மீள்பிரசுரம்: ஹருகி முரகாமியின் ‘பூனைகளின் நகரம்’ (Town of Cats by Haruki Murakami)

மீள்பிரசுரம்: ஹருக்கி முரகாமியின் 'பூனைகளின் நகரம்' (Town of Cats by Haruki Murakami)ஹ‌ருகி முரகாமியின் புதிய‌ சிறுக‌தையான‌ ‘பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்’ (Town of Cats), ஒரு த‌ந்தையிற்கும் ம‌க‌னிற்கும் இடையினான‌ உற‌வையும் வில‌க‌லையும், விடை காண‌முடியா சில‌ கேள்விக‌ளையும் முன்வைக்கிற‌து. மிக‌ ஏழ்மையில் வாழ்ந்த‌ த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னையும் ஏழ்மை தெரிந்து வாழ‌வேண்டும் போல‌ வ‌ள‌ர்க்கின்றார். த‌க‌ப்ப‌ன் ஒரு ஜ‌ப்பான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்திற்கு, அவ‌ர்க‌ளின் வாடிக்கையாள‌ரின் வீடுக‌ளுக்குச் சென்று சேவைக்கான‌ ப‌ண‌த்தை சேக‌ரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் கூட‌ வீடுக‌ளைத் த‌ட்டி ப‌ண‌த்தை அற‌விடுகின்றார். ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் பாட‌சாலை இல்லாத‌தாலும், சிறுவ‌ன் பிற‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளிலே தாய் இற‌ந்துவிட்ட‌தால் வீட்டில் ஒருவ‌ரும் இல்லையென்ற‌ப‌டியாலும், ம‌க‌னையும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் த‌ன் வேலைக்குத் த‌க‌ப்ப‌ன் கூட்டிச்செல்கின்றார்.

Continue Reading →

The Toronto Star – Opinion: Taking a stand on Sri Lanka

MStephen Harper , The Prime Minister of Canada[October 29,  2011] Years after Sri Lanka’s bitter civil war ended in a bloodbath, we still don’t know the half of what went on in the final  horrific days. According to the United Nations, “tens of thousands” died in 2008-2009 as government forces crushed a Tamil Tiger rebellion. The army “systematically” shelled UN facilities, areas where 330,000 civilians were huddled, hospitals and food lines, a UN panel found. The rebels, in turn, used civilians as shields. There are “credible allegations,” the UN said, of point-blank executions, torture, rape and other war crimes by both sides. Nor has President Mahinda Rajapaksa’s triumphalist government held a credible probe, or honoured promises to give Tamils “substantive” regional autonomy, stronger minority rights and a fair share of jobs in the civil service and military. A “deeply flawed”  postwar reconciliation commission is a sham, the UN concluded.

Continue Reading →

தொல்காப்பியரின் காலம் கி.மு.711

தொல்காப்பியர்

-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன) -தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார்.  தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்  தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது.  இந்நூலை யாத்த  தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும்,  இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார்.  இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும், ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.

Continue Reading →

‘தமிழ் இலக்கியத் தோட்டத்தி’ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: ‘கடலோடி’ நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு!

'தமிழ் இலக்கிய தோட்டத்தி'ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: 'கடலோடி' நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு! காலம்: நவம்பர் 5, 2011, 6.30 - 8.30 PM;  இடம்: Mid Scarborough Community Centre, 2467 Eglinton Ave, Scarborough, Canada

‘தமிழ் இலக்கியத் தோட்டத்தி’ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: ‘கடலோடி’ நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு! காலம்: நவம்பர் 5, 2011, 6.30 – 8.30 PM;  இடம்: Mid Scarborough Community Centre, 2467 Eglinton Ave, Scarborough, Canada

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் (79 & 80)

(79) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும்  வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (7)

7-ம் அத்தியாயம்  ஸ்ரீதர் மோசக்காரனல்லன்!

7-ம் அத்தியாயம்  ஸ்ரீதர் மோசக்காரனல்லன்![ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]   மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே காதலைப் போன்ற சக்தி வேறில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் வாலிப இதயத்தை வாடவும் மலரவும் அங்கலாய்க்கவும் வைப்பதிலே, காதலுக்கு இணை காதலேதான். ஸ்ரீதர் இரவு நெடு நேரம் வரை கண் விழித்து பத்மாவுக்கும், பரமானந்தருக்கும் கடிதங்கள் எழுதி விட்டுப் படுக்கைக்குச் செல்லச் சற்றேறக் குறைய இரண்டு மணியாகிவிட்டது; இருப்பினும் விடியற் காலை வரை அவனுக்கு நித்திரை வரவேயில்லை. நித்திரை கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளை பகல் முழுவதும் உடம்பில் உற்சாகமாயிராதே” என்ற நினைவால் அவன் தனது கண்களை மூடித் துயிலுதற்கு எவ்வளவு தூரம் முயன்ற போதிலும், நித்திரை வர மறுத்துவிட்டது. பத்மாவின் நினைவால் ஏற்பட்ட தாபங்கள் அவன் மனதின் ஒவ்வொரு  பகுதியையும் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

Continue Reading →

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘கடைசி ஆசை!’ ( தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்)

அ.ந.கந்தசாமியின் 'தாஜ் மகால்'[ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமரிசனம் , சிறுவர் இலக்கியமென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் கைவண்ணைத்தினைக் காட்டியவர். இவரது ‘மதமாற்றம்’ நாடகம் வெளிவந்த காலத்தில் பலதடவைகள் மேடையேறி பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அ.ந.க.வின் குறு நாடகங்களிலொன்று ‘கடைசி ஆசை’. இது தாஜ்மகால் உதயம் பற்றியதொரு கற்பனை. ஏற்கனவே பதிவுகள் இதழில் வெளியான நாடகம்; ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகிறது.]

Continue Reading →

அக்டோபர் – நவம்பர் கவிதைகள் – 1

Continue Reading →

சிறுகதை: முயல்களும் மோப்ப நாய்களும்!

இக்ரம் தனது வீட்டில் வளர்க்கும் முயல்குட்டிகள், லவ்பேர்ட்ஸ் மற்றும் நாய்களிலே தனக்கிருக்கும் வெறுப்பு பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பான். அதுவும் இல்லையென்றால் கால்பந்து விளையாட்டைப் பற்றிப் பேசுவானே தவிர அவனது குடும்பம் பற்றி எதுவும் கூற மாட்டான். எதேச்சையாக பேச்சு வந்தால்  உடனே மௌனமாகி விடுவானே தவிர வீட்டிலுள்ளவர்களைப் பற்றித் தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை பேசமாட்டான்.  இக்ரம்  எல்லோருடனும் நன்றாகப் பழகிய போதிலும் தனது வீட்டுக்கு எங்களை அழைக்கவோ அல்லது கூட்டிச் செல்லவோ மாட்டான்.திடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு. வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையும் தம்பிகளையும் தூக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையும் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவு வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில்  ஒரு மூலையில் ஏதோ ஒன்று  அசைவது போல… ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.

Continue Reading →

அம்பை பங்கேற்ற முற்றம் இலக்கிய சந்திப்பு – ஒலி வடிவில்

அம்பைதிருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.

Continue Reading →