நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலி

நிகழ்வுகள்: கவிஞர் செழியனுக்கு லண்டனில் நினைவஞ்சலி‘ஈழத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மார்க்சிய அணுகுமுறையோடு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட கவிஞர் செழியனின் மறைவு ஈழத்து அரசியல் போராட்டத்தின் ஒரு துயர சம்பவமாகும்’ என்று லண்டனில் இடம்பெற்ற கவிஞர் செழியனின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையில் ‘பனி மலர்’ இதழ் ஆசிரியர் நா. சபேசன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்: ‘ ‘மாணவர் குரல்’ என்ற சஞ்சிகையைச் செழியன் என்று அறியப்படும் சிவகுமாரன் அவர்கள் நடத்திய காலத்தில் இருந்தே அவரை நான் அறிவேன். மாவட்ட ரீதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலை இலங்கை அரசு கொண்டுவந்தபோது அந்நடவடிக்கைக்கு எதிராக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்துப் போராடும் முயற்சியில் செழியன் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும். மாணவர் எழுச்சிக்கு வழிவகுத்தவர் என்று மட்டுமல்லாது ஒடுக்குமுறைக்குள்ளான கூலி விவசாயிகளின் அமைப்பிலும் செழியன் தீவிர பங்காற்றி வந்திருக்கின்றார். தனது சொந்தக் கிராமமான உரும்பிராயில் சாதித் தடிப்பு மிக்க நிலவுடைமையாளர்கள் மத்தியில் எளிய, நிலமற்ற விவசாயிகளுக்காக அவர் போராடியபோது அதிகார மையத்தின் பெரும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் தனது சொந்தக் கிராமத்திலேயே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த புரட்சிகர செயற்பாட்டாளராகவே செழியன் திகழ்ந்தார்’ என்று நா. சபேசன் மேலும் தெரிவித்தார்.

விமர்சகர் மு. நித்தியானந்தன் உரையாற்றும்போது: ‘80களில் சமூக உணர்வு கொண்டு பல்வேறு இயக்கங்களிலும் தீவிர அர்ப்பணிப்போடும், பொதுநலச் சிந்தனையோடும் செயற்பட்ட உயிர்த்துடிப்பு மிக்க ஒரு சந்ததியின் குறியீடாகத் திகழ்ந்த கவிஞர் செழியனின் மறைவு வருந்தத்தக்கதாகும்.          

‘மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லையென்றும், புதிய எஜமானர்களின் அடிமைகளாக மரணிப்பதையே வெறுக்கிறோம்’ என்றும் பிரகடனம் செய்த செழியன் இறுதிவரை அடக்குமுறைக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்காரனாகவே திகழ்ந்தார். அவர் கவிதைகள் வாழ்வின் குரூர யதார்த்தத்திலிருந்து  பிறந்தவையாகும். அதனால்த்தான் எஞ்சியது கரித்துண்டுகளேயாயினும் இறுதிவரை எழுதியே தீருவோம்’ என்று அவரால் முழக்கமிட முடிந்தது. தனது கவிதைகளை அழகழகாய் அச்சிட்டுப் பார்க்க வேண்டுமென்றோ, உலகமொழிகளிலெல்லாம் தனது கவிதைகள் போய்ச் சேரவேண்டுமென்றோ ஒரு கணமு

Continue Reading →

மறைந்துவரும் கடிதக்கலை! காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்!

மறைந்துவரும் கடிதக்கலை! காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்! எழுத்தாளர் முருகபூபதிமின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம்.  எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன்   பின்னர்  கடிதம்  எழுதுவதே   அரிதாகிவிட்டது.  இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள்.  தற்காலத்தில்  படிவங்களையும்  ஒன்லைனில்  பூர்த்திசெய்து    அனுப்பமுடிந்திருப்பதனால்  அதிலும்  பேனைக்கு    வேலையில்லாமல் போய்விட்டது. காசோலைக்கு   ஒப்பமிடுவதற்கு    மாத்திரம்    பேனை    உதவும்  காலத்தில் வசதிபடைத்தவர்கள்     மாறிவிட்டார்கள். எழுத்தாணியும்    பனையோலை   ஏடுகளும்  வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்சென்றுவிட்டதுபோன்று     தபால்    முத்திரைகளும்    வருங்காலத்தில்  ஆவணக்காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும்     இடம்பெறலாம்.    அவுஸ்திரேலியாவில்    தபால் நிலையங்களை   போஸ்ட்  ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள்.  அந்தப்பெயரில்தான்    தபால்    நிலையம்    காட்சிப்பலகையில்   துலங்குகிறது. அங்கே  முத்திரை    மட்டுமல்ல    இனிப்பு   சொக்கலெட்,    தண்ணீர்ப்போத்தல்,  சிறுவர்க்கான விளையாட்டுப்பொருட்கள், காகிதாதிகள்    உட்பட   வேறு   பண்டங்களும்   விற்பனையாகின்றன.    மக்கள்  முத்திரை    வாங்குவதும்  குறைகிறது.    காரணம்    கணினிதான்.

முதியவர்கள் இன்றும் கடிதம் எழுதுகின்றார்கள் என நம்பும் அவுஸ்திரேலியத் தபால் திணைக்களம், அவர்களுக்கென 60 சதம் பெறுமதியான ஐம்பது முத்திரைகளை வருடம் ஒருமுறை விற்பனை செய்கிறது. அவற்றைப்பெறுவதற்கு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து ஒரு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனை காண்பித்து குறிப்பிட்ட Seniors முத்திரைகளை தபால் நிலையங்களில் வாங்கிக்கொள்ளலாம். இவ்வாறும் மறைந்துவரும் கடிதக்கலைக்கு புத்துயிர்ப்பு வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தபால் திணைக்களம் முயற்சிக்கிறதோ என்றும் யோசித்தேன்.

