திரும்பிப்பார்க்கின்றேன் நாவன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!

திரும்பிப்பார்க்கின்றேன்  நா வன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!          சமகாலத்தில்  இலங்கையிலும்  தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளிலும் தினமும்  பேசப்படும்  ஊராக  விளங்கிவிட்டது  புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு  இதுவரை  சென்றிராத  தென்னிலங்கை   சிங்கள மக்களும்   மலையக  மக்களும்,  இந்த  ஊரின்  பெயரை  பதாதைகளில்  தாங்கியவாறு  வீதிக்கு  வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும்  இந்தத்தீவு  எதிரொலித்தது. ஜனாதிபதியை  வரவழைத்தது. இலங்கையில்   மூவினத்து  மாணவர்  சமுதாயமும்  உரத்துக்குரல் எழுப்பும்   அளவுக்கு  இந்தத்தீவு  ஊடகங்களில்  வெளிச்சமாகியது. இத்தனைக்கும்   அங்கு  ஒரு  வெளிச்சவீடு  நீண்ட  நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும்  மேற்பட்ட  பாடசாலைகள்,   20   இற்கும்  மேற்பட்ட குளங்களின்   பெயர்களுடன்    இடங்கள்.   20   இற்கும்  மேற்பட்ட சனசமூகநிலையங்கள்  ( வாசிகசாலைகள்   உட்பட)  பல  கோயில்கள் எழுந்திருக்கும்    புங்குடுதீவில்,   இதுவரையில்  இல்லாதது  ஒரு பொலிஸ் நிலையம்தான்.

கலை,  இலக்கியம்,  இசை,  ஊடகம்,  கல்வி,  திரைப்படம்,  நாடகம் முதலான   துறைகளில்  ஈடுபட்ட  பல  ஆளுமைகளின்   பூர்வீகமான பிரதேசம்   புங்குடுதீவு. புங்குடுதீவு  எனப்பெயர்  தோன்றியதற்கும்  பல  கதைகள்.  இங்கு புங்கைமரங்கள்    செறிந்து  வளர்ந்தது  காரணம்  என்றார்கள். தமிழ்நாட்டில் புங்குடியூர்  எங்கே  இருக்கிறது  என்பது தெரியவில்லை.   ஆனால்,  அங்கிருந்தும்  மக்கள்  இங்கு இடம்பெயர்ந்து    வந்திருக்கிறார்கள்.   தமிழக புங்குடியூரில் ஆங்கிலேயர்களுக்கு முற்பட்ட  காலத்தில்   இஸ்லாமியர்களினால் நிகழ்ந்த   படையெடுப்பினால்  மக்கள்  இடம்பெயர்ந்து வாழ்வதற்கு  இந்தத்தீவுக்கு   வந்தனராம்.   முன்னர்  பூங்கொடித்தீவு  என்றும் பெயர்   இருந்ததாம்.   ஒல்லாந்தர்  இங்கு  சங்கு  ஏற்றுமதி வர்த்தகத்திலும்   ஈடுபட்டிருக்கின்றனர்.   அதனால்  சங்குமாவடி என்றும்    இந்த  ஊருக்கு  முன்னர்  பெயர்  இருந்ததாம். சப்ததீவுகளுக்கு    மத்தியில்  புங்குடுதீவு  இருந்தமையால் –   இதற்கு Middle  Burg  என்றும்  ஒல்லாந்தர்  பெயர்  சூட்டியிருக்கின்றனர். இந்தத்தீவைச் சேர்ந்த  சில  எழுத்தாளர்கள்,  கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ,  ஆசிரியர்கள்,  பிரமுகர்கள்  எனது நண்பர்களாகவிருந்தும்  எனக்கு  இந்த  ஊருக்குச் செல்லும்   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 100: டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88! வாழ்த்துகிறோம்!

dominic_jeeva5.jpg - 15.40 Kbமூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88. ஈழத்தமிழ் இலக்கிய உலகில் அவருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம். தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக்கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.

அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு, அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார். கலை, இலக்கியம் மற்றும் சமூக, அரசியல் பற்றி ஆக்கங்களைப் பிரசுரித்தார். பிறமொழி ஆக்கங்களைத்தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். தன் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டார்.

