பன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்! அறிவிப்பும் அழைப்பும்!

கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.  நல்ல பயனுள்ள அறிவுப்பரிமாற்றத்திற்கு வருகையும் கட்டுரையும் தருவீர்களாக/ தொடர்புக்கு அழைக்கவும்:  9283275782

Continue Reading →

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் “ஐயோ” ஒரு பார்வை

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752  முன்னுரைமுன்னுரை
காடுகளில் வெகு தொலைவில் இருக்கும் இனத்தாரைக் கூக்குரலிட்டு அழைக்கும் போது ஓ… என்கிற சொல்லே அதீதப் பயனளித்தை அறிந்து உணர்ந்த ஆதித்தமிழன் உருவாக்கிய குறிப்பு மொழியே. ஐயோ. (Oh…My.. God) அசாதாரண  கொடூரமான மற்றும் துன்பகரமான சூழ்நிலையிலும். அபயம் வேண்டி ஆண்டவனை, தலைவனை, பெற்றோரை வியத்து அழைத்து முறையிடுவது தமிழர் தம் வழக்கம் மண்டையில் குட்டு பட்டாலும் உதடுகள் சொல் வார்த்தை ஐயோ.

ஐயோ – பொருள்
ஐயோ என்ற சொல் ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பட்ட கூக்குரலாகும். ஐயோ – அபாயகரமான சூழ்நிலயில் அபயம் வேண்டி ஒலிக்கப்பட்ட குறிப்பு மொழியாகும். இரக்கம், ஆக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிக்களை தம்மால் கட்டுபடுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதனில் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை. ஐயோ  என்பது எமனின் மனைவியின் பெயராகும்.

சங்ககாலம்
ஐயோ! ஐயமே! வேண்டாம்! சங்ககால தொட்டு ஐயோ! பல பொருளில் பயன்பட்டு வருகின்றது அதன் நீளமும் அகலமும் மிகப் பெரிது! ஐயோ என்ற சொல் தமிழ்மொழி   தோன்றியதிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐயோ, இங்கே வாருங்களேன் என்ற ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பப்பட்டும் கூக்குரலாகும். வலியைக் குறிக்க சங்ககால ஐயோ! கையறு நிலை அடைந்து தவிக்கும் போது பயன்படுத்தும் சொல்லாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் புறநானூற்றுப் பாடல் 255ல் அவலத்தைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளது.

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் ! தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்!

அசோக் - வாசகர்சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு, மெல்பனில் கடந்த ஆண்டு ( 2019 ) நடந்தவேளையில் நான் முதல் முதலில் சந்தித்த இலக்கிய வாசகர் அசோக். எமது 19 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில், இவர் மறைந்த தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக்கிராமத்தின் கதை நாவலைப்பற்றி பேசினார். தமிழகம்  – மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மெல்பன் வாசியாகிவிட்டவர். தன்னை தீவிர வாசகனாக்கியவர், மதுரையில் தனது தமிழ் ஆசானாக விளங்கியவரான  குமரேசன் அய்யா என நன்றியோடு சொல்லிவருகிறார்.

சமூகத்தில் ஒரு நல்லபிரஜை உருவாவதற்கு பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நல்ல உறவுகளும் சிறந்த நட்புகளும், படிக்கும் புத்தகங்களும்தான் பிரதான காரணம் என்பார்கள். பள்ளிப்பருவத்தில் அசோக்கின் தமிழ் ஆர்வத்தை அவதானித்த ஆசான் குமரேசன், பரீட்சைகளில் தமிழ்ப்பாடத்தில் அசோக் சிறந்த மதிப்பெண்கள் பெறும்போதெல்லாம், பேனை வாங்கி பரிசளித்து பாராட்டி ஊக்குவித்தவர். இதனை இங்கு அசோக் நினைவூட்டுவதன் ஊடாக அன்றைய ஆசிரியர்களின் அடிப்படை இயல்புகளை இக்காலத்தலைமுறையினருக்கும் இக்கால ஆசிரியர்களுக்கும் நல்லதோர் செய்தியாகத்  தருகின்றார். அந்த ஆசான், அசோக்கிற்கு  செய்யுள் மற்றும் சங்கத்தமிழ் பாடல்களையும் இலக்கியப்பாடல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளார்.