வெளிநாடுகளில்     வதியும்   தமது   பிள்ளைகள்  மற்றும்  உறவினர்களை  இலங்கையில்   ஏதாவது  ஒரு   கிராமத்திலிருந்தும்    ஸ்கைப்பின்   ஊடாக மணித்தியாலக்கணக்கில்    பேச   முடிகிறது.  பைவரில் உரையாட முடிகிறது.  இந்த  இலட்சணத்தில்  யார்தான்  கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பிக்கொண்டிருக்கப்போகிறார்கள்?    சம்பிரதாயத்திற்காக  திருமண சாமத்தியச்சடங்கு   அழைப்பிதழ்கள்     தபாலில்    வருகின்றன. அவற்றுக்குச்செல்ல முடியாதவர்கள் வாழ்த்துமடல் அனுப்புகிறார்கள். இந்தப்பின்னணியிலிருந்துதான்   இந்த    ஆக்கத்தை   எழுதுகின்றேன்.

ஒரு    காலத்தில்  தினகரன்  பிரதம   ஆசிரியராகவிருந்தவர்   கைலாசபதி. 1982 டிசம்பரில்  அவர்   மறைந்தார்.   பதினைந்து   ஆண்டுகள்   கழித்து குறிப்பிட்ட டிசம்பர்  மாதத்தில் –   பேராசிரியர்   கைலாசபதி   வாரம்  06-12-97 முதல் 12-12-97 வரை    எனத்தலைப்பிட்டு   தினமும்     தினகரனில்         6 ஆவது பக்கத்தில் (ஆசிரியத்தலையங்கம்   பதிவாகும்  பக்கம்)  கைலாசபதி   பற்றிய   கட்டுரைகளை  அவரை   நன்கு   அறிந்தவர்களைக்கொண்டு    எழுதவைத்தார்  அச்சமயம்  அதன் பிரதம   ஆசிரியராகவிருந்த  எனது   நண்பர்   ராஜஸ்ரீகாந்தன். அச்சமயம்  நான்   இலங்கை   சென்றிருந்திருந்தேன். எனது   இலங்கை   வருகையை   அறிந்ததும்  என்னை    உடனடியாக  நேரில்  சந்தித்து  கைலாசபதி    பற்றி  எழுதித்தருமாறு   கேட்டார். கணினி    அறிமுகமாகியதும்   மக்கள்  கடிதங்கள்  எழுதும் பழக்கம்  குறைவாகிக்கொண்டிருந்த  காலப்பகுதி.    எனக்கு   உடனடியாக   கைலாசபதியின்  அயர்ச்சியற்ற  கடிதம்    எழுதும்  பழக்கம்பற்றி  எழுதுவதற்கே  பெரிதும்  விருப்பமாக இருந்தது. கடிதக்கலையிலும்    பரிமளித்த    கைலாஸ்  என்ற    தலைப்பில்  தினகரன் 97 டிசம்பர் 10 ஆம்  திகதி  இதழில் எழுதியிருந்தேன். அதிலிருந்து  சில பகுதிகளை  இங்கு  மீண்டும்   பதிவு செய்கின்றேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: தன்வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் ‘பச்சைவிரல்’

நூல் அறிமுகம்: தன்வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் 'பச்சைவிரல்'* நூல்: பச்சை விரல் | பதிவு செய்தவர்: வில்சன் ஐசக் | தமிழில்: ராமன் | வெளியீடு: காலச்சுவடு

கேரளா மாநிலம் பாலாவில் பூவரணி என்னும் கிராமத்தில் 1941 ல் பிறந்தவர் தயாபாய். அவரின் இயற்பெயர் மேர்சி மாத்யூ ஆகும். அவர் பீகார் மாநிலம் ஹஸாரிபாக்கில் ஒரு கிருஸ்தவ மடாலயத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காகச் சேர்ந்த போதிலும் பயிற்சி முடிவதற்கு முன்பே மடாலயத்திலுள்ள பழங்குடியினப் பகுதியான மாஹோடாவில் கல்விப்பணி புரிந்தார். அன்று தொடங்கிய கல்விப்பணி இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார். கோண்டு பழங்குடிகளின் ஒருத்தியாகவே மாறி பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம் தான் ‘‘பச்சை விரல்’’ . காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்த ஒரு போராளியின் கதை தான் இந்த ‘பச்சை விரல்’.

1980-ல் Master of Social Work  படிப்பின் ஆய்வேட்டுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாடா மாவட்டத்திலுள்ள சுர்லாகாப்பகம் என்னும் பழங்குடி கிராமத்திற்குச் சென்றார். அவர் மதலில் சென்ற பழங்குடி கிராமம் ஆகும். கோண்டு இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுடன் பழகி எல்லாருக்கும் படித்தமான சகோதரி (பஹன்ஜி) ஆகிவிட்டாள். 1981-ல் தீபாவளி தினத்தன்று தனக்கு மிகவும் பிடித்தமான ‘‘தின்ஸை’’ என்றும் பழங்குடி கிராமத்துக்குச் சென்றார். அவர் தொடர்ந்து 1981 முதல் 1995 வரை 14 ஆண்டுகள் அக்கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருவராகவே மாறிப்போனார். அந்தப் பழங்குடிகளின் உரிமைகளுக்காகவும் கலாசாரம் பாதுகாப்புக்காகவும் போராடினார். அவர்களுடைய முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றினார்.

