தமிழ்த்துறையின் உலகத் தாய்மொழி தின விழா!

* இவ்வறிவித்தலைப் பதிவு செய்வதிலேற்பட்ட தாமதத்துக்கு வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது.

Continue Reading →

ஆய்வு: தமிழ் – மலையாள மொழிகளில் செயப்படுபொருள் வேற்றுமை

முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே  செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் – 138). 

தமிழிலும் மலையாளத்திலும் செயப்படுபொருளை ஏற்கும் சொற்களாக இருப்பவை  பெயர்களும், பதிலிடு பெயர்களும் ஆகும். எனவே இதன் உருபுகள் பெயரிலும் பதிலிடு பெயரிலும் அமையும் என்பது இதனால் பெறப்படுகின்றது.

ஆங்கில மொழியில் சொல்வரிசைமூலம் செயப்படுபொருள் குறிக்கப்படுகின்றது. (Dr.K.M.George, Malayalam Grammar and Reader, 1983, page -77). ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி செயப்படுபொருள் சுட்டப்படுகின்றது. அதனால் தமிழிலும் மலையாளத்திலும் சொல்வரிசைக் கட்டுப்பாடு இல்லை.

தமிழில் செயப்படுபொருள் வேற்றுமை உருபு ”ஐ”.
”ஐ” யெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்பது தொல்காப்பியம். (தொல்.சொல்.555).
நன்னூலாரோ இரண்டாவனதனுருபு ”ஐ” யே என்பார். (நன்னூல் 299).

தமிழில் செயப்படுபொருளை உணர்த்தும் உருபாக ”ஐ” மட்டுமே உள்ளது. மலையாளத்தில் இவ்வுருபு “எ” ஆகும்.

Continue Reading →

அம்மாவா? ஊழல்ராணியா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.

சட்டம் ஒரு கழுதை என்பார்கள். தனக்கெதிராகக்கூறப்பட்ட தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலையில் மரணித்த ஒருவர் மீது கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது அவதூறினை வாரி இறைப்பதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா மரணமடைந்துள்ள நிலையில் அவர் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை இறுதியான தீர்ப்பாகக் கருத முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துக்கூட ‘சீராய்வு’ மனுச்செய்யும் உரிமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு உண்டு. ஆனால் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு அந்த உரிமை மறுதலிக்கப்படுகின்றது. அவர் உயிருடனிருந்திருந்தால் அவர் தீர்ப்பு மீதான சீராய்வு மனுச்செய்திருக்க முடியும். அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடச் சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாதபடி அவரது மரணம் அமைந்து விட்டது. எனவே அவரை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள். அவரைக் குற்றவாளியென்று அறிவித்திருந்தாலும் கூட, ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரால் நீதிபதிகளின் குற்றவாளி என்னும் தீர்ப்பினை எதிர்த்துத் தன் நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய சட்டபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தினைப்பாவிக்க முடியாமல் போய் விட்டது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை – கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..இந்தக் கவிதை கவிஞனொருவனின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளிலொன்று. இது போன்ற அனுபவங்களை பலவற்றை இன்று இணையம் சாத்தியமாக்கியிருக்கின்றது. நண்பனொருவனை நீண்ட காலத்தின் பின் சந்தித்தபொழுது அவன் தன் முதற் காதல் பற்றியும், முகநூல் அனுபவம் பற்றியும் தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது அவன் கூறினான் ‘ஒரு காலத்தில் அவன் நெஞ்சினை ஆட்டி வைத்த அந்தப்பெண் இன்று குடும்பம், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகவும், அவளைத்தான் முகநூலில் மீண்டும் சந்தித்தபொழுது அது தனக்கு மகிழ்ச்சியினைத் தந்ததாகவும், உண்மையில் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வது தனக்கு இன்பத்தைத்தந்ததாகவும்’ அவன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டான்.

உண்மையில் முகநூல் ஆரோக்கியமான பல விடயங்களைச் சாதித்திருக்கின்றது. என் பால்ய காலத்து நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க வைத்திருக்கின்றது. இழந்த உறவுகள் பலவற்றை மீண்டும் புதுப்பித்திருக்கின்றது. புதிய உறவுகளை அறிய வைத்திருக்கின்றது.

அந்த நண்பனுக்காக , அவன் உணர்வுகளுக்காக எழுதிய சிறு கவிதை இது.

கவிதை: கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

– வ.ந.கிரிதரன் –

இன்னும் ஞாபகத்திலிருக்கிறது
அதிகாலைகளில்
அந்திப்பொழுதுகளில்
நீ
ஆடி அசைந்து நடை பயின்ற
அந்தப்பொழுதுகள்.
உனது அந்தக் காந்தக் கண்கள்,
ஓரக்கண்களால் பார்த்தும் பார்க்காததுபோல்
பார்த்து நீ
சந்திகளில் திரும்புவது,
இன்னும் நினைவுப்பூங்காவில்
மணக்கும் மலர்களிலொன்றாக
பூத்துத்தான் குலுங்குகிறது.
எனக்கு உன்னிடம் பிடித்ததே
உனது அந்தப்புன்னகைதான்.
கண்களும், உன் இதழ்களும்
கூடி உருவாகுமொரு கவிதை அது.
மின்னலென என் இதய வானில்
வந்ததுபோலவே நீ
ஒரு நாள் ஒளிந்து போனாய்.

Continue Reading →

வெளிவரவுள்ளது ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ்! படைப்புகளை அனுப்பி வையுங்கள்.

வணக்கம், ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ் அச்சில் வெளிவரவுள்ளதால் கவிதைகள்,கவிதை சார்ந்த கட்டுரைகள்,கவிதை இதழ்களின்,நூல்களின்  அறிமுகங்கள்,கவிதைகள் பற்றி பெரியோர்கள் சொன்னவைகள் என எழுதலாம்.மொழிபெயர்ப்புக்கவிதை கள்  முழுமையாக இருத்தல்…

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் இன்னா செய்யாமை குறித்த செய்திகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்னா செய்யாமை
உலகில் வாழப்பிறந்த உயிர்கள் அனைத்தும் பிறர்க்குத் துன்பம் அடையச் செய்து விட்டு அதனால் ஒருவன் பயன்  பெற்று வாழ்வது அற நூல்களில் விலக்கப்பட்ட ஒன்றாகும்

Continue Reading →

சிறுகதை: கட்டன்ஹாவும் மனைவியும் (அங்கோலா நாட்டுச் சிறுகதை)

- ராஉல் டேவிட் அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

Continue Reading →

சிறுகதை: கட்டன்ஹாவும் மனைவியும் (அங்கோலா நாட்டுச் சிறுகதை)

- ராஉல் டேவிட் அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 223 : ‘The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan’ by Dr.R.Dharani

வாசிப்பும், யோசிப்பும் 223 : 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharaniமுனைவர் ஆர்.தாரிணிமுனைவர் ஆர்.தாரிணி அவர்கள் என் படைப்புகள் பற்றித் தமிழகத்தில் ஆய்வுகட்டுரைகளை ஆய்வரங்குகளில் சமர்ப்பித்திருக்கின்றார். அவர் பெப்ருவரி 11, 2017 அன்று தமிழகத்தில் நடந்த ஆய்வரங்கொன்றில் கடந்த வருடம் வெளியான ‘குடிவரவாளன்’ (Am Immigrant) நாவல் பற்றியும் ஆய்வுக்கட்டுரையொன்றினை ‘The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan’ என்னும் தலைப்பில் சமர்ப்பித்திருப்பதாக அறியத்தந்திருந்தார். அந்த ஆய்வுக்கட்டுரையானது ‘Scholarly International Multidisciplinary Print Journal’ ஆய்விதழின் ஜனவரி-பெப்ருவரி 2017 இதழில் பிரசுரமாகியுமுள்ளது. அவ்வாய்விதழின் முகப்புப் படத்தையும், அதில் பிரசுரமாயுள்ள முனைவர் தாரிணியின் கட்டுரையின் முதற்பக்கப் போட்டோப்பிரதியையும் ஒரு பதிவுக்காக இங்கே பதிவு செய்வதுடன் , ‘பதிவுகள்’ வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

ஆய்வு: சங்ககால இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த பதிவுகள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியங்களில் மிகுந்த அறிவியல் சார்ந்த பதிவுகள் செறிந்துள்ளன. அவற்றை நாம் அறிவியற் கண்ணோடு பார்ப்பதில்லை. நம்மவர்கள்; இலக்கியப் பார்வையோடு நின்று விடுகின்றனர். இலக்கியங்களில் உள்ள அறிவியல்தான் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கும் உறுதுணையாகின்றன. இன்றைய மக்கள், தம் வாழ்வியல் மேம்படவும், வளம் பெறவும், நலமுறவும், வசதிகள் எய்தவும், உதவக் கூடியது அறிவியலாகும். விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், புவியியல், இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல், பயிரியல், மண்ணியல் முதலான பலதுறைகளை உள்ளடக்கியதுதான் அறிவியல். இவ்வாறான அறிவியல் உருவாக, வளர, மலர உலகின் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இனி, தமிழர்களின் தொன்மை வாய்ந்த வானியல் அறிவு பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியத்திற் காண்போம்.

(1)      தொல்காப்பியம்

இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற தமிழின் முதல் இலக்கண, இலக்கிய நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) என்ற முதுபெரும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்து, உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு சிறந்த விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்தி மரபியலில் கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம். மரபியல் என்பது பண்டுதொட்டு வழிவழியாக வரும் முறைமை, பழக்கவழக்கங்கள் பற்றிக் கூறுவதாகும். இன்னும், உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் ஆறு வகைகளில் அடக்கிய சீர் பெருமைக்குரியது.
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.’ –  (பொருள். 571)

Continue Reading →