வாசிப்பும், யோசிப்பும் 232 : அமரர் வெங்கட் சாமிநாதன் – சில நினைவுகள்………..

அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் ‘பதிவுகள்’ இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் “மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் ‘நந்தலாலா’ ஜோதிக்குமார் (‘தேடல்’ நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்)  , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்)  மற்றும் ‘உயிர்நிழல்’ கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.

Continue Reading →

மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்

மாமேதை மாக்சின் 200ஆம் ஆண்டு துவக்கத்தை முன்வைத்து பாரதி புத்தகாலயம் மார்க்சி்ஸின் தேர்வு நூல்கள் (மொத்தம் 12) 3000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் ரூ.3000. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.1500க்கு…

Continue Reading →

மணிவிழாக் காணும் எழுத்தாளர் மேமன்கவி!

எழுத்தாளர் மேமன்கவிஎழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர்.  எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.… (https://ta.wikipedia.org/s/1j9)
மேமன்கவி (Memon Kavi, அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்

Continue Reading →

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ”ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து” வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும்

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ”ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து” வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

Continue Reading →

1. கணினியிற் தமிழ்வரைந்து ஏடு தொடக்கிய பேராசான் விஜயகுமார் நினைவுப் பகிர்வு

கலாநிதி எஸ். விஜயகுமார்அண்மையில் ‘டொராண்டோ’, கனடாவில் காலமான முனைவர் சின்னத்துரை விஜயகுமார் அவர்கள் கணினியில் தமிழ் எழுத்துகளை உருவாக்கிய முன்னோடிகளிலொருவர்.  இவரைபற்றிக் ‘கனடா மிரர்’ .காம் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது: “தமிழ் எழுத்தை கம்யூட்டருக்கு அறிமுகம் செய்து வைத்த கல்விமான் கலாநிதி எஸ். விஜயகுமார் 31-03-2017 கனடாவில் காலமானார். இந்தியாவில் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதல் கம்யூட்டரில் பயன்படுத்தப்பட்டது என பெருமை கொள்ள முடியும். அப்போது திரு. விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டது.. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கம்யூட்டருக்கு உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்கள். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பு. கம்யூட்டர் எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் திரு. விஜயகுமார் அவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்”

இவரைப் பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு தடவைகள் தயாளனின் ‘மைக்ரோடெக்’ கணினி நிறுவனத்தில் சந்தித்திருக்கின்றேன். உரையாடியுமிருக்கின்றேன். அப்பொழுது இவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டமென்று நினைக்கின்றேன். மைக்ரோடெக் நிறுவனத்தில் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பித்துக்கொண்டிருந்தார். பழகுவதற்கு இனியவர். பண்பு மிக்கவர். கணினியில் தமிழ் எழுத்துகளைப் பாவிப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

Continue Reading →

ஆய்வு: ‘தமிழ்த்தென்றல்’ நளினிதேவி:

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

Continue Reading →

கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்

கவிதை: 1. நான் 1 & நான் 2

1

கவிதை படிப்போமா?நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்

2

நான் 1:  கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்

Continue Reading →

கவிதை: பரந்த மனம் எழவேண்டும் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

Continue Reading →

குறுநாவல்: சலோ! சலோ! (4)

குறுநாவல்:  சலோ,சலோ! (1)அத்தியாயம் நான்கு!

பொதுவாக,‌ உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு  தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்…?? ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்ய தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக  வைத்திருக்கிறார்கள்  என்பதும் புரிவது போல இருக்கிறது.  புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா? வெளியிடப் பழக வேண்டும். இந்திய விடுதலையை வென்றெடுத்த  ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ பரிணமிக்க வேண்டும். இந்த ஒற்றுமை தான் நம் விடுதலைப் பெடியளுக்கும்  சரிவராத விசயம். அவர்களிற்கு சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெரிகிறது.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம். உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள். “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான். வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்… இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திப‌னை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது…என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள்.  வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க‌… வேண்டுமே! அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின்  பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு வந்தவர்கள்.இவர்களைப்  போல அராலியே தெரியாத‌ இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என‌ 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர்  பழகி  விடவா போறார்கள்? அதற்கு மீற‌ வேண்டும்.! மெல்ல மெல்ல தானே நடைபெறும்.  அதற்கு முதல்  இந்தியனாமி அராலியாலேயும் போய் விடலாம்.

Continue Reading →

பாராட்டுக்கள் கிரிதரன் — முருகபூபதி

‘தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான்  ‘பதிவுகள்’ இணைய இதழில் பதிவு செய்திருந்தேன்.  அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி. அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு…

Continue Reading →