தயாபாயின் தோற்றம்
தயாபாயின் கழுத்திலும் கைகளிலும் இரும்பு வளையங்கள், நெற்றியில் அரையாணா அகலத்துக்கு பொட்டு, முகத்திலடிக்கும் நிறத்தில் உடம்பைச் சுற்றிய கசங்கிய காட்டன் புடவை என்று காட்சியளிக்கும் ஒரு நாடோடிப் பெண்ணை போன்ற தோற்றம் அவள் தோற்றத்தால் பல சிக்கல்கள் அவளைத் தேடி வந்தன. அனால் இது போன்ற தோற்றத்துடன் ஒரு ஆண் இருந்தால் பல சிக்கல்கள் வருமா என்று நினைத்தால் அது கோள்விக்குறிதான்?

தோற்றத்தால் வரும் சிக்கல்கள்
இரயில் பயணத்தின் போது தயாபாயை பார்த்து ஒரு பிராணி இருக்கிறது. இது எங்கிருந்து வந்ததோ என்று ஒரு பெண் இழிவாக அவள் காதில் கேட்கும் அளவுக்கு பேசி சிரிக்கின்றனர். பெண்ணை ஆண் இழிவு படுத்தியதைக் காட்டிலும் ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது இன்றைய சமுதாயத்தில் நிகழ்ந்து வருகிறது. அதையும் அவள் சாதாரனமாக எடுத்துக் கொள்கிறார்.  கிராமத்திற்கு செல்லும் சாதாரணமான பேருந்தில் கூட அவள் தோற்றத்தைப் பார்த்து ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் தாண்டி ஏறினாலும் நடத்துனர் அவளை பாதிவழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படுகிறார். பெண்கள் எதிர்த்து பேசமாட்டார்கள் என்ற துனிச்சளில் இது போன்று நடக்கிறது. தயாபாய் நடத்துனரைப் பார்த்து ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசியதும் அவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்.  அவளை மிக எளியவளாக கருதுவதனாலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன. எளியவரையும் ஏழைபாழைகளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காலச்சாரம் இப்போது எங்கும் பரவிவிட்டது. சொல்லப்போனால் ஒரு விதத்தில் இதுவும் ஒரு அடக்கு முறைதான்.

Continue Reading →

வரலாறு: பல்லவர்கள்

கடற்கரைக் கோயில் - மகாபலிபுரம்தென்னிந்திய வரலாற்றில் பல்லவர்களின் காலம் புகழ்மிக்கதாகும். களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குப் பின் பல்லவர்களின் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. பல்லவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை சான்றுகளாகப் பெரிதும் உதவுகின்றன. சர்வநந்தியின் ‘லோக விபாகம்’, தண்டியின் ‘அவந்தி சுந்தரி கதை’, மகேந்திரவர்மனின் ‘மத்த விலாச பிரகாசனம்’ போன்ற நூல்களும் திருமுறைகள் எனப்பட்ட தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் பல்லவர்களின் சமய, சமுதாய, அரசியல் நிலைமைகளை விளக்கும் ஆதாரங்களாகும். இவைகள் தவிர ஏறக்குறைய 300 பட்டயங்களும் 200 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சிவகந்தவர்மனின் ‘மயிதவோலு’, ‘இரசுடகள்ளி’ பட்டயமும் பரமேச்சுவர வர்மனின் கூரம்பட்டயமும் இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி, உதயேந்திரச் செப்பேடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டறிய உதவும் சமகாலச் சான்றுகளாகும்.

அயல்நாட்டுக் குறிப்புகள்
இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான்சுவாங் விட்டுச் சென்ற பயணக்குறிப்புகள் காஞ்சிப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் அயல்நாட்டுச் சான்றுகளாகும். ‘மகாவம்சம்’ எனும் ஈழ வம்சாவளி நூலும் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன், ஈழமன்னர் மானவர்மன் ஆகியோரிடையே நிலவிய உறவினைக் குறிப்பிடுகிறது.

பூர்வீகம்

பல்லவர்கள் ‘தொண்டைமண்டலம்’ எனப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். வடக்கே நெல்லூருக்கும் தெற்கே காவிரி நதிக்கும் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். இப்போதுள்ள ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களும் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் புதுச்சேரியும் சேர்ந்த பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். பல்லவர்களின் பூர்வீகம் குறித்து இரண்டு முக்கியக் கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, அவர்கள் அயல்நாட்டார் என்பதாகும். பிறிதொன்று அவர்கள் இந்நாட்டுப் பூர்வீகக் குடிகளே என்பதாகும். பல்லவர்கள் தமிழகத்தில் கி.பி.250 முதல் கி.பி.912 வரையில் ஆட்சி செலுத்தினர். பல்லவ அரசர்களைப்பொதுவாக மூன்று வகையினராகக் கூறலாம்.

1. முற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.250 முதல் கி.பி.340 வரையில் பல்லவர் அரசை நிறுவி ஆட்சி செலுத்தியவர்கள்.
2. இடைக்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.346 முதல் கி.பி.575 வரையில் ஆட்சி செலுத்தியவர்கள்.
3. பிற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.575 முதல் கி.பி.912 வரையில் பல்லவப் பேரரசை வலிமையுடனும் பெருஞ்சிறப்புடனும் ஆட்சி செலுத்தியவர்கள்.

சரியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் முற்காலப் பல்லவர்கள் குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. ‘பப்பதேவன்’ என்பவன்தான் பல்லவர் ஆட்சியைத் தொடங்கியனவாகக் கருதப்படுகிறான். முற்காலப் பல்லவர்களில் சிவசுகந்தவர்மன் (300 – 325) முதல் சிறந்த மன்னர் ஆவார். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கிருட்டிணாநதி முதல் தென்பெண்ணை ஆறுவரையுள்ள பகுதிகளை ஆண்டாரெனத் தெரிகிறது. இடைக்காலப் பல்லவர்களில் விஷ்ணுகோபன் (கி.பி.350 – 375) என்பவர் குறிப்பிடத்தக்கவர். சிம்மவிஷ்ணு அரியணை ஏறிய காலம் முதல் பல்லவர் வரலாறு தெளிவாகிறது. சிம்மவிஷ்ணு (கி.பி.570 – 615), முதலாம் மகேந்திரவர்மன் (615 – 630), முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668), முதலாம் பரமேசுவரவர்மன் (670 – 690), இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது இராசசிம்மன் (690 – 728), இரண்டாம் நந்திவர்மன் (731 – 795), தந்திவர்மன் (756 – 846), மூன்றாம் நந்திவர்மன் (847 – 869) ஆகியோர் பிற்காலப் பல்லவ மன்னர்கள் வரிசையில் அடங்குவர். இவர்களின் காலத்தில் கலையும் இலக்கிய வளர்ச்சியும் மிகுந்து காணப்பட்டன. மூன்றாம் நந்திவர்மனுக்கு நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்கும் அரசியல் காரணங்களினால் மனவேற்றுமை ஏற்பட்டது. அதனால் அவ்விருவரும் வேற்றரசர்களின் உதவியை நாடினர். இவ்விரு தரப்பினரும் ‘திருப்புறம்பியம்’ என்ற இடத்தில் போரிட்டனர். இப்போருக்குப் பின் நிருபதுங்கனைப் பற்றிய செய்தி ஏதுமில்லை. அபராஜிதன் வெற்றி பெற்றாலும் ஆதித்தன் என்னும் சோழக் குறுநில மன்னரால் கொல்லப்பட்டான். இப்போருக்குப் பின்னர்ப் பல்லவர் ஆட்சி முடிவு பெற்றது. பல்லவர்களின் காலத்தில் மக்களின் ஆதரவு பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. இதனால் சைவ சமய இயக்கங்கள், புத்த, சமண சமயங்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளரலாயின. பல்லவர்கள் கோயில் வளர்ச்சிக்கும் சிற்பக்கலை வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றினர். பல்லவர் தலைநகரத்தில் விளங்கிய ‘காஞ்சிக்கடிகை’ புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கியது. தமிழக வரலாற்றில் பல்லவர்கள் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

நெடுங்கவிதை: கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!

கவிஞர் சில்லையூர் செல்வராசன்அ.ந.க.வும் சில்லையூர் செலவராசனும் இளமைப்பருவத்தில்...அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!
எழுத்தாளர் சில்லையூர் செல்வராசனும் (தான்தோன்றிக் கவிராயர்), அறிஞர் அ.ந.கந்தசாமியும் நீண்ட கால நண்பர்கள். இள வயதிலேயே கொழும்புக்கு வாழ்க்கையில் நீச்சலடிக்க வந்தவர்கள் இவர்கள். அ.ந.க.வுடனான் தனது அனுபவங்களைச் சில்லையூர் செல்வராசன் அவர்கள் ‘கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!’ என்னுமிக் கவிதையில் பதிவு செய்துள்ளார். வீரகேசரி, 16-2-1986 பதிப்பில் வெளியான இக்கவிதை அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந.க.வின் புகழ்பெற்ற நாவலான ‘மனக்கண்’ நாவலைச் சில்லையூர் இலங்கை வானொலியில் வானொலி நாடகமாக்கி வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒருமுறை பண்டிதர் ஒருவர் சில்லையூர் செல்வராசனின் கவிதைகளை வெற்றுச் செய்யுள் என்று விமர்சித்தபோது அதற்கெதிராகச் சில்லையூர் செல்வராசனின் கவிதைச் சிறப்பை வெளிப்படுத்தும் ‘தான்தோன்றியார் கவிதைகள் Blank verse ஆ?’ என்றொரு ஆய்வுச்சிறப்பு மிக்க கட்டுரையினை எழுதியவர் அ.ந.க என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை; கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்! – சில்லையூர் செல்வராசன் –

நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…
சோற்றுக் கவலை, துணிக்கவலை, அன்றாட
வீட்டுக் கவலை, கல்விவித்தை தொடர வழி
காட்டித்துணை செய்து கொடுக்க யாரேனும்
இல்லாக் கவலை, இவற்றைச் சுமந்த சிறு
பிள்ளையாய், இந்தப் பெரிய கொழும்பு நகர்க்
கோட்டையிலே வந்திறங்கி குறுகி மனம் பேதலித்து,
வேட்டி, சட்டையோடு வெளிக்கிட்டுத், தட்டார
வீதியில் என்றன்று விலாசம் இடப்பட்ட
சேதித்தாள்க் கந்தோரைச் சென்றடைந்த அந்த நாள்..
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…

மாற்றில் உயர்ந்து மதிப்புக்குரித்தான
நல்ல சிறுகதையை நான் எழுதிப் போட்டியிலே
வெல்ல முதற்பரிசை விடலைப் பருவத்திற்
சித்தித்த வெற்றிக்கென் சிந்தை பலியாக
தித்திப்பை ஊட்டிய அத்திக்கில் தொடர்ந்து மனம்
போக்கி, எழுத்தே என் போக்கிடமாய் கொள்வதெனும்
ஊக்கம் மிகுதுறவே, ஒரு கோடி கற்பனைகள்
பேதைக் கனாக்கள் பிடித்தாட்டும் மொய்வெறிபோற்
போதையுடன் புறப்பட்டு மூ பத்து ஐ
வருடங்களின்  முன்னால் வந்து, கொழும்பில் இளம்
பருவத்திற் போய் அந்தப் பத்திரிகைக் கந்தோரின்
‘கேற்றை’த் திறக்க கிடைத்த வரவேற்பு,
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது…

Continue Reading →

வெற்றியின் இரகசியங்கள் (2) – அத்தியாயம் இரண்டு : மனத்தின் தன்மைகள் – அ. ந. கந்தசாமி –

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமிஅ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!

– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். – பதிவுகள் –


மனிதனுக்கும் இதர உயிர்களுக்கும் இருக்கும் வேற்றுமை அவனுக்குச் சிந்திக்கத் தெரிந்திருப்பதுதான் என்று கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறான், ஆனால் ஒக்ஸ்போர்ட் சர்வ கலாசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஹம்ப்ரீஸ் போன்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சிந்தனை மனிதனின் ஏகபோக உரிமையல்ல என்றும் பூனை, நாய், கொரில்லா போன்ற மிருகங்களும் சிந்திக்கவே செய்கின்றன என்றும் இவ்வறிஞர்களில் பலர் பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இது எப்படியாயினும் ஒன்றைமட்டும் எவ்ரும் மறுக்க முடியாது. இன்றுள்ள உலகப் பிராணிகள் யாவற்றிலும் அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்தான். மனிதனுக்கு அடுத்தபடி கொரில்லாக் குரங்கே அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்த பிராணி என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் மனிதனின் சிந்தனசக்திக்கும் கொரில் லாவின் சிந்தணுசக்திக்கும் எவ்வளவு வித்தியம்? ஒன்று மலை, மற்றது கடுகு, மனிதனின் சிந்தனசக்தியின் பீடம் மனம் என அழைக்கப்படுகிறது. இந்த மனம் எங்கள் தேகத்தைக் கட்டியாள்கிறதா, அல்லது தேகம் மனதைக் கட்டியாள்கிறதா என்பது பற்றி மனிதன் நீண்டகாலமாக வாதித்து வருகிறான். இந்த வாதத்தில் மிகப் பெரிய தத்துவ ஞானிகள் பலர் கலந்து கொண்டிருக்கிறர்கள்.

இதில் மனமே தேகத்தைக் கட்டியாள்கிறது என்று வாதிடுவோர் இலட்சியவாதிகள் என்றும், தேகமே மனதைக் கட்டியாள்கிறது என்போர் உலோகாயதவாதிகள் என்றும் பலவாருக அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவ்வளவு வாதத்திற்குப் பிறகும் பிரச்சினை இன்னும் தீர்ந்த பாடில்லை. இன்றும் மனம் என்பது என்ன? அது உடலில் எங்கேயிருக்கிறது? மண்டைக்குள் இருக்கும் தேங்காய்ப் பருமன் உள்ள மூளையா மனம்? அல்லது அதில் ஒரு பகுதியா?  மேலும் மனம் என்ற வார்த்தைக்குள் சிந் திக்கும் சக்தி மட்டும் அடங்கவில்லையே! மனிதன் பிறந்த நாள் தொடக்கம் ஒரு பெரிய ஞாபகக் குவியலையும் தன் னுடன் சேர்த்து வைத்திருக்கிருனல்லவா? அதுவும் மனதுள்தான் கிடக்கிறது. நாம் படிப்பது, கேட்பது, அனுபவிப்பது மனப்பாடஞ் செய்வது, எல்லாமே அங்கே புதையுண்டு, கிடக்கின்றன. இவை எல்லாம் மூளையிலுள்ள சவ்வுகளிடையேயும் நரம்புகளிடையேயுமா கிடக்கின்றன?- இது போன்ற பல கேள்விகளுக்கு போதிய பொருத்தமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதில் இருந்து ஒன்று தெரிகிறது. உலகத்தையே துலக்கிவிட்டதாக அல்லது துலக்க முடியும் என்று கருதும் மனிதன் இன்னும் தன் உடலையும் உள்ளத்தையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் அது. மனிதனே! உன்னை நீ அறிந்து கொள்!-என்று பண்டைக் காலத்திலிருந்தே சொல்லப் படுகிறது. இதில் நீ என்பது என்ன? நீ, நான், தான் என்ற வார்த்தைகள் மனதையா தெரிவிக்கின்றன? இது முற்ருக விடுவிக்கப்படாத ஒரு புதிராகத்தான் இன்னும் இருந்து வருகிறது. இருந்த போதிலும் “நீ நான், தான்? என்ற கருத்தில் மனிதனின் மனம்தான் பேரிடம் பெறும் என்று சிலர் கொள்வதில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நான் அல்லது நீ என்ற வார்த்தை மனம், உடல், அவற்றை இயக்கும். சக்தி என்பவற்றின் சேர்க்கையைக் குறிக்கிறது என்று கொள்வது ஓரளவு பொருத்தமாகலாம்.

