கவிதை: நான் ஸ்ரீலங்கன் இல்லை/யேர்மனிய / பிரெஞ்சு/நோர்வேஜியன் மொழிபெயர்ப்பு

- தீபச்செல்வன் -

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

Continue Reading →

வாழ்த்துச்செய்தி: எழுத்தாளர் ‘தமிழ்வேள்’ கமலாதேவி அரவிந்தன்

எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும்,…

Continue Reading →

ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

– சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸு” மூன்றாவது கை” சிறுகதைத் தொகுப்பிற்காக நண்பர் ஷாநவாஸுக்கு இன்று சிங்கப்பூரின் முக்கிய பரிசான “ஆனந்தபவன் – மு.கு.ராமசந்திரா விருது” வழங்கப்பட்டது. மனமார்ந்த வாழ்த்துகள்  அவரின் சமீபத்திய நூல் பற்றி..-


சுப்ரபாரதிமணியன்ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “  என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..

நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.

பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம்  விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார்.  அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.

அவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன்.  சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை.  கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.

நம்மூரில் சிங்கப்பூர் பரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்டது. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.

Continue Reading →

இலண்டன் லோகன் மண்டபத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்

‘நாட்டியத்திற்குரிய உடல்வாகும் நளினமும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கம் ஓம்கார வந்தனம்; முதற்கொண்டு அலாரிப்பு, ஜதீஸ்வரம், ஜானகி கௌத்வம், வர்ணம், ஸ்ரீ ஆண்டாள், சிவ ஸ்துதி, அஷ்தவித நாயகிகள், தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளையும் ஈடுபாட்டுடன் தனக்குள் இருக்கும் ஜீவனின் வெளிப்பாடாக கொண்டுவந்தமை பாராட்டுக்குரிய விடயம். ஜானகி கௌத்வம் போன்ற வித்தியாசமான உருப்படிகளை, பல நாட்டிய நூல்களை எழுதி வெளியிட்டவரும், பிரதிஷ்ராவின் குருவுமான   நாட்டிய விசாரத் ஜெயந்தி யோகராஜாவே உருவாக்கி, வடிவமைத்து வித்தியாசமான முறையில் நர்த்தகி பிரதிஷ்ரா ஆடலால் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாங்கு குருவின் நாட்டிய ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றது’ என சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்திருந்த நாட்டிய செல்வம் ஸ்ரீ சண்முக சுந்தரம் அவர்கள் தனது சிறப்புரையில் தெரிவித்திருந்தார். ‘சென்னை ஸ்ரீமதி ரோசினி; கணேஷின் பாடல், ஸ்ரீ. எம். பாலச்சந்தரரின் மிருதங்கம், சென்னை ஸ்ரீ முடிகொண்டான ரமேஷ் அவர்களின் வீணை இசை, ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசை, ஸ்ரீ பாலு ரகுராமனின் வயலின் இசை,  ஸ்ரீ தணிகவேல் அண்ணாமலையின் தவில் வாத்தியம், ஸ்ரீ சம்பத்குமார் பாலசுப்ரமணியத்தின் நாதஸ்வர இசையென பிரபல்யமான பக்கவாத்தியங்களின் கூட்டு முயற்சியுடன் பிரதிஷ்ராவின் நாட்டியம் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தமை மிகச்சிறப்பானது’ என மேலும் அவர் தெரிவித்தார்.

Continue Reading →

ஈழத் தமிழ்ச் சங்கம் (ஆஸ்திரேலியா) – முத்தமிழ் விழா 2016 பேச்சு இசைப் போட்டிகள்

ETA Tamil Competition 2016 – Information Pack அன்பான மாணவர்களே / பெற்றோர்களே, ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப்…

Continue Reading →

மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்!

அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும்…

Continue Reading →

கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் –

சேக்ஸ்பியர்இம்முறை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. ரிஷியின் நீள் கவிதை: குழந்தை கை மாயக்கோல்!
2. முனைவர் இர.மணிமேகலை கவிதைகள்: சமச்சீர், அகம், நானேயாகிப்போனவள், காலம்.
3. நேதாஜி: இப்போதெல்லாம், நாம் காந்தியவாதிகள்
4. மெய்யன் நடராஜ்: உதவாத உறவுகள்
5. வாணமதி: புரியாத மனிதர்கள்
6. ராஜகவி ராகுல்: 1,2,3, நீயெனும் பலூனும் நானெனும் மூச்சும்
7. மட்டுவில் ஞானக்குமாரன்: தமிழினி
8. கிரிகாசன் கவிதைகள்
9. ஆர்.பாலகிருஷ்ணன் – ஶ்ரீரங்கம்

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 8

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.

ஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற். சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.

இருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.

1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)
2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)

இதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள் டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும்.

Continue Reading →

அஞ்சலி: பிரின்ஸ் – சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞன்!

தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர்…

Continue Reading →

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. ‘தமிழ் ஆதர்ஸ்.காம்’ அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.


அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்:  கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும்  பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப  தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே  எனும் ஆசை –இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.

Continue Reading →