எழுத்தாளர் சீர்காழி தாஜ் ‘அமெரிக்கா’ தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதிய கடிதம்.

எழுத்தாளர் சீர்காழி தாஜின் 'அமெரிக்கா' தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதப்பட்ட கடிதம். – தமிழகத்தில் ‘ஸ்நேகா’ பதிப்பகத்தாரால் 1996இல் வெளியிடப்பட்ட எனது சிறுகதைகளும், குறுநாவல் ‘அமெரிக்கா’வும் அடங்கிய தொகுப்பான ‘அமெரிக்கா’ பற்றி எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனக்குத் தொகுப்பு பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்துக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இன்னுமொரு கடிதத்தினை எனது நல்லூர் நகர அமைப்பு ஆய்வு பற்றிய நூலான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’  பற்று எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்த கடிதமது. என்னை யாருக்குமே தமிழக்த்தில் தெரிந்திருக்கச் சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், என நூல்களை வாசித்துவிட்டுச் சீர்காழியிலிருந்து எனக்குக் கடிதங்கள் சில அனுப்பியிருந்தார் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அக்குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. அவரது இன்னுமொரு கடிதமான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய கடிதம் பின்னொரு சமயம் பதிவுகளில் பிரசுரமாகும். மேற்படி கடிதத்தில் ஒரு சில சொற்கள் தெளிவாகத் தெரியாததால், அவை கூறும் கருத்துக்கு இடையூறு செய்யாமலிருப்பதால் தவிர்த்திருக்கின்றேன்.  – வ.ந.கி –

‘மனித மூலம்’ தத்துவம் பேசினாலும் இனிக்கும் தகவல்கள் ஓர் ஆறுதல். ‘சுண்டெலிகள்’ அப்படியல்ல. மிக உயர்ந்த கதை வடிவம். சரியான குறியீட்டுத்தளத்தில் நேர்த்தியான பின்னல். உயரத்துக்குகாகப் போராடும் கீழ்த்தட்டு நசிந்த உடல்களைப் படம் பிடித்துக் காட்டும் முற்போக்குக் கதைவடிவம். ‘கணவன்’ நெகிழ்ச்சி கூடிய கதை.  மானிட வர்க்கத்திற்குச் சந்தேகம் ஒரு பாணி. குடிக்கிறபோதுதான் இந்தத் தடுமாற்றமென்பதில்லை. நல்ல நிலையில் கூட  நாலுகால் பாய்ச்சலில்  மூளையைப் பற்றும்.  கதை தெரிவு  தேடிகொண்டிருக்கிற வாதம் பெண்ணியத்தை மதிப்பதாக இருந்தது. ‘இல்லாள் வருவதற்கு ‘ என்றொரு சொற்சிலம்பு இந்தக் கதையில் ருசிக்க வைத்த நடை. ‘ஒரு முடிவும் விடிவும்’ யமுனா தி.ஜானகிராமனின் மோகமுள் ஜமுனாவை ஞாபகமூட்டியது.  மறு பிறவி போலும். பெண்கள் எப்பவும் பாவங்கள்தாம்.

Continue Reading →

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் – சில குறிப்புகள்

-March 19, 2014,  கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற ‘துரைவி’ அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. –

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.

Continue Reading →

PRESS STATEMENT 28 March 2014: Global Tamil Forum welcomes the latest UNHRC resolution on Sri Lanka

1_gtf1.jpg - 15.00 KbGlobal Tamil Forum (GTF) praises the adoption of the latest UN Human Rights Council (UNHRC) resolution on Sri Lanka, which is a significant and historic step towards achieving truth, accountability and justice for the victims of the armed conflict on the island. International community must make it absolutely clear to President Mahinda Rajapaksa and his government what the consequences will be if they do not co-operate and/or wilfully obstruct the investigation. Since inception GTF has consistently called for an independent international investigation of alleged war crimes and crimes against humanity committed by both sides to the armed conflict, which ended in May 2009. As an independent international investigative mechanism, the Office of the High Commissioner for Human Rights (OHCHR) has been authorised to conduct a comprehensive inquiry in Sri Lanka, which will investigate the allegations of war crimes and crimes against humanity committed by both the Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) forces in the last years of the civil war. Tamils across the world are thankful to the United States for leading the three resolutions on Sri Lanka at the UNHRC, since 2012, and to all those co-sponsors and voting members of the Council who supported the resolution. GTF is also grateful to the role the UK Government has played, particularly the UK Prime Minister, Rt. Hon Mr David Cameron MP, for raising international awareness of the current plight of the Tamil people in the island during the Commonwealth Heads of Government Meeting in Sri Lanka last November and since that time. We understand the hard work and commitment that has been undertaken by many diplomatic staff from the Foreign & Commonwealth Office, the United States State Department and elsewhere to make this resolution a success.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: முற்போக்கு இலக்கிய முன்னோடி தி.க.சி. மறைவுக்கு தமுஎகச இரங்கல்

திகசிமதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்…புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.

