சிவனு லட்சுமணன் நினைவுரை

எதிர் வரும் 11 மே மாதம்  டிக்கோயா கிரைப் சேர்ஜ் மண்டபத்தில் அமரர் சிவனு லட்சுமணனின் நினைவு தினத்தை முன்னிட்டு மலையக சமூக அபிவிருத்தி மையத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர்.…

Continue Reading →

நூல் அறிமுக விழா: “கூடுகள் சிதைந்தபோது”

நூல் அறிமுக விழா: "கூடுகள் சிதைந்தபோது"

நூல் அறிமுக விழா (நிகழ்வுகள்): “கூடுகள் சிதைந்தபோது”
நாள் :
11.05.2013, சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : கனடா கந்தசுவாமி கோயில் மண்டபம்,

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 12: வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) ‘டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்’

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அண்மையில் இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது நிகழ்வு முடியும் நிலையிலிருந்தது. வன்முறையும் எழுத்தும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இளங்கோவின் நூலினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் பின்னர் அதுபற்றி எழுதுவேன். ஆனால் வாசித்த அளவில் இளங்கோவின் கதைகள் கூறும் பொருள் முக்கியமானதென்று உணர்ந்தேன். புலம்பெயர்ந்த சூழலில் நிலவிய இளைஞர் குழுக்கள் பற்றிய பதிவுகளை அவரது சிறுகதைகள் பல செய்துள்ளன. இவ்விதமான ஆவணப்பதிவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. இது போல் அண்மையில் வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பும், யோ.கர்ணனின் ‘சேகுவேராவின் வீடு’ தொகுப்பும் ஆவணப்படுத்தும் விடயங்கள் முக்கியமானவை. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலகட்டத்தில் , சிறு துண்டு நிலத்தினுள் அடைந்து கிடக்கும் மக்கள் அடையும் துயர், அன்றாட அத்தியாவசியக் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் (குறிப்பாகப் பெண்கள்) அடையும் சிரமங்கள் இவற்றையெல்லாம் கருணை ரவியின் சிறுகதைகள் ஆவணப்படுத்துகின்றன.  மேற்படி இளங்கோவின் நூல் வெளியீட்டில் ‘காலம்’ செல்வத்தின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சியும் / விற்பனையும் நடைபெறறது. இம்முறை எனக்கொரு புதையல் அங்கு கிடைத்தது. வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) எழுதி, தானே வெளியிட்ட ‘டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்’ நெடுங்கவிதையின் மொழி பெயர்ப்பும், அது பற்றிய விரிவான திறனாய்வும் அடங்கிய நூல். நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் இருந்திருக்கவேண்டும், செல்வம் அதற்கு $5 என்று விலையிட்டிருந்தார். 516 பக்கங்களை உள்ளடக்கிய நூலின் விலை $ 5.  அந்த நூலுக்காக, அந்த விலைக்காக,  ‘காலம்’ செல்வத்தைப் பாராட்டுகின்றேன். அந்த நூலுக்கு அந்த விலை மிகவும் குறைவு. ஆனால் வாசகர்களின் தேவையினைப் பொறுத்தவரையில் (Demand) அது குறைவாகவிருந்த காரணத்தினால் அவர் அந்த விலையினை நிர்ணயித்திருக்கவேண்டும்போல் படுகின்றது. ஏனெனில் பல அண்மைக் காலத்து நூல்களெல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால்தான் அவ்விதம் கருதினேன்.

Continue Reading →

Poetry of the romantics: recollections

K.S.SivakumaranPerhaps students just introduced to the Romantic Poets of England would like to know something about Romanticism and the like which might help them to understand the kind of poetry in a better way. This article gives you the essential points. Romanticism was a term used in Germany and France at the end of the 18th and beginning of 19th century to classify a… new movement in literature, especially in poetry. The Romantic Age in English Literature is supposed to be the work of number of writers between 1790 and 1830, especially the six poets — William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley and John Keats.