பிராய்ட்ஆகவே தன்னைத்தான் அறியும் முயற்சியில் மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியே முக்கிய இடம் பெறுகிறது. இதுவே இன்றைய மனேதத்துவ விஞ்ஞானமாக வளர்ச்சியடைந்துள்ளது, என்று கூறினால் அதில் தவறில்லை. மனதைப் பற்றி சிந்தித்து அதைத் துலக்க வேண்டுமென்ற முயற்சி நீண்ட காலமாக இவ்வுலகில் நடைபெற்று வந்தபோதிலும் நமது இருபதாம் நூற்றண்டில்தான் அம்முயற்சி விஞ்ஞானரீதியான அடிப்படையைப் பெற்றது. இதற்காகப் பெரிதும் உழைத்தவர்கள் மூவர் : ஒருவர் பிராய்ட். மற்றவர் அல்பிரெட் அட்லர். இன்னெருவர் கார்ள் ஜூங். இதில் பிராய்ட் மனிதனின் மன இயல்புகள் பெரும் பாலும் பாலுணர்ச்சியின் அடிப்படையிலேயே பூத்து விகசிக்கின்றன என்ற கருத்தை வெளியிட்டார். கார்ள் ஜுங் நனவு மனம், நனவிலி மனம் என்ற இருமனங்களில் நனவிலி மனதின் ஆழத்தை அளந்தறிவதில் தன் கவனத்தைச் செலுத்தினர். அல்பிரெட் அட்லரோ தாழ்வு மனப் பான்மை என்ற உணர்ச்சியே மனித வாழ்வின் போக்கினை நிர்ணயிக்கும் பெரிய சக்தி என்ற கருத்தை வளர்க்க முயற்சித்தார். இவர்களில் மனம் உடல் மீது ஆதிக்கஞ் செலுத்துகிறதா அல்லது உடல்தான் மனதின்மீது ஆதிக்கம் செலுத்துகிறதா என்ற கேள்விக்கு அட்லர் அளிக்கும் பதில் பின்வருமாறு : “தனிப்பட்ட மனிதனின் மனேதத்துவத்தில் மனம் உடல் என்ற இரண்டும் ஒன்றை ஒன்று ஜீவசக்தியுடன் பாதித்து நிற்பதைக் காண்கிறோம். மனிதனின்-அதாவது மனதினதும் உடலினதும் சேர்க்கையின்-நோயை நாம் தீர்க்க வேண்டியிருக்கிறது. மனமா, உடலா என்பதல்ல பிரச்சினை. மனமும் உடலும் உயிர்ப்பின் வெளிப்பாடுகளாயுள்ளன. அவை வாழ்க்கை என்ற முழுமையின் பகுதிகள். அவை முழுமையில் ஒன்றை ஒன்றைப் பற்றியும் பாதித்தும் நிற்பதை நாம் இப்பொழுது அறியத் தொடங்கியுள்ளோம்.?

Continue Reading →

தொடர் : வெற்றியின் இரகசியங்கள் (1): அத்தியாயம் ஒன்று: இன்பம் என்பது என்ன?

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமிஅ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!

– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். – பதிவுகள் –


முனனுரை
அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை அறிஞர் பலர் அவ்வப்போது எழுதிப் போயிருக்கிறர்கள். வள்ளுவரின் திருக்குறள், ஒளவையார் கவிகள், காலடியார் போன்றவை இத்தகையன. இவை எக்காலத்துக்கும் பொதுவான வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்குகின்றன. ஆனால் தற்காலத்துக்கென்றே இன்றைய உலகின் சூழ்நிலைகளை மனதுட் கொண்டு எழுதப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் தமிழில் குறைவு. ஆங்கிலத்திலோ இத்துறையில் ஏராளமான நூல்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டேல் கார்னேஜி, நெப்போலியன் ஹில், ஹேர்பேர்ட் கசன், கோர்மன் வின்சென்ட் பீல் போன்றர் இத்துறையில் மிகப் புகழ்பெற்று விளங்குகிருர்கள். இவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக்கணக்கில் உலகெங்கும் விற்கப் படுகின்றன. இந்நூல்கள் பலரது வாழ்க்கையின் போக்கையே முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன. இவர்களைத் தவிர வாழ்க்கைக்கு வழிகாட்டும் இத்தகைய நூல்களைப் புகழ்பெற்ற சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் எழுதியுள்ளனர். இவர்களில் நாவலாசிரியர் ஆர்னேல்ட் பெனட் எழுதிய “24 மணி நேரத்தில் வாழ்வதெப்படி?’ ‘மனத்திறன்’  என்பவை முக்கியமானவை. அப்டன் சிங்க்ளெயர் எழுதிய *வாழ்க்கை நூல்’ என்ற வெளியீடும் இத்தகையதே. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற பேட்ரன்ட் ரசலும் இத்துறையில் மிகச் சிறந்த நூலொன்றை எழுதியுள்ளார். அதன் பெயர் “இன்பத்தை வெற்றி கொள்ளல்” என்பதாகும்.

மேலே கூறிய எழுத்தாளர்களின் நூல்களோடு எனக்கேற் பட்ட பரிச்சயம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலொன்றை நானும் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை என்னிடத்தே தூண்டியது. அதன் பலனே இன்று உங்கள் கரங்களில் தவழும் ‘வெற் றியின் இரகசியங்கள்’ என்ற இந்நூலாகும். கல்வி, கேள்வி, அனுபவம் என்ற மூன்றுடன் சிந்தனையும் சேரும் பொழுது அறிவு பிறக்கிறது. இந்நூலிலே கான் கற்றதும் கேட்டதும் அனுபவித்ததும் என் சிந்தனைச் சூளையில் புடம் போடப்பட்டு வெளிவந்துள்ளன. ஒருவன் இவ்வுலகில் இன்ப வாழ்வு வாழுதற்கு இந்நூல் உறுதியாக வழிகாட்டும் என்பதே எனது கம்பிக்கை,

கொழும்பு-2. இலங்கை.
121, மலே வீதி
அ. ந. கந்தசாமி


வாசகருக்கு நூலாசிரியர் கடிதம்

பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . 'மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் "மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்."அன்புக்குரிய வாசகரே, வணக்கம்,

இந்நூலை வாசிக்கும் நீங்கள் இதை எங்கிருந்து வாசிக்கிறீர்களோ நானறியேன், வீட்டிலா, நூல் நிலையத்திலா, ஒடும் ரெயிலிலா, விமானத்திலா, கப்பலிலா, ‘பார்க்” பெஞ்சிலா, படுக்கை அறையிலா, கடற்கரை மணலிலா,- இவற்றில் ஓரிடத்திலாக இருக்கலாம். அல்லது என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியாத வேறு ஏதாவது இடத்திலாகவும் இருக்கலாம். அது எப்படி என்ருலும் எனது நூலை நீங்கள் வாசிக்கிறீர்கள்அது எனக்கு இன்பமளிக்கும் விஷயம்; உங்களுக்கு இன்ப மளிக்க வேண்டுமென்பதே என் ஆசை. ஆனால் ஒரு நூலை வாசிப்பது இன்பத்துக்காக மட்டுமல்ல. பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . ‘மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் “மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்.”

