பல்துறை விற்பன்னர் கே. எஸ். பாலச்சந்திரன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்; நன்றி - வடலி– நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம்.  அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. – பதிவுகள் –

கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.

அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.

Continue Reading →

CMR: “அண்ணை றைற்” புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் காலமானார்!

கே.எஸ்.பாலச்சந்திரன்; நன்றி - வடலி– 27 பெப்ரவரி 2014,  கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன்  இன்று (26.02.14) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.  10 ஜூலை 1944 கரவெட்டியில்  பிறந்து இணுவிலில் புகுந்து; பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ்.பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.  தணியாத தாகம்  என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி  நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

Continue Reading →

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்

- முல்லைஅமுதன்ஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்’இளையநிலா’ எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!

தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல்.

நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்)
இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400
திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம்.

அறிவிப்பு இரண்டு:  படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.

Continue Reading →

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்!!

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்!வணக்கம். மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்த முன் வந்திருக்கின்றோம். தமிழ் மொழியை இந்த மண்ணில் வளர்த்து அடுத்த தலை முறையினரைத் தமிழர்களாக வாழ வைக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்திற்காக தமிழ் மொழிப் போட்டி ஒன்றை முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்த இருக்கின்றோம். தங்களுக்குத் தெரிந்த, தமிழில் ஆர்வமுள்ள மாணவர்களை இந்தப் போட்டியில் பங்கு பற்ற உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். தமிழ் இசைப் போட்டியும் நடைபெற இருக்கின்றது.

Continue Reading →

ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்

ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்பெப்ரவரி 18,2014- இராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். சென்ற மாதம்  உச்சநீதி மன்றம்  வீரப்பன் கூட்டாளிகள் 15 பேர் சமர்ப்பித்த  கருணைமனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டமைனயாகக் குறைக்க ஒரு முகாந்திரமாகக் கருதலாம் என்று கூறி அவர்களுக்கு வழங்கபட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்திருந்தது. அதே  போல  இராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மனுவையும் விசாரித்த தலைமை நீதியரசர்கள் சதாசிவம்,  இரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு  இந்த வரலாற்றுப் புகழ்படைத்த  தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் என்பதால்  குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433 ஏ  பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும்  இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

Continue Reading →

இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு!

நூல் அறிமுகம்: இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம் புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka  என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை  கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் – இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் – அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி  கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: நன்றி!

அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய   கலைச்சங்கம்: நன்றி!24-02-2014
அன்புடையீர்   வணக்கம். எமது   அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  கடந்த  23  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபொழுது  வருகைதந்து  சிறப்பித்த  சங்கத்தின்   செயற்குழு உறுப்பினர்களுக்கும்   சங்கத்தின்   உறுப்பினர்கள்   மற்றும்  அன்றைய  தினம் புதிய  உறுப்பினர்களாக  இணைந்துகொண்ட  அன்பர்களுக்கும்  நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய    திரு. முகுந்தராஜ்  திரு. சத்தியா  ஆகியோருக்கும்  மதிய உணவு  வழங்கி  உபசரித்த  செயற்குழு  உறுப்பினர்கள்  மற்றும்  திருமதி சாந்தினி  புவனேந்திரராஜா  அவர்கட்கும்  நன்கொடை  வழங்கிய  திருமதி பாலம்  இலக்ஷ்மணன்  அம்மையார்  அவர்கட்கும்  குறிப்பிட்ட அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  பற்றிய  செய்திகள்  வெளியிட்ட இணையத்தளங்கள்   மற்றும்    நேர்காணல்  கலந்துரையாடல்களை  நடத்திய வானொலி   நிகழ்ச்சி   தயாரிப்பாளர்களுக்கும்   அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை   நடத்துவதற்கு  மண்டப வசதியளித்த  பிரஸ்ட்டன்  இன்றர் கல்சரல்   நிலையத்தின்  நிருவாகத்தினருக்கும்  எமது   சங்கத்தின்    மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

Continue Reading →

கணையாழி விருது மற்றும் சாகித்ய அகாதமி விருதாளருக்குப் பாராட்டு விழா!

நாள்: 22.2.2014 சனிக்கிழமை மாலை 5.30 மணி  முதல் 8.00 மணி வரை |  இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு (திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம்  (சத்யா ஸ்டுடியோ எதிரில்) |     தலைமை: திரு நல்லி குப்புசாமி அவர்கள் |  விருது வழங்கிச் சிறப்புரை: நீதிநாயகம் திரு கே.சந்துரு அவர்கள் | வாழ்த்துரை: கவிஞர் கலாப்ரியா,  திரு எஸ்.ராமகிருஷ்ணன், திரு கு.கருணாநிதி (தலைவர் எஸ்கே.பி. கல்வி நிறுவனங்கள்) | ஏற்புரை: சாகித்ய அகாதமி விருதாளர் திரு ஜோ டி குரூஸ்

Continue Reading →

சென்னையில் ‘இந்தோ-பிரிட்டிஷ்’ நாட்டியமும் இசை விழாவும்!

இலங்கையில் கலைக்குடும்பத்தில் பிறந்த ‘நாட்டியக் கலாஜோதி’ செல்வி பார்கவி பரதன் தனது அனுபவம் மிக்க நர்த்தகி போன்ற பாவங்கள், ஜாலங்களால்; இந்தியக் கலைஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார்.தமிழ்நாட்டில்; நாட்டியம், இசை போன்ற கலைத்துறைகளில் பிரபல்யமாகப் பேசப்படும் ஸ்ரீமதி கலைமாமணி மாலதி டொமினிக் அவர்களின் பெருமுயற்சியில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்துடன் இன்டோ பிரிட்டிஷ் நாட்டிய, இசைவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முனைவர் ருக்மணிதேவி அருண்டேல் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் கலைமாமணி பாலமுரளிக் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, நடிகை கலைமாமணி பி.எஸ்.சச்சு போன்ற தமிழ்நாட்டின் மிகப்பெரும் பிரபல்யக் கலைஞர்களின் வருகை மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது. இத்தகைய பெரும் கலைஞர்களின் மத்தியில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளில் இலங்கையில் கலைக்குடும்பத்தில் பிறந்த ‘நாட்டியக் கலாஜோதி’ செல்வி பார்கவி பரதன் தனது அனுபவம் மிக்க நர்த்தகி போன்ற பாவங்கள், ஜாலங்களால்; இந்தியக் கலைஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார். தோற்றப் பொலிவோடு திகழ்ந்த செல்வி பார்கவி பரதன் புஷ்பாஞ்சலியை சங்கீரணசாப்லும், தில்லானாவை மிஸ்ரசாப்லும் தாளக்கட்டுப்பாடோடு வெளிப்படுத்தியவிதம் கலைஞர்களைப் பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. முருகப் பெருமான் மீதான அவர் ஆடிய வர்ணம், அபிநயமும், பாவமும், நடிப்பும் அனுபவம் மிக்கவர் போன்ற உணர்வை ஏற்படுத்தி ரசிகர்களை அனுபவிக்க வைத்தது. இணுவில் மண்ணிற்கு பெருமை தேடித்தந்த பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் அவர்கள் இயற்றிய பாடலை ஸ்ரீமதி கிரிஜா ராமசுவாமி அவர்களின் இசையிலும்;;, லண்டனிலிருந்து சென்ற எம். பாலச்சந்தினின் மிருதங்கத்திலும், விநோதினி பரதன் அவர்களின் நட்டுவாங்கத்திலும் அவளின் பாதங்கள் பகிர்ந்துகொண்ட ‘பதத்தின்’ விதம் மக்களை லயிக்க வைத்தது.

Continue Reading →