சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்

சுப்ரபாரதிமணியனின் “  முறிவு “ நாவல்  பெண்கள்  என்ற குழந்தை உழைப்பாளிகள் :
சுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில்  சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில்  இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி  என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி  வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்

Continue Reading →

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி, அமைப்பு, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயம்
பாத்திமுத்து சித்தீக் அவர்கள் இசுலாமியச் சமுதாயக் கோணல்களை நோகாது சாடியுள்ளார். பலதாரமுறை இசுலாத்தில் இருந்தாலும் கூட மனைவியை இழந்த ஒருவனுக்கு சிறுவயது பெண்ணைக் கட்டிக் கொடுப்பது அதுவும் தகப்பன் போன்றிருக்கும் ஒருவருக்கு கட்டிக் கொடுப்பது தவறானது என்பதை இடி மின்னல் மழை சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் மனைவி மும்தாஜை இழந்த நிலையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சபூரின் தாயார் வற்புறுத்தியும் திருமணமே வேண்டாம் என்றிருந்த சபூர் பலரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதம் சொன்னான். பக்கத்து வீட்டிலிருக்கும் அப்துல் கரீம் அவர்களுடைய மகள் ஆயிஷாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அப்துல் கரீம் விட்டுக்குச் சென்றான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 227 : அழியாத கோலங்கள் – வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்!

ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’

* ‘அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்’ இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *


ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'‘கல்கி’ சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் ‘முள்ளும் மலரும்’ நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’, மற்றும் ‘பி.வி.ஆர் எழுதிய ‘மணக்கோலம்’ ஆகிய நாவல்கள் பெற்றன.

‘முள்ளும் மலரும்’ நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், ‘கல்லுக்குள் ஈரம்’ நாவலுக்கு ஓவியர் வினுவும், ‘மணக்கோலம்’ நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.

என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் ‘முள்ளும் மலரும்’ நாவல் ‘பாசம்’ திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.

உமாசந்திரனின் ‘முள்ளும் மலரும்’ சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’ இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

Continue Reading →

முல்லை அமுதன் கவிதைகள்!

முல்லை அமுதன்

1.
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.

Continue Reading →

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

- பிச்சினிக்காடு இளங்கோ -

1. கவியெழுதி வடியும்

இலையிருளில் இருந்தவண்ணம்
எனையழைத்து ஒருபறவை பேசும்
இதயத்தின் கனத்தையெல்லாம்
இதமாகச் செவியறையில் பூசும்
குரலொலியில் மனவெளியைத்
தூண்டிலென ஆவலுடன் தூவும்
குரலினிமை குழலினிமை
கொஞ்சும்மொழித் தேனாக மேவும்

Continue Reading →

கவிதை: சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஒரு தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ

கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை

Continue Reading →

மெல்பன், ஆஸ்திரேலியா: “அசோகமித்திரனோடு ஒரு மாலைலைப்பொழுது”

1) அசோகமித்திரன் நினைவலைகள் உரை – முருகபூபதி 2) சிறுகதை வாசிப்பு – “பிரயாணம்”3) அசோகமித்திரனும் நாமும் – ஜேகே 4) அசோகமித்திரனும் நாமும் – கேதா…

Continue Reading →

அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

அசோகமித்திரன்சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை,  ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே  தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்‌ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…”  குழந்தையும் அவ்வாறே, ” ரி…க்…ஷா…” எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா” என்கிறது.  தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் “ரிஷ்க்கா” என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ” பரவாயில்லை, ஒரு  ரிஷ்க்காவில்  போய் எடுத்துவா…” என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, ” என்ன சொன்னீங்க…?” எனக்கேட்கிறாள். ” ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா” எனச்சொன்னேன். ” இல்லை… இல்லை… நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்…!!!” இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன்.  ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.

சிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம். அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். ரிக்‌ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த  உருவ – உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம். தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’ வழங்கிய ‘தமிழியல் விருது – 2011’, தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ‘ தமிழியல் விருது – 2014’, இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘ இரா. உதயணன் இலக்கிய விருது – 2016’ என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Continue Reading →