Continue Reading →

அ.ந.க.நினைவாக (மீள்பிரசுரம்) அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

கே.எஸ்.சிவகுமாரனின் ‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்ப காலப்படைப்புகளை இங்கே வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukal/kss_writes.html


அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14.

 

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அறிஞர் அ.ந.கந்தசாமி[ – – எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைப்பர். இலக்கியத்தின் பல துறைகளிலும் தன் ஆளுமையினைப் பதித்தவர் அ.ந.க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது பன்முகப் புலமை காரணமாகவே அவர் அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் கலாநிதி க.கைலாசபதி அவர்கள் தனது ‘ஒப்பியல் இலக்கணம்’ நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்தார். ‘அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்’ என்னும் ‘தினக்குரலில்’ வெளியான இச்சிறு கட்டுரையில் புகழ்பெற்ற கலை, இலக்கியத்திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ‘அ.ந.க ஓர் அறிஞரே’ என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரை இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அ.நக.வுடனான தனது அனுபவங்களையும் பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் அம்முக்கியத்துக்குக் காரணம். – . – பதிவுகள் -]


INTELLECTUAL என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அகராதியொன்றின் படி “” AN INTELLECTUAL IS ONE WHO THINKS AND ACTS PREDOMINANTLY TO SERVE THE PURSUIT OF KNOWLEDGE AND APPRECIATION OF FINE THINGS IN LITERATURE AND THE ARTS, AND IS LESS CONCERNED WITH THE MUNDANE AND MATERIAL ASPECTS OF LIFE’ தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட அகராதியொன்றின் விளக்கம்:  – ” அறிவுத் திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர்’ மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது. அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறன் நோக்கிய ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை’. இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக இன்டலெக்ஷ?வல் என்பதனை “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகிறார்கள். அர்த்தம் தெரியாமல் ஆங்கிலமொழிப் பரிச்சயம் இல்லாததால் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் “”புத்திஜீவிகள் என்று எழுதிவிட கண்மூடித்தனமாக நமது பத்திரிகையாளர்கள் சிலரும் “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறக்கி விடுவது போலாகிவிடும்.புத்தியை மாத்திரமே முதலாகக்கொண்டு ஜீவிப்பவர்கள் தான் “”புத்திஜீவிகள்’ ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள் “”ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே “” ஆய்வறிவாளர்’ ஆவர்.

அ.ந.க.
அமரர் அ.ந.கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர்/படைப்பாளி ஆவர். அவர் உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.

இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந.கந்தசாமி அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டிடத்தில் செயற்பட்டது.எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டிடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன “ரெயின்போ’ கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்துவந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 271 :’கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’: கவிஞர் முருகையனின் நினைவுக்கவிதையும் அதன் சிறப்பும்!

கவிஞர் இ.முருகையன்அறிஞர் அ.ந.கந்தசாமிஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளிலொருவரான  கவிஞர் இ.முருகையன் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்த சூழலில் அ.ந.க. நினைவாகக் ‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’ என்னும் கவிதையொன்றினை மார்ச் 14, 1968 தினகரன் பத்திரிகையில் எழுதியுள்ளார். மிகவும் சுவையான நினைவு கூரல். கவிஞரின் கனவில் ஒரு மாதம் முன் மறைந்த அ.ந.க தோன்றுகின்றார். நோய்வாய்ப்பட்டு மறைந்த அ.ந.க தேகசுகத்துடன் தோன்றுகின்றார்.  “நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த யாக்கைய ராகி இருந்தார்” அ.ந.க.  அவருடன் கவிஞர் கதைக்கத் தொடங்கினார்.

“இப்போ தெப்படிச் சுகம்?” எனக் கேட்கின்றார். அதற்கு அ.ந.க

அதற்கு அ.ந.க “நல்ல சுகம்” என்று நவில்கின்றார்.

கவிஞருக்கோ ஒரு மாதத்தின் முன் “அன்பர், சுவைஞர், ஆதரவாளர் துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில், மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர அன்னார் உடலம் தகனம் ஆனமை”  நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் அ.ந.க.விடம் எப்படி அதை கூறுவதென்று கவிஞருக்கு ஒரு தயக்கம். கவிஞர் முன் தோன்றிய அ.ந.க.வே செளக்கியம் என்று கூறும்போது எவ்விதம் அவரது உடலம் சிதையில் எரிந்ததை எடுத்துக் கூறுவது?  இருந்தாலும் சொல்லாமலிருப்பதும் நல்லது அல்லவே. தயக்கத்தை நீக்கியவராகக் கவிஞர் அ.ந.க.விடம் கூறுகின்றார்: “உடலம் எரிந்ததை நான் கண்டேன்!”

இதற்கு அ.ந.க என்ன பதிலைக்கூறுகின்றார் தெரியுமா? கவிஞரின் வரிகளிலேயே படிப்போமா?

“இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்”

அ.ந.க.வின் இப்பதிலுடன் கனவு நிலை நீங்கி நனவுலகுக்கு வருகின்றார் கவிஞர் இ.முருகையன். கவிஞரின் கனவில் தோன்றும் அ.ந.க கூறும் இப்பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அ.ந.க.வின் ஆளுமையினை எடுத்தியம்புவது. ‘எதிர்காலச்சித்தன் பாடல்’ என்னும் சிறந்த அறிவியல் மிகுந்த கவிதையினைத் தந்த கவீந்திரன் (அ.ந.க) நிச்சயம் இவ்விதமொரு அறிவியல் பூர்வமான பதிலைக் கூறியிருக்கக் கூடும்தான். அ.ந.க.வின் உடல் சிதையில் எரிந்ததைக் கூறிய கவிஞர் முருகையனைப்பார்த்து அ.ந.க. கூறுவதாகக் கவிஞர் சித்திரித்துள்ள பதிலில் தொனிக்கும் அறிவியல் என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞரின் கற்பனைச்சிறப்பினையும் கூடவே வெளிப்படுத்துவது. அ.ந.க கூறுகின்றார் ‘உண்மைதான். என் உடல் எரிந்தது உண்மைதான். அவ்விதம்  எரிந்தபோது வெளிப்பட்ட மின்காந்த அலைகளின் விளைவாகத் தோன்றிய விம்பத்தின் மீது டாக்டர் ‘ஒப்பரேஷன்’ செய்து மீண்டும் உயிர்ப்பித்து விட்டார்’. உண்மையில் இப்பதிலில் தொக்கி நிற்கும் உண்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. ‘தொலைகாவும்’ (Teleporting) தொழில்நுட்பம் மூலம் மானுடர்களும் அலைகளாகக்  (வானொலி அலைகளைப்போல்) காற்றினூடு பயணித்து மீண்டும் சுய உருவுக்கு வரும் வகையிலான தொழில்நுட்பம் (ஸ்டார் வார்ஸ் போன்ற அறிவியல் திரைப்படங்களில் வருவது போன்ற) மானுட வரலாற்றில் நிச்சயம் சம்பவிக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். அது போல் மானுட மரணத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றும் தொழில் நுட்பமும் சாத்தியம் என்பதில்  மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். அ.ந.க.வும் கூட இவ்விதமான நம்பிக்கையினைக் கொண்டிருந்தவர். ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் தான் எழுதிய உளவியல் மற்றும் வாழ்க்கையினை முன்னேற்றும் சிந்தனைகள் மிக்க நூலில் அ.ந.க கூறியிருக்கும் பின்வரும் கூற்று அவரது சாவை வெல்லுதல் சாத்தியம் என்னும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் கூற்று எனலாம்:

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

“ஓ! மனிதர்களே நம்புங்கள்.
நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.” – விதுரன் –

அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!இப்பொழுதுதான் முகநூலில் இராசையா தங்கேஸ்வரனின் மறைவுச் செய்தினை அறிந்து கொண்டேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இவர் முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் ஒர் எழுத்தாளர் என்பது சிலரே அறிந்ததொன்று. விதுரன் என்னும் பெயரில் சில சிறுகதைகளையும், கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கின்றார் (நானறிந்த வரையில்). மேலும் அதிகமாக எழுதினாரா என்பது தெரியவில்லை. இவரது சிறுகதையான நிஜதரிசனம் தேடல் (தேடக வெளியீடு) சஞ்சிகையின் பங்குனி 1994 இதழில் வெளியானது. இலங்கையிலிருந்து அகதியாக அமெரிக்கா வரும் தமிழ்ப்பெண்ணொருத்தியைக் கனடாவிலிருந்து சென்று அழைத்துவரும் தமிழ் இளைஞனைப்பற்றியது. அதில் இவர் பெண்ணுரிமை, தமிழர்தம் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமுறை, புகலிடப்பெண்கள் நிலை, காதல், இணைந்து பழகும் டேட்டிங் என்று பல விடயங்களைச்சுற்றிக் கதையினை அமைத்திருப்பார். இவரது கவிதையான காணாமல் போன ஆடு தேடலின் மே 1997 இதழில் வெளியாகியுள்ளது. இவரைச் சந்திக்கும் தருணங்களில் மேலும் எழுதும்படி கூறுவேன். எழுதுவேன் என்று கூறுவார். மேலும் எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஒருமுறை இவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது 1983 கலவரத்தைத்தொடர்ந்து சிறிது காலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்ததாகவும், அதன் காரணமாகச் சிறிது காலம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இளைஞர்களொருவராக இலங்கைச் சிறையொன்றில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். நான் அவரது சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி , பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அது பற்றி எதுவும் பின்னர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் வன்னிச்சங்கம்(கனடா) மலர் வெளியிட்ட கொம்பறைக்கு ஆக்கம் நாடி அணுகியிருந்தார். கொடுத்ததாக ஞாபகம். அக்கட்டுரை கொம்பறை` மலரொன்றில் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அக்காலகட்டத்தில் வன்னியில் மாணவர்களுக்காக இலாப நோக்கற்ற அமைப்புக்காகச் சிறு தொகை கொடுத்தபோது நன்றி கூறிக் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் அவ்வப்போது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்வதுண்டு. அண்மையில் கூட கண்புரை சத்திரசிகிச்சை பற்றிப் பதிவொன்றினையிட்டிருந்தபொது அச்சிகிச்சையினைத் தான் பல வருடங்களுக்கு முன்னர் செய்ததாகவும், அது பற்றிய அறிவுறுத்தல்களையும் முகநூலில் உள்பெட்டியில் தெரிவித்திருந்தார். அண்மையில் கூட ஜனவரி 23 எனது பிறந்தநாளினையிட்டு வாழ்த்துச் செய்தியினையும், பொங்கல் வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.

Continue Reading →