லண்டனில் மு.நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ நூல் வெளியீட்டுவிழா

லண்டனில் மு.நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ நூல் வெளியீட்டுவிழா‘கூலித்தமிழ்’ என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப்படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல். தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத்தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரா;கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களும் மவுனிகளாகவே இருந்துவிட்டார்கள். அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது; புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை” என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிக்கந்தராஜா லண்டன் ‘சொறாஸ்ட்ரியன்’ மண்டபத்தில், சென்ற ஏப்ரல் 25ஆம் திகதி மு.நித்தியானந்தனின் நூல்வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 91: கதைக்குள் ஒரு கவிதை!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் தமிழினி ஜெயக்குமாரன் ‘மழைக்கால இரவு’ என்றொரு சிறுகதையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதியிருந்தார். இதுவே தமிழினியின் முதலாவது சிறுகதை என்று கருதுகின்றேன். இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருந்தன. ‘பசியடங்காத பூதம்’ போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

பசியடங்காத பூதம்!

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்

இருள்மூடிக் கிடந்தது.

நசநச வென்று வெறுக்கும்படியாக

மழை பெய்து கொண்டேயிருந்தது,

இடை வெளியில்லாமல் காது கிழியும்படி

பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.

நிணமும் குருதியும் கடைவாயில்

வழிய வழிய

பசியடங்காத பூதம்போல மீண்டும்

பயங்கரமாக வாயைப்

பிளந்து கொண்டது

யுத்தம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 90: அண்மையில் வாசித்தவை மற்றும் யோசித்தவை பற்றிய குறிப்புகள் சில….

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாவலுக்கு சிறந்ததொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் தேவிபாரதி. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றினை நன்கு புரிந்துகொண்ட ஒருவராக அவரை இனங்காட்டுகிறது அந்த முன்னுரை. நாவலைப்பற்றிய அவரது திறனாய்வில் நாவலின் நாயகியான ராஜியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு, மணிபல்லவத்தில் (நயினாதீவில்) நடைபெறும் நாவலைச் சுட்டிக்காட்டியிருப்பது அவரது இலக்கியப்புலமையினைக் காட்டுகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கியக்களத்திலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ‘கனவுச்சிறை’ நாவல். அதனை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தொன்றினையும், , நாவலின் இயற்கை வர்ணனையொன்றினையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

” ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தைத் தன் படைப்புக்கான பின்புலமாகக்கொள்ளும்போது அந்தக்காலகட்டத்தின் மிகமுக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் இடம் பெறுவது ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட, வெற்றிகரமான இலக்கியக்கோட்பாடு. வரலாற்றின் வசீகரங்களிலிருந்து வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை உருவாக்கியவர்கள் டால்ஸ்டாயும், மீகயில் ஷோலக்காவும் ஹெமிங்வேயும். ‘புயலிலே ஒரு தோணி’யை முன்னிட்டு ப.சிங்காரம் இந்தப்பட்டியலில் சேரக்கூடியவர். கல்கி போன்றவர்கள் வரலாற்றின் வசிகரங்களை வணிக உத்தியாகப்பயன்படுத்திக்கொண்டார்கள். போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களைக்கிளர்ச்சியுறச்செய்வது. அந்தக் கிளர்ச்சியிலிருந்து தப்பிச்செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் பெற்றுள்ள வெற்றியே இந்த நாவலை முக்கியமானதாகக்கருதச் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கின்றது.” (தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து)

Continue Reading →

கலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா மாலிக்

சல்மாதடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு  மாதமும் பிரபல   பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான  சல்மா மாலிக்   அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று  தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.

நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்குசுவர்களுக்குள் அடைப்பட்டவாழ்க்கையும்,அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள். தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் – 2000), இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் – 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.

Continue Reading →

எழுத்துப்போராளி ஷோபாசக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

ஷோபாசக்திமுருகபூபதி“ஒப்பீட்டளவில்  இந்திய  நாடு,  இலங்கையைவிட  ஊடகச் சுதந்திரம்   lமிகுந்த  நாடு.   இவ்விரு  நாடுகளின்  திரைப்பட அடிப்படைத்  தணிக்கை விதிகள்   காலனியக்  காலத்தில்  உருவாக்கப்பட்டவை. தணிக்கையே   இல்லாத  சுதந்திர ஊடகவெளிதான்  நமது விருப்பமென்றாலும்   இப்போதுள்ள  தணிக்கை விதிகளைக் கண்டு  நாம்  பேரச்சம் அடையத் தேவையில்லை.   ஆனந்த் பட்வர்த்தனின்   அநேக   படங்கள் தணிக்கை    விதிகளுடன்  நீண்ட  போராட்டத்தை    நடத்தித்தான் வெளியாகியுள்ளன.    தமிழில்  சமீபத்திய  உதாரணமாக  நான் பணியாற்றிய  ‘செங்கடல்’ திரைப்படமும்    நீண்ட  சட்டப் போராட்டத்தை    நடத்தித்  தணிக்கையை   வென்றிருக்கிறது” இவ்வாறு  சில வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கும்  ஷோப சக்தி நடித்திருக்கும்  தீபன்  என்ற   ஆவணப்படம்  சமீபத்தில்  நடந்த கேர்ன்ஸ்    சர்வதேச திரைப்படவிழாவில்  சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. முதலில்   அவரை   மனந்திறந்து  பாராட்டி  வாழ்த்திக்கொண்டே    அவர்    பற்றிய குறிப்புகளை   இங்கு  பதிவுசெய்கின்றேன்.

எனது    விருப்பத்துக்குரிய  படைப்பாளி  ஷோபா சக்தி. இதுவரையில் நாம்   நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை.   எழுத்துக்களினால் பரிச்சயமானவர். 1994   ஆம் ஆண்டளவில்  எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச்சிறுகதைகளை தொகுக்கும்  பணியில்  ஈடுபட்டபொழுது ஷோபா சக்தியினதும்    சிறுகதையொன்றை   புகலிட  இதழிலிருந்து தெரிவுசெய்தோம். எனினும்    அந்தப்பெயரைப்பார்த்ததும்  அவர்  ஆணா… பெண்ணா… என்ற    மயக்கமும் வந்தது.    காலப்போக்கில்  அவரது  கொரில்லா நாவலைப்படித்ததன்    பின்னரும்  தமிழக இதழ்களில்  அவர் பற்றிய குறிப்புகளை   படித்த பின்னரும்தான்  உண்மை   தெளிவானது.

Continue Reading →

‘தவிச்சமுயல்’ சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு!

இடம்: லூசியம் சிவன் கோயில் 4A, Clarendon Rise, Lewisham – SE13 5ES | காலம்: 31.05.2015 மாலை 4.00 மணி தோழமையுடன், என்னுடைய ‘தவிச்சமுயல்’…

Continue Reading →

பிருந்தன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியும் பிருந்தன் ஞாபகார்த்த ஒன்றுகூடலும்

பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் 11 கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன. இடம் ; பிருந்தன் பூங்கா காலம் ; ஏழாம்…

Continue Reading →

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை!

பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த  இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

Continue Reading →

நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 / சரசோதிமாலை எனும் காலக்கணிதம்(கி.பி. 1310) பாகம்-2;

நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 – முனைவர் பால. சிவகடாட்சம் – வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு. (தென்னிலங்கையில்  ஆட்சிபுரிந்த…

Continue Reading →