிடவூர்’ என்று அமைந்துள்ளது. இவ்வூரின தலைவன் நெடுங்கை வேண்மான் ஆவான். இதனை,

………………. தித்தன் உறந்தைக் குணாஅது
நெடுங்கை வேண்மா அருங்கடிப் பிடவூர் (புறம்.395:19-20)

என்று நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.

காயா – பூவைமரம்
பூவால் பெயர்பெற்ற மரங்களில் காயாமரமும் ஒன்றாகும். இப்பூவானது முல்லைநிலத்தின் செந்நிலப்பெருவழியிலும் சில நேரங்களில் குறிஞ்சியிலும் பூக்கும் இயல்புடையது. கார்காலத்தில் மலரும் இதன் பூக்கள் காலையில் மலர்ந்து இரவில் உதிரும் தன்மையுடையது. இதன் அரும்புமுனை கருமையாகவும் மலர்ந்தால் மயிற்கழுத்துப்போன்று பளபளக்கும் நிலநிறத்திலும் காணப்படும். மலர்கள் மெல்லியதாகவும், மணமுடையதாவும் காட்சியளிக்கும். அதனை காண்பவர்கள் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. தலைவன் நினைவில் வாழும் தலைவிக்கு கார்காலத்தொங்கி விட்டது என்பதை அறிவுறுத்துவதற்கு உரிய அடையாளமாக் காணப்படும் காயாமலர் அகநானூற்றுப்புலவர்களால் பாடப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் ‘பூலைநிலை’  என்ற துறை குறிக்கப்பட்டுள்ளது.

தாவா வழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொல்.பொரு:63-10)

இதற்கு உரைவகுத்த இளம்பூரணர், ‘பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல் நாடெல்லை காடாதலின் அக்காட்டினைச்செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல் உன்னங்கண்டு கூறினார்போல இதுவும் ஒரு வழக்கு என்பார்.    

செவ்வரக்கினைப் போன்ற சிவந்த முல்லை நிலத்திற்குச்செல்லும் பெரிய வழியில் காலையில் பூத்த காயாவின் மலர்கள் மாலையில் வாடிப்பரவிக் கிடக்க அதில் தம்பலப்பூச்சிகள் பல ஒன்றாகச்சேர்ந்து வரிவரியாக ஊர்ந்து செல்வது, பவளத்தோடு நீலமணி ஒன்றாக இருப்பதைப்போல் காட்சியளிப்பதை,

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய (அகம்.14:1-4)

என்ற பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலைவனைப் பிரிந்ததால் மாலைப்பொழுதில் வாடும் தலைவி நிலையினைப் பாணனிடம் கூறும் தோழியானவள் முதல்நாள் பூத்தக்காயாமலர் மறுநாள் மாலை வாடிக்கிடப்பதுபோல் தலைவியும் வருத்தத்துடன் காணப்படுவதைக் குறிப்பிடுவதாக இப்பாடலடிகள் அமைந்துள்ளது.

கார்கால மழையால் மண்;ணரிக்கப்பெற்று வரிவரியாக மணலினையுடைய முல்லைநிலத்தில் நீலமணியுடன் கலந்த செம்பவளம் போல காயவின் வாடிய பூக்களுக்கிடையே தம்புலப்பூச்சி பல ஒன்றாக ஊர்ந்து சென்று ஈரம்பட்ட முல்லை நிலத்தை அழகு செய்த காட்சியை இடைக்காடனார்,

…………….. வரிமணல்
மணிமிடை பவளம் போல் அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்;புறம் வரிப்ப (அகம்.304:12-15)

எனக்குறிப்பிட்டுள்ளார். பாசறையில் இருக்கும் தலைவன் வினை முடிந்து மீண்டுவரும் செறிந்த மணல்மேடு அரிக்கப்பட்ட உவர்மண் மோதுவதுமாகிய முல்லைநிலத்து வழியில் காயாமலர் வாடிக்கிடப்பதைக் கண்டு மாலைபொழுது வந்துவிட்டதே தலைவி தன்னை நினைத்து வருந்துவாளோ என்றேண்ணி தன் தோப்;பாகனிடம் தேரினை விரைந்து செலுத்துமாறு அமைந்த மற்றொரு பாடலில் இடைக்காடனார் கூறுகையில்,

செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்த ஒளிப்பன மறைய (அகம்.374:11-14)

இதே போன்று கருத்தை அடிப்படையாகக்கொண்டு சீத்தலைச்சாத்தனார் மேகம் விடாமல் மழை பொழிதலால் காடு அழகு பெற்றது. நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையே சிவந்த புறத்திணையுடைய இந்திரகோப்பூச்சி ஏர்ந்து சென்றது. அவற்றிடையே முல்லையில் பல பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தக் காட்;சி சிறந்த ஓவியனால் வரையப்பெற்ற ஒவியம்போல் இருப்பதைக் கண்ட தலைவன் கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவி தன்னை நினைத்து வருந்துவாள் எனக்கூறி பாகனைத் தேரினை வரைந்து செலுத்தச் சொல்வதை.

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சு10ல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் நன்பல
முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவின் (அகம்.134:1-6)

என்ற பாடல் இதனை வெளிப்படுத்துகிறது.