Continue Reading →

படச்சுருள் – அறிமுகக்கூட்டம் – தமிழ்நாடு முழுவதும்…

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான படச்சுருள் மாத இதழை தமிழ்நாடு முழுக்க அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்யவிருக்கிறோம். உங்கள் பகுதியில் நீங்கள்…

Continue Reading →

ஆஸ்திரேலியாவில் பாலேந்திராவுடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர் க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமிழ் அவைக்காற்றுக்…

Continue Reading →

வெங்கட் சாமிநாதன் பக்கம்: தெருக்கூத்து (2)

- வெங்கட் சாமிநாதன் -

தமிழ்நாட்டின் கிராமீய நாட்டார் நாடகக்கலையும் இன்று தர்மபுரி, வட,தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் என்று தொணடைமண்டலம் சார்ந்த அண்மைப்பகுதிகளுக்குள் உட்பட்டுள்ள கலையான தெருக்கூத்து தனித்தன்மை வாய்ந்த ஒன்று, இதற்கு இணையானது நம் உபகண்டத்தில் வேறெங்கிலும் இல்லை. அப்படி இன்னொன்று இருந்தாலும், அதைப்பற்றி நாம் கேள்விப்படவில்லை. இப்படிச் சொல்வது தமிழ் மீதுள்ள அதீத பற்றின் வெளிப்பாடு எனத் தோன்றக்கூடும். இதை நம்புவது கடினமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு.

இக்கலையின் பல பரிமாண விஸ்தாரமும், அந்த விஸ்தாரம் இயங்கும் பல தளங்களும் இன்னும் தமிழர்களாலேயே அறியப்படவில்லை, அல்லது அவர்களுக்கே பரிச்சயப் படுத்தப்படவில்லை, வெளி உலகத்துக்கோ, இதைப் பற்றிய பரிச்சயம் இன்னும் குறைவானது. அதன் மண்ணைவிட்டு, அது இயங்கும் சூழலைவிட்டு இக்கலை வெளியே எடுத்துச்செல்லப்பட்ட அரிய தருணங்களிலும், இதர பிராந்தீயங்களின் வெகுவாய் விளம்பரப் படுத்தப்பட்ட நாட்டார் நாடக வடிவங்களோடு ஒப்பிடுகையில், தலைநகர் தில்லியில் நிகழ்த்தப்படும்  நாட்டார்கலை விழாக்களிலாகட்டும், பாரிஸில் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவிலாகட்டும், அது நிகழ்த்தப்படும் ஒரு மணிநேர நிகழ்வில், தெருக்கூத்து பரிதாபகரமாய் ஏற்றுமதிக்கான ஒரு தயாரிப்பாய், ப்ரயாகையில் சிலர்    குளிப்பதைக் காட்டி இதுதான் கும்பமேளா என்று சொல்லும் விடியோ துணுக்குகளைப் போன்று குறுகிச் சிறுத்துவிடும் பரிதாபகரம் தான். இதனால் இயற்கையாகவே தெருக்கூத்தின் பலவண்ணக் கோலம் பற்றிய அதன்  பரந்த வீச்சைப் பற்றிய  விவரம் அறியாத  வாசகர்களிடம் (கவலையற்று அறியாமையில் திளைக்கும் தமிழ் பண்பாட்டுச் சூழலும், நகர்புற மக்கள்திரளும் இதில் அடங்குவர்) நான் பேசுகையில் என் நம்பகத்தன்மையும் பலத்த அடி வாங்கும்.

Continue Reading →

சிறுகதை–திணைகள்

kamaladevi599.jpg - 16.73 Kbமாலையானாலே என்ன அடைமழை இது ! என்று சிங்கப்பூரர்களில் பலரும் சலித்துக் கொள்ளுமளவுக்கு இன்று நிலைமை  இல்லை.. கருத்த மேகங்களின் சில்லென்று குளிர்ந்த காற்று, ,எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் ,என்று பயம் காட்டும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்று காணாமல் போயிருந்தது. உண்மையிலேயே வானம் பொய்த்துவிட்டது. தினமும் சோவென்று கொட்டிகொண்டிருக்கும்  டிசம்பர் மாதத்து அடைமழை போன இடம் தெரியவில்லை.  பளீரென்ற மஞ்சள் தகடாய் வானம் அழகு காட்டிக்கொண்டிருந்தது.

அடுத்தமாதம் இமயமலைக்குப் போகும் ஒரு குழுவோடு பயணம் என்பதால், தினமும் நடைப்பயிற்சிக்கு இப்பொழுதே பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. டெல்லிவரை விமானம், அடுத்து, வாகனப்பயணம் தான் என்றாலும் ஆங்காங்கே சிறுசிறு மலைகள்,குன்றுகளின் மேலுள்ள கடவுள்கள   தரிசிக்க  இந்நடைப்பயிற்சி அத்தியாவசியம் என்று ஏற்பாட்டாளர் வலியுறுத்தியிராவிட்டால்,  ஒருபோதும்   இந்த அப்பியாசத்துக்கு ராஜசேகர் முன் வந்திருக்க மாட்டான். புக்கித்தீமா  காட்டில் நடைப்பயிற்சி தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது.ஆனால் இன்றைய நடையின் சுகம் இதுவரை அவன் அனுபவித்தறியாதது  .
     
