வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல (2)!

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்…..

வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத்  தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான்.

ராஜே: உங்களை யாரும்  சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு கதை கொடுங்க என்று.

வெ.சா எழுத்தாளர் ஆகணும் என்கிற விருப்பமே எனக்கு இருந்த தில்லை. ஆசை ஏற்பட்டது கிடையாது. நான் தான் கொஞ்ச நேரம் முன்னாலேயே சொன்னேனே. அந்தக் கதையைப் படித்ததும் எரிச்சலாக இருந்தது. “செல்லப்பா ஏன் தான் அந்தக் கதையைப் போட்டார்” என்று. ஆகையால் எழுதினேன். நான் கெட்டிக்காரன். அவரைத் திருத்தணும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.

Continue Reading →

www.dailymirror.lk: Attack on Viluthu head office condemned

“We support and encourage Ms. Shanthi Sachithanandan and the Viluthu team to continue their work on promoting social justice and women’s rights. A group of well-known civil society activists have strongly condemned the recent attack on the Colombo head office of Viluthu, a non-governmental organisation working to promote social justice and women’s rights. In a communiqué signed by 35 activists which was released today, the incident is described as a “cowardly act” that was “carried out in order to intimidate the organisation”. The signatories also expressed dismay that the incident occurred in a high security zone and called on the law enforcement agencies to take prompt action to apprehend those responsible for the attack. The attack took place between the night of January 23 and the early hours of January 24. According to the joint communiqué, “Viluthu’s work is focused on good governance and empowerment in the north and east of Sri Lanka in supporting the war-affected community. These kinds of attacks pose a threat to an open society that is founded on democratic values and the rule of law, and upholds freedom of speech and civic activism. It is such a society that we as Sri Lankans should nurture if we are to move towards reconciliation and a lasting peace.”

Continue Reading →

The Globe & Mail: Tamils await their peace dividend

For Tamils, the end of Sri Lanka’s civil war has brought no peace dividend; for Tamil women, peace has brought with it a continuation – and in some cases an intensification – of violence and insecurity. In the country’s predominantly Tamil-speaking north and east – a region half the size of Nova Scotia – tens of thousands of “war widows” have been living under the control of the central government and Sinhalese security forces since 2009 and the end of the civil war, whose last few months saw as many as 40,000 civilians killed.  There has been an alarming increase in gender-based violence, including domestic violence, within the Tamil community, as well as forced prostitution and trafficking. All of this is against a backdrop of credible evidence of wartime sexual violence by government forces, including video footage showing soldiers making sexual comments while handling dead, naked bodies of female suspected Tamil Tiger fighters, some with their hands bound. At the UN Human Rights Council session opening late next month, there is a chance to finally ensure accountability and to address the current state of insecurity; Sri Lanka and the international community, including Canada, should take it.Louice ArbourFor Tamils, the end of Sri Lanka’s civil war has brought no peace dividend; for Tamil women, peace has brought with it a continuation – and in some cases an intensification – of violence and insecurity. In the country’s predominantly Tamil-speaking north and east – a region half the size of Nova Scotia – tens of thousands of “war widows” have been living under the control of the central government and Sinhalese security forces since 2009 and the end of the civil war, whose last few months saw as many as 40,000 civilians killed.  There has been an alarming increase in gender-based violence, including domestic violence, within the Tamil community, as well as forced prostitution and trafficking. All of this is against a backdrop of credible evidence of wartime sexual violence by government forces, including video footage showing soldiers making sexual comments while handling dead, naked bodies of female suspected Tamil Tiger fighters, some with their hands bound. At the UN Human Rights Council session opening late next month, there is a chance to finally ensure accountability and to address the current state of insecurity; Sri Lanka and the international community, including Canada, should take it.

Continue Reading →

புதிய கவிஞர் சுமதியின் ‘தளிர்களின் சுமைகள்’ கவிதை நூல்

ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.
 