குருந்தம்மரம்
குருந்தமரம் புனத்திலும், சுரத்திலும் பொழில்களிலும் வளரக்கூடிய ஒரு சிறுமரமாகும். குவிந்த இதழையுடைய இதன் பூக்கள் வெண்மை நிலத்தில் காணப்படும். இம்மரத்தினை குரா, குரவு, குருந்தம், குருந்து என்றும் அழைக்கலாம்.
குருந்து என்பது, ‘புனஎழுமிச்சை’ வகையைச் சார்ந்தது என்பதைப் பிங்கல நிகண்டு, ‘புனஎழுமிச்நை குருந்தெனப்புகலுவர்’ (பிங்.நி.2777) எனக்கூறுகிறது.

கார்காலத்தில் முல்லை மலருடன் தழைத்துக்காணக்கூடிய இம்மரத்தின் மீது மயில்கள்; ஏறி அகவி கார்கால வரவினைத்தலைவிக்கு உணர்த்துகின்றன. காட்டில் வாழும் மானினங்கள் நல்ல நிழலைத் தரக்கூடிய குருந்த மரத்தின் நிழலில் தன்துணையோடு தங்கி தலைவன் தலைவியைப் பிரியாது இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. குருந்தமரத்தின் மேல் குடுமியும், அழகிய தோகையும் உடைய மயில் தன் தோகையை விரித்தாடி தலைவிக்குக் கார்காலத்தை உணர்த்தும். இதனை,

குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுறக்
கொல்லை யுழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்
கார்மன் இதுவால்……….. (அகம்.194:11-16)

என்ற பாடலில் இடைக்காடானார் காட்சிப்படுத்தியுள்ளார். குருந்த மரத்தில் அமர்ந்து ஆடும் மயிலினைத்தினை கவரவரும் கிளியினை ஓட்டும் மகளிர் குருந்து மரத்தின் தீது அமர்ந்திருப்பதற்கு ஒப்பிட்டுள்ளார்.

செவ்வண்ணம் தீட்டியது போன்ற சிவந்த நிலத்தில் தேக்கி வைத்தது போன்ற தெளிந்த அறல்பட்ட நீரைக்குடித்த சிறிய குட்டியுடன் துள்ளிய நடையினையுடைய கலைமானோடு அசையும் கிளைகளையுடைய குருந்தமர நிழலில் தங்கியது. இத்தகைய முல்லை நிலச்சு10ழலில் தலைவியை பிரியேன் என்று கூறிவிட்டு இப்போது திரும்பி தலைவியை காணமுடியாத சு10ழலில் இருப்பதை இடைக்காடனார்,

செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
செறித்துநிறுத் தன்ன தௌ;ளறல் பருகிச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
வரந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய (அகம்.304:6-10)

என்ற பாடலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

முடிவுரை
அகநானூறு முல்லைத்திணைப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள தாவரங்கள் அனைத்தும் தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையை எடுத்துக்காட்ட சிறந்த குறியீடுகளாக அமைப்பு பாங்கினை புலவர்களின் பாடலடிகளில் அறியமுடிகிறது. முல்லை நிலத்தில் காணக்கூடிய கோட்டுப்பூக்கள், மிகவும் குறுகியதாகவும், பூக்கள் அழகு பெற்றும் காணக்கூடியன. பொதுவாக முல்லை நிலத்தில் பிடவம், கொன்றை, காயப் போன்ற குறுமரங்கள் காணப்படுகின்றன. மணத்தால் பெயர்பெற்ற கார்கால மலர்களில் பிடவமும், நிறத்தால் பெற்ற காயாமலர் காலையில் மலர்ந்து இரவில் உதிரும் முதலியன தன்மைகளில் தலைவன் தலைவியை காணக்கூடிய நிகழ்வினை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரையின் வழியாக ஆராய முற்பட்டுள்ளது.
நூற்பாட்டியல்
1. வேங்கடசாமி நாட்டாh.;ந.மு.            –  அகநானூறு வேங்கடாசலம் பிள்ளை.ரா, சைவசித்தாந்த நூற்பதிப்பக்கழகம்    ,சென்னை -18. ஆண்டு: 1944
2. சிவசுப்பிரமணியன்.வே.                 –  அகநானூறு ,   உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்,  சென்னை-90. ஆண்டு: 1990
3. இளம்பூரணர்                 –   தொல்காப்பியம்    கழக வெளியீடு  , சென்னை- 18. ஆண்டு: 1974
4. சாமி.பி.எல்.                     –   சங்கஇலக்கியத்தில்  செடி, கொடி விளக்கம்  ,கழக வெளியீடு,  சென்னை- 18. ஆண்டு: 1967
5. சீனிவாசன்                  –   சங்க இலக்கியத்தாவரங்கள்    தமிழ்ப்பல் கலைக்கழகம்,   தஞ்சாவூர். ஆண்டு: 1987
6. பிங்கல் முனிவர்                –   பிங்கல் நிண்டு,   மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,   சென்னை. ஆண்டு: 1995
7. ஒளவை துரைசாமிப் பிள்ளை        –   புறநானூறு ,  பூம்புகார் பதிப்பகம் ,  சென்னை.

palaicyuvan@gmail.com

* கட்டுரையாளர் – – சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. –