நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

Welfare Fountation Of The Blindபார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

Continue Reading →

‘மகாகவி’ மார்ச் 2011 இதழ் படியுங்கள்

‘மகாகவி’    மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11 கவிஞர். வதிலைபிரபாதலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்ஆசிரியர், மகாகவி மாத இதழ்ஒற்றைதெரு, வத்தலகுண்டு…

Continue Reading →

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லை அமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

Continue Reading →

தமிழ் இணைய இதழ்களும், கணித்தமிழும்

[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]

1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்

சு. குணேஸ்வரன் -=

1.0 அறிமுகம்
இணைய இதழ்களும், கணித்தமிழும்புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.

2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்,  ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும,  புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)

Continue Reading →

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்!

அத்தியாயம் 1

வெங்கட சாமிநாதன்வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு சித்திக்க இயலாது என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும் மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம் படித்தோ, ஜாதகம் கணித்தோ, பூஜை அறையில் விளக்கேற்றி பூ போட்டுப் பார்த்தோ அல்லது ஏதோ பூசாரியைக் கூப்பிட்டு அவனை சாமியாட வைத்துக் கேட்ட சமாசாரமோ அல்ல. எனக்குக் கிடைத்த அனுபவத்தின் கசப்பில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

 

Continue Reading →

உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை: “நாம் தமிழர்களுடன் தான்… இலங்கையின் நிலைமை எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது…” சோனியா காந்தி

சோனியா காந்திபொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Continue Reading →

‘நந்தலாலா’ ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்!

'நந்தலாலா' ஆசிரியர்களிலொருவர்.இலங்கையிலிருந்து வெளிவரும் ‘நந்தலாலா’ , முன்பு வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.-

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது ‘நந்தலாலா’வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?

Continue Reading →