Continue Reading →

பயணத்தின் அடுத்த கட்டம்!

- வெங்கட் சாமிநாதன் -இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.  உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின்  வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க,  தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செறுக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செறுக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.

Continue Reading →

சிறுகதை: ஒரு மனிதன் பல கதைகள்!

கே.எஸ்.சுதாகர்மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும். இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

“அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன். 

Continue Reading →

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு

1_book_karunavu.jpg - 67.50 Kb சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக இருக்கிறது. இதையே ஆழியாளின் கவிதைத் தொகுப்பு தலைப்பாகக் கொண்டுள்ளது. ஒரு பெண் கருநாக்கு உள்ளவளாக இருப்பாளாயின் மற்றவர் பார்வையில் அவள் வசைக்கு உரியவளாகவும் இருந்துவிடுவாள். ஆழியாளின் ஏற்கெனவே வந்த ‘உரத்துப்பேச’, ‘துவிதம்’ ஆகிய கவிதைத் தலைப்புகளும் இதுபோல்தான் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்துள்ளன.    இத்தொகுதியில் 7 மொழிபெயர்ப்புக்கவிதைகளுடன் மொத்தம் 32 கவிதைகள் உள்ளன.  ஆழியாளின் ஏற்கெனவே வந்த தொகுப்புகளில் இருந்து சில வித்தியாசங்களையும் கவிதைகளின் இன்னொருகட்டப் பாய்ச்சலையும் இக்கவிதைகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் இத்தொகுப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேர்வும் அவற்றின் உள்ளடக்கமும். மற்றையது ஒட்டுமொத்தமாக இக்கவிதைகள் கலைத்துவ நேர்த்தியுடன் அமைந்திருப்பது.

Continue Reading →

சாணித்துகள் முட்கள்: அபிமானியின் “ நீர் கொத்தி மனிதர்கள் ” நாவல்

சுப்ரபாரதிமணியன்விளிம்புநிலை மக்களைப்பற்றியும்  குறிப்பாக தலித் மக்களைப்பற்றியும் கடந்த 20 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்  அபிமானி.  பலசமயங்களில் நம்பிக்கையே அவர்களின் ஊக்க சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காடுபவர்.   என்றைக்காவது ஒருநாள் போராட்டங்கள், எதிர்ப்புக்குரல்கள் மூலம் நல்ல வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியம் என்பதை சூசகாகமாக வெளிப்படுத்துபவர். கிராமங்களில் நிலம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது.இன்னும் கூட தலித்துகளில் பெரும்பான்மையோர்   விவசாயக் கூலிகள். ஆதிக்க ஜாதியினரின் பாலியல் கொடுமைகள் பற்றி நிறைய எழுதி உள்ளார்.  காவல்துறையினருக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள்  கொல்லப்படுகிற இந்தியச்சூழல்.  மனித உருவங்கள் சாதியின் கொடுமையான வன்முறையைப் புரிந்து கொள்ள இயலாத அவலங்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.

Continue Reading →

முகநூலிலொரு கலந்துரையாடல்: அறைகலனும், அறைக்கலனும்!

– அண்மையில் முகநூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தளபாடங்களுக்குப் பாவிக்கப்படும் – அறைக்கலன், அறைகலன் ஆகிய சொற்களைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து பலர் அதுபற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மிகுந்த பயனுள்ள கலந்துரையாடலது. அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் சிலவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். – பதிவுகள் –

முகநூலிலொரு கலந்துரையாடல்: அறைகலனும், அறைக்கலனும்!இனிவருங்காலங்களும்பெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture’ உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture’க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture’களுக்குத் தான் இடம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –

நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.

Continue Reading →