48வது இலக்கியச் சந்திப்பு – கனடா!

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில்
இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5

சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல்

காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்
•வரவேற்பும் சிற்றுண்டியும்
•ஓவியக் கண்காட்சி
•நூலக நிறுவனத்தின் கண்காட்சி
•புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

காலை 11:00: ஆரம்ப நிகழ்வு
•வரவேற்பும் மௌன வணக்கமும்
•பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு
•இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா

காலை 11:20 – பி.ப 1:00 : அமர்வு 1: இளையோர் உலகம்:  சமகாலப் பார்வைகள்
சாலினி | கவிதன் | ஶ்ரீரஞ்சனி

Continue Reading →

கவிதை: நாக்குகள்

ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.

’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.’
ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நாளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.

Continue Reading →

கவிதை: சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்

கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு….

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

Continue Reading →

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.

Continue Reading →

பிடித்த சிறுகதை – 1 – நந்தினி சேவியர்.

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் ‘எனக்குப் பிடித்த சிறுகதை’  என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும்.  – பதிவுகள் –

பிடித்த சிறுகதை – 01

கருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

” அணி “

ஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய  எஸ்.பொ. வின் கதை இது. அவரது ‘வீ ‘ தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது.  ‘இரத்தம் சிவப்புத்தான் ‘ என்பது போன்ற ஒரு தலைப்பில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ‘ இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.!

பிடித்த சிறுகதை – 02

மாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன்.  மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.

Continue Reading →

கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு!

– எனது  ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது)  அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா  (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். – வ.ந.கிரிதரன் –

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக ‘மந்திரி மனை’யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய ஶ்ரீலங்காவின் தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

வாசிப்பும், யோசிப்பும் 284: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 2 – ஈழகேசரியின் கம்பன் நினைவு இதழும், கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) ‘கவியரசன்’ கவிதையும்!

ஈழகேசரி 16.4.1944 ஞாயிற்றுக்கிழமைப் பிரதியை அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வாசித்தபொழுது அவதானித்த , என் கவனத்தைக் கவர்ந்த விடயங்கள் வருமாறு:

1. முதற்பக்கத்தில் ‘புதிய கல்வித்திட்டம்’ பற்றிய ‘விந்தியா விசாரணைச்சபையின் கல்வித்திட்டம் பற்றிய பரிந்துரை சம்பந்தமாகப் பிரபல வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் அபிப்பிராயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வருடாந்தப்பரிசளிப்பு நிகழ்வில் (7.4.44) அவர் ஆற்றிய உரையில் அவர் அந்நிய பாஷையில் ஊட்டப்படும் கல்வியினைச் சாடியிருக்கின்றார்.  அந்நிய பாஷையில் கல்வி கற்பதால் துரிதமாக அறிவு பெறவே முடியாது என்று அவர் கூறுகின்றார்.

‘விந்தியா’ விசாரணைச்சபை தாய்மொழி மூலம் கல்வியூட்ட வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பதுடன், பல்கலைக்கழகம் வர இலவசக் கல்வி கொடுபடவேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது என்பதையும் இச்செய்திமூலம் அறிகின்றோம்.

மேலும் அவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கியவரான உள்நாட்டு மந்திரி தமிழரான் அ.மகாதேவா என்பதையும் அறிகின்றோம். மேற்படி செய்திக்கு ஈடாக இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்தி ‘யுத்தம் நடக்கின்றது: இம்பாலில் கடும்போர்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதி கம்பர் ‘நினைவு இத’ழாகவும்  வெளியாகியுள்ளது என்பதையும் காண முடிகின்றது. ‘சூர்ப்பணகையின் காதல்’ என்னும் தலைப்பில் தென்மயிலை இ.நமச்சிவாயத்தின் கட்டுரை, இலங்கையர்கோனின் ‘கம்பராமாயணமும் நானும்’என்னும் கட்டுரை, க.செ.யின் ‘அளவான சிரிப்பு’, ‘சோதி’யின் ‘வால்மீகியும் கம்பனும்’, ச.அம்பிகைபாகனின் ‘இரு காதற் காட்சிகள்’, சோம.சரவணபவனின் ‘கம்பச் சக்கரவர்த்தி’, வ.கந்தையாவின் ‘கம்பன் கடவுட்கொள்கை’, மா.பீதாம்பரத்தின் ‘கம்பர் வந்தால்..’, இராஜ அரியரத்தினத்தின் ‘சான்றோர் கவி’, இணுவை வை.அநவரத விநாயகமூர்த்தியின் ‘கம்பன் கவிச்சுவை’, ஆசாமி என்பவரின் ‘தண்டனை’, பண்டிதர் அ.சோமசுந்தர ஐயரின் ‘கம்பர் கண்ட கசிவு’ ஆகிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 283: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 1 – பதின்ம வயது இளைஞன் ஒருவனின் புரட்சிக்கவிதை!

‘ஈழகேசரி’ (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் 7.11.1943 பதிப்பில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘கனல்’ என்னும் கவிதையானது ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரில் வெளியாகியுள்ளது. 1924இல் பிறந்த அ.ந.க.வுக்கு அப்பொழுது வயது  19. தனது பதின்ம வயதினிலேயே அவர் கவீந்திரன் என்னும் புனைபெயரைப் பாவித்துள்ளதை அறிய முடிகின்றது. ஈழகேசரி பத்திரிகைப் பிரதிகளை ‘நூலகம்’ அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

பின்னாளில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பரிணமித்த அ.ந.க.வின் பதின்ம வயதுக்கவிதையான ‘கனல்’ என்னும் இக்கவிதையிலேயே அதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண முடிகின்றது.

சண்டமாருதம் எழுந்ததாம். சகமெல்லாம் சூறையில் சுழன்றதாம். அச்சண்டமாருதத்தால் அண்டங்கள் யாவும் நடுங்கியதாம். மேலே ஆகாய மேகமும் அதனால் அலையும் நிலை ஏற்பட்டதாம். தொடர்ந்து எங்கும் கனல் தோன்றி மூடியதாம். எட்டுத் திசையும் எரியும் வகையிலான கனலது. யாவற்றையும் பொசுங்கிடச் செய்யும் பெரு நெருப்பு அது.

Continue Reading →

‘காலம்’ சஞ்சிகை நடாத்தும் கலந்துரையாடல்: இலக்கியமும் சினிமாவும்

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘யுத்தம் செய்’,’பிசாசு’, ‘துப்பறிவாளன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவரும், நடிகரும்,  எழுத்தாளருமாகிய திரு மிஷ்கின் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் ஏற்பாடாகி…

Continue Reading →