The poets
We must first take note of the fact that there is no strict classification of the Romantic Age. We must next see what is important and interesting in the Romantic Age with particular reference to Blake, Wordsworth, Shelley and Keats, the poets we have to study.

Percy Bysshe Shelley
Harold Bloom has described that English Romanticism saw itself as a renaissance of the English Poetry. This enthusiasm is shared by C M Bowra, when he says: a single characteristic which differentiates the English Romantics from the 18th century poets is the special importance given to the imagination. For the Romantics imagination is fundamental because, because they thin that without it poetry is impossible. In fact if we analyze the poetry of Blake, Wordsworth, Shelley and Keats we find that they were splendidly imaginative. This was part of the belief in the individual self which sought expression or release through the imagination.

Continue Reading →

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக … ஒடுக்கப்படுவோரின் குரலாக … மே தின ஊர்வலமும்- ஒன்றுகூடலும்

மே – 01 – 2013;  காலை 11 மணி
இடம் : Place des Fêtes. (Métro; Place des Fêtes)
தோழமையோடு அழைக்கின்றோம்!
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.
Comité de  Défence Sociale Internationale –France.                                      

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ...  ஒடுக்கப்படுவோரின்  குரலாக ...  மே தின ஊர்வலமும்- ஒன்றுகூடலும்உலக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் மேதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வல்லரசுகளோ கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டியபடி இருக்கிறது. ஐரோப்பாவில் இளம் சந்ததியினர் படித்துவிட்டு தொழில் வாய்ப்பு ஏதுமின்றி சூன்யமான எதிர்காலத்தைச் சுமந்தபடி இருக்கின்றனர். வங்கிகள் பொருளாதார நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை சந்தித்த காலம் போய், இப்போது நாடுகள் வங்குரோத்து நிலையில் விளிப்பில் தளம்பிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய கடனை பல நாடுகள் தவிர்க்க முடியா நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் மீள முடியாக் கடன் சுமையை வருங்கால சந்ததிக்கு வழங்கியுள்ளன. உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம்  மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின் பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள்.   ‘பொருளாதார நெருக்கடி’  என்று ஒற்றை வார்த்தையில் கூறப்படும்  பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளையால் பணமும் மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள நிலையில் மக்களின் வறுமையும், அழிவும் தவிர்க்கமுடியாத நியதியாகிவிட்டது.

Continue Reading →

பொது மேடை : இலக்கிய நிகழ்வு

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு

05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,     
டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.

தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்

Continue Reading →

சீட்டு விளையாட்டே வாழ்க்கை

சுப்ரபாரதிமணியன்தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று.  ‘நாலு பேரும், பதினைந்து கதைகளும்’ என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற ‘கோணல்கள்’ என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள ‘கவுண்டர் கிளப்’ என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.

Continue Reading →

சிங்கப்பூர்: கமலாதேவி அரவிந்தனின் ‘சூரிய கிரகணத்தெரு’ நூல் அறிமுக நிகழ்வு!

சிங்கப்பூர்: கமலாதேவி அரவிந்தனின் 'சூரிய கிரகணத்தெரு' நூல் அறிமுக நிகழ்வு!கமலாதேவி அரவிந்தன்

இடம்: ஆனந்த பவன் உணவகம்
95 சையது ஆல்வி சாலை
[முஸ்தபா சென்டர் எதிரில்]
திகதி: 05 -05 -2013 ஞாயிற்றுக்கிழமை

Continue Reading →

கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்!

கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்! கவிஞர் ஆணியின் 'விந்தையாய் விரியுதடி' மற்றும் ஏனெஸ்ட் மக்கின்ரயரின் 'ஐராங்கனி'

கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்! கவிஞர் ஆணியின் ‘விந்தையாய் விரியுதடி’ மற்றும் ஏனெஸ்ட் மக்கின்ரயரின் ‘ஐராங்கனி’

Continue Reading →

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!

[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

- வெங்கட் சாமிநாதன் -முதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்?  தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.? அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு  நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது. 

Continue Reading →