நடக்க நடக்க அவ்வளவு சுகமாக இருந்தது. காற்று என்னமோ கட்டின மனைவியாய், அவனைத் தழுவித் தழுவி மிருதுவாய் உடலுக்குள் ஊடுருவிய சுகத்துக்கு  மனசெல்லாம் பஞ்சுப்பட்டாய் பறந்து கொண்டிருந்தது? இரண்டு கைகளையும் நீட்டியபடியே காற்றை  நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.பரவசத்தில் கிளுகிளுவென்று நெஞ்சின் ரோமக்கால் கூட  சிலிர்த்துப்போனது.காற்றுக்கு ஏது வேலி? காற்றை  கட்டியணைக்க முடியுமா என்றெல்லாம் அவனால் யோசிக்க முடியவில்லை.  காற்று அவனது அனைத்து உணர்வுகளையும் அப்படிக் கவ்வி பிடித்திருந்தது.

Continue Reading →

ஆய்வு: திராவிட மொழி வளர்ச்சியில் ஓரெழுத்தொரு மொழி

- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும்  மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.

திராவிட மொழியும் தமிழும்

 திராவிட மொழி பல்வேறு குழுக்களாக அமைந்த அமைப்பாகும். அதில் பல்வேறு மொழிகள் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறமைந்த மொழிகளை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாகப் பகுத்துக் கூறுவர். இவற்றில் தென்திராவிட மொழியின் வரிசையில் முதன்மையாகவும், முக்கிய இடம் உள்ளதாகவும் குறிப்பிடுவது தமிழ்மொழியே ஆகும்.

Continue Reading →

ஆய்வு: திணைக்கோட்பாடு நோக்கில் புறத்திணையியல் புறநானூறு

முன்னுரை :

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்

  மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
  சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்
 (தொல். 1000)

என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.

Continue Reading →

சிறுகதை: ’பாரதி’யைப் பார்க்கவேண்டும் போல்…..

‘அநாமிகா’”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”

_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும்,  விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும்  ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள் (10)

- பிச்சினிக்காடு இளங்கோ காற்று மாறியடிக்கும்போது
விழுமிய வேர்களை
விட்டுவிடாதே கிராமமே

திறந்த வெளியில்
ஆடைமாற்றும் போதும்
மானம் விட்டுவிடாத
மறத்தி மாதிரி இரு       -வைரமுத்து –   
        
படிப்பைப்பற்றிக்கவலைப்படாமல் உடல் வளத்தைமட்டுமே கவலைப்பட்ட ஒரு சமுதாயச்சூழலில் படித்தது, படிப்புக்குக் கவனம் செலுத்தியது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. ஐந்து வகுப்பை பிச்சினிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடித்து, ஆறாவது வகுப்பில் பட்டுக்கோட்டை அரசு கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.உறவினர் வீட்டில் தங்கிப்படிக்கவேண்டும். கண்டியன்தெருவில்தான் மறைந்த மாமா வாசிலிங்கம் பட்டுமாமி வீட்டில் தங்கிப்படித்தேன். பின்பு மயில்பாலையத்தில் தாத்தா செவிட்டு ரெத்தினம் அவர்கள் வீட்டில் தங்கிப்படித்தேன். இந்தக்காலங்களில் என்னைக் கல்வியில் நானேதான் ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியின் எந்தப்போட்டியிலும் (விளையாட்டைத்தவிர)கலந்துகொள்ளும் மாணவனாக நானில்லை. அதிக மதிப்பெண் வாங்குகிற மாணவனாக நான் தென்படவில்லை. ஆனால் படிப்புக்காக அதிகம் கவலைப்படுகிற மாணவனாக நான் இருந்தேன். அதுதான் இன்றுவரை என்னைக்காப்பாற்றி வந்திருக்கிறது. ஏழாவது வகுப்பில் படிக்கும்போது விளையாட்டுப்போட்டியில் இரண்டு பரிசுகள் வாங்கினேன். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் எஸ்.D. சோமசுந்தரம் அவர்கள் பரிசுகள் வழங்கினார் . அவர் முன்னிலையில் சென்னை ராஜாஜி ஹாலில் உவமைக்கவிஞர் சுரதாவின்  மணிவிழாவில் கலந்துகொண்டு கவிதை பாடியதும், பிச்சினிக்காட்டிலேயே அவரைக்  கவிதையில் வரவேற்றதும் காலமும் நானும் கைகோத்து வந்ததன் பதிவு.

Continue Reading →