Continue Reading →

ஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இந்தியா ஒரு பன்மொழி பண்பாடு கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சில தனித்த பண்பாடு, கலாச்சாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் 36  வகையான‌ பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனா். பழங்குடி மக்களுக்கு அடையாளங்களாக விளங்கக்கூடியவை அவா்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைதான். அவை அவ்வினத்தின் அடிப்படைப் பண்புகளாக விளங்குகின்றன. மொழி-பண்பாடு-சமூகம் இம்மூன்றையும் இணைத்து ஆய்வு செய்கின்ற போதுதான் அது ஓா் இனத்தின் முழுமையான ஆய்வாகக் கருதப்பெறும். பழங்குடி மக்களைப் பற்றியும் அவா்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வும் இன்று முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பழங்குடி மக்கள் தங்கள் தனித்த அடையாளங்களை இழந்து வருகின்றனா். குறிப்பாக கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா் சமீபகாலமாக தங்கள் பழங்குடியினத்துக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா். அந்த வகையில் இப்பழங்குடிமக்கள் இழந்த பண்பாட்டு கூறுகளை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இருளா் பழங்குடியினா்
இருளா் பழங்குடியினா் தமிழகத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக நீலகிரி மலைத்தொடா், கூடலூர், கோவை மலைப்பகுதிகள், விழுப்புரம், சேலம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கா்நாடகத்தில் குடகு மலைப்பகுதி, தா்மபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக எல்லைகளிலும், கேரளத்தில் பாலக்காடு, மூணாறு, அட்டப்பாடி, ஆணைக்கட்டி மற்றும் மலைசார்ந்த பகுதிகளிலும் பெருமளவு வசிக்கின்றனா். இருளா் என்ற பெயா் இவா்களுக்கு தொடக்கத்தில் இல்லை, சங்க காலத்தில் வேடா் என்றே இவா்கள் அழைக்கப்பட்டனா். காலப்போக்கில் வெவ்வேறு பெயா்கள் இவா்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி வில்லியன், வெல்லியன், மலநாடு இருளா், மலைதேச இருளா், வேட்டக்கார இருளா், ஊராளி இருளா் என்றெல்லாம் இவா்கள் அழைக்கப்ட்டனா். இருளா் என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருளடா்ந்த காடுகளில் இவா்கள் வாழ்வதால் இருளா் என்ற பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் சிலா். இருளுக்கு ஒப்பான கருத்த மேனி நிறம் கொண்டதால் இவா்களுக்கு இந்த பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் வேறு சிலா். மேற்காணும் விளக்கத்தைத்தான் மானுடவியல் ஆய்வாளா் எட்கா் தா்ஸ்டனும் அளிக்கிறார்.

Continue Reading →

திருப்பூர் சக்தி விருது 2020

திருப்பூர் சக்தி  விருது  2020

திருப்பூர் சக்தி  விருது  2020 (ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, ,   திருப்பூர்   641 604 / 99940 79600.)

வணக்கம் . வாழ்த்துக்கள். திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.

Continue Reading →

கவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)

கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1)
ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை.
ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?

Continue Reading →

சிறுகதை: நேர்காணல்

முருகபூபதிபேரின்பத்தார் என்ற பேரின்பநாயகத்திற்கு தற்போது அந்த பொதுத்தொண்டின் மீது  வெறுப்பு வந்துவிட்டது. அவர் சில பொதுப்பணிகளில் ஈடுபடும்  தன்னார்வத் தொண்டர்.   ஆனால்,  குறிப்பிட்ட அந்தத் தொண்டின் மீதுதான் அவருக்கு மனக்குறை வந்துவிட்டது. அக்குறை வயிற்றில் அல்சர் வருமளவுக்கு மன அழுத்தம் கொடுத்துவிட்டது.

இரவில் தூக்கமும் அல்சரினால் அடிக்கடி கலைந்துவிடும்.  தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழியிலும்  எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவும்  நல்ல  ஆற்றல் உள்ளவர்.

ஊரில் வசதிபடைத்தவர்கள் இறந்துவிட்டால், பத்திரிகை, வானொலிக்கு மரண அறிவித்தல் எழுதிக்கொடுப்பது முதல், அந்தியேட்டி வரும் வேளையில் கல்வெட்டு எழுதிக்கொடுப்பதும் அவரது வேதனம் ஏதும் இல்லாத தொண்டு.

எண்பதுக்குப்பின்னர் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள்,  கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சென்று வதிவிடம் பெற்று –  எவரேனும் அங்கே  இறந்துவிட்டால், பேரின்பத்தாரைத்தான் தொடர்புகொள்வார்கள்.

தேமதுரத் தமிழோசை அங்கெல்லாம் பரவினாலும்,  இந்த கல்வெட்டு  கலாசாரத்தையும் தம்மோடு எடுத்துச்சென்ற ஈழத்து தமிழர்களுக்கு எவ்வாறு கல்வெட்டு எழுதுவது என்பதை அங்கே யாரும் பயிற்றுவிக்கவில்லையோ..? என்று தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருந்துபவர்.

கடல் கடந்து  சென்ற பலரது மரணச்சடங்குகளை ஊரிலிருந்து ஸ்கைப்பிலும்,  தபாலில் வந்த இறுவட்டிலிருந்தும் பார்த்திருப்பவர்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): “அறிந்தால் அறிவியடி அருவியே!”

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!

Continue Reading →

பன்ஸாயி…! காதல் பறவைகள்! பாடும் கவிதைகள்! தீராததோ? ஆறாததