எதுவரை: பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு முழு நாள் உரையாடல் அரங்கு!

எதுவரை: பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு முழு நாள் உரையாடல் அரங்கு!தோழமை மிகு நண்பர்களே! இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.

காலம் / இடம்: 25  நவம்பர் 2012 (ஞாயிறு), லண்டன். 

1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில்  ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி   வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள், வரலாற்றுப்பதிவுகளை, முன்னிறுத்தி,  இதுவரை அச்சில் பதிவான  பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்…

Continue Reading →

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் ‘நீர்த்துளி’ நாவல் ஒரு மதிப்பீடு)

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி' நாவல்  ஒரு மதிப்பீடு)  சுப்ரபாரதிமணியன்வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான ‘நீர்த்துளியை’ வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.

Continue Reading →

குழந்தைகள் குறும்பட விழா!

திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல்  வெள்ளியன்று நடைபெற்றது.புதுவை யுகபாரதி, திருப்பூர் திருநாவுக்கரசு, கோத்தகிரி தவமுதல்வன் உட்பட பல குறும்பட இயக்குனர்கள்…

Continue Reading →

சுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது

திருப்பூர்  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை  கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ்…

Continue Reading →

தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

வாழ்வின் சில உன்னதங்கள்: விட்டல் ராவ்- வெங்கட் சாமிநாதன் -இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் தமிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், கிராமஃபோன் ரிகார்டுகளுக்கும் மட்டுமல்ல. பழம் தட்டு முட்டு சாமான்களின் குவியல் அல்ல அவை. அப்படியான தோற்றத்தின் பின் அதைத் தேடுபவர்களுக்கும், பார்க்கத் தெரிந்தவர்களுக்கும் உணர்ந்தறிகிறவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தரக் காத்திருக்கும் பாரம்பரியம் அது… இன்றைய சந்தை ஏற்க மறுத்த பாரம்பரியம் அது. தமிழர்களும் சென்னையும் இப்படியும் ஒரு ஸ்தாபனத்தை, மனிதர்களை உருவாக்கியிருக்கிறதே என்று மலைக்கத் தோன்றுகிறது. அது இப்போது இல்லை. தமிழன் திரும்ப தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.

Continue Reading →

வலைத்தளத்தில் புதிய இடுகைகள்.

வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு!  வலைத்தளத்தில் புதிய இடுகைகள்: 1. எழுத்தாளன் முகவரி 7: நடைவாசல்கள்2. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்3. மொழிவது சுகம் அக்டோபர் -20            அ. புதுச்சேரி சுதந்திரம்            ஆ. மொ.யன்…

Continue Reading →

இணையத்தள அறிமுகம் (பூ வனம்) : நினைவு நதியில் வண்ணதாசன்

எழுத்தாளர் வண்ணதாசன்[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான ‘பூ வனத்தில்’ எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் ‘பூ மனம்’ வலைப்பதிவினைப் ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது.  http://jeeveesblog.blogspot.ca/ – ‘பதிவுகள்’] நெருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் பொழுது, கல்யாண்ஜி ஆவார். சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனைத் தெரிந்த அளவுக்கு ரொம்ப பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது; அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லாமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.

Continue Reading →

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…

எழுத்தாளர் தேவகாந்தன்வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?

Continue Reading →

உதயகுமாரி நிலாவின் ‘இந்திய உலா’ நூல் பற்றிய எனது சில மேல்வாரிக் கருத்துகள்!

உதயகுமாரி நிலாவின் 'இந்திய உலா' நூல் பற்றிய எனது சில மேல்வாரிக் கருத்துகள்!256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் ‘நிலாவின் இந்திய வைத்திய உலா’ என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.

Continue Reading →

நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள்

Ph1 planet orbits the larger of the two stars. In the distance are the second pair of stars. நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பெரும்பாலான கதிரவன் மண்டலங்கள் (எங்கள் கதிரவன் மண்டலம் உட்பட) பல கோள்களை உடையனவாய் அமைந்து, அக் கோள்கள் மையத்திலுள்ள விண்மீனைச் (சூரியன்) சுற்றி வருகின்றன. ஆனால் தனியான ஒரு கோள் பல விண்மீன்களைச் சுற்றி வரும் செய்தியானது இயல்பாக நிகழக்கூடியதென்பதை விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் அறிகின்றோம். இச் சமயத்தில் கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த புதுக் கோள் ஒன்றை ஓர் அருங்கலை வான்கணிப்பாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இக் கோளுக்கு நான்கு (04) வேறுபட்ட விண்மீன்கள் (சூரியன்கள்) உள்ளன.  இக் கோளுக்கு பி.ஏச்1 ( PH1 =Planet   Hunters1) என பெயரிடப்பட்டுள்ளது. இக் கோள்  பூமியிலிருந்து 3,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சேண்மம் (நெப்தியூன் – Neptune)  கோளையொத்த ‘ஆவி இராட்சதன்’ என்றும் கூறுவர். இக் கோள் நம் பூமிக் கோளை விட 6.2 மடங்கு பெரியதாகும்.

Continue Reading →