இலக்கியங்களின் அரசி கவிதை
 
கவிதையை இலக்கியங்களின் அரசி என்பார்கள். காலத்தால் முந்தைய இலக்கிய வடிவமும் அதுதான். நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாட்டு போன்ற வாய்மொழி இலக்கியங்கள் அதற்கு முந்தையவையாயினும் எழுதில் பதியப்பட்ட இலக்கியங்களில் அதுவே முந்தையது எனலாம். கம்பனும் இளங்கோவும் பாடி வைத்த அவற்றை இரசித்து மகிழாத இலக்கிய நெஞ்சங்கள் எதுவும் இருக்கமாட்டாது. எழுத்தறிவு இல்லாத காலங்களில் அவற்றைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. படித்தவர்களும் பழம் தமிழ் இலக்கியங்களை முழமையாக பொருள் உணர்ந்து இரசிப்பதற்கு பதவுரை, நயவுரை என நாட வேண்டியிருந்தது. ஆனால் பாரதியின் கவிதைகள்  தமிழ்க் கவிதை இலக்கிய படைப்புலகை முற்று முழுதாக மாற்றிப் போட்டன. இலகு தமிழில் எளிய நடையில் காதுக்கும் கருத்திற்கும் இனிய படைப்புலகின் முன்னோடி அவன்.

Continue Reading →

பேராசிரியர் கா. சிவத்தம்பி: பேராசிரியரின் எண்பதாவது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து ….

வணக்கம்!, மறைந்த மாமேதை பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களை நினைவுகூரும் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்.  தோழமையுடன்,க. நவம் பேராசிரியர் குறித்த கருத்துரையாடலும், அவரைக்…

Continue Reading →

பிரெஞ்சு – இந்தியப் பண்பாட்டுச் சந்திப்பு!

அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி  மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.  – நா.கிருஷ்ணா, பிரான்சு.

Continue Reading →

TruthOut.org: Sri Lankan General Admits War Crimes; US May Hold Crucial Supporting Evidence

Emanuel StoakesThe extrajudicial killing of civilians, surrendering soldiers and dissident journalists under the direction of the Sri Lankan government has been alleged by a former general in the Army who was extremely well-placed to comment on military activity during the island nation’s bloody civil war. The source, whose name is withheld for reasons of safety, had high-level security clearance and access to the flow of orders during the final days of the conflict. He made the assertions in legally binding testimony to a US lawyer in New York in 2010, recorded in an affidavit seen by Truthout. His statements hold particular significance because they appear to corroborate claims made in reports by prominent human rights organizations, international media and a report for the United Nations by a panel of experts published in 2011. The allegations also closely corroborate the accounts of other members of the Sri Lankan Army during the civil war. It is believed that representatives of the United States State Department have spoken to the source and hold a rich collection of testimonies and other evidence regarding alleged crimes committed during the civil war.

Continue Reading →

மூன்று நூல்களின் அறிமுகம்: ‘முதுசம்’, ‘ரோஜாக்கூட்டம்’, & ‘குள்ளன்’

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம்முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

அ.முத்துலிங்கம் நூல் ஆய்வுப் போட்டி!

திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும்  சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.  இவ்வாண்டு பரிசு பெற்ற  நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்க உளவாளி’. தமிழில் சுயசரிதைத்…

Continue Reading →

நூல் அறிமுகம்: பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்!

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்வெங்கட் சாமிநாதன்சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும். பவளமல்லி மரம் பூத்து  தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் அந்த மலர் பரப்பைக் காண்பதே ஒரு சுகம். விடி காலையில் பூத்து முடிந்து காலை ஏழு எட்டு மணி வரை மணம் பரப்பி, உதிர்ந்து கொண்டே இருக்கும். நந்தியா வட்டை பூக்க ஆரம்பித்தால் முற்றும் மலரவும் பின் வாடவும் வெகுநாட்கள் ஆகும். பூக்களுக்காக வரும் வண்ணத்திப் பூச்சிகள் வானில் மிதக்கும் பூக்களாகவே வரும் போகும் அவற்றின் இஷ்டத்துக்கு. நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு கீச் கீச் என்று ஓயாது கூவிக்கொண்டே வரும் ஜோடியாக. எப்போதும் அவை ஜோடியாகத் தான் வரும். ஆனால் அவை மரத்தின் கிளைகளுக்குள் எங்கெங்கோ உட்காரும். பிறகு வேறு கிளைக்குத் தாவும். ஓரிடத்தில் அவை ஒரு சில கணங்களே இருக்கும். கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். ஒரு இலையடர்ந்த கிளையிலிருந்து இன்னொரு இலையடர்ந்த கிளைக்கு எப்படித்தான் எப்படியோ குண்டு பாய்வது போல சட்டென பாய்ந்து பறக்கும். இடைப்பட்ட வெளியில் அதை பறக்கும் ரூபத்தில் காணமுடியாது. ஒரு கணத்தில் ஒரு கிளையில். மற்ற கணத்தில் இன்னொரு கிளையில்.

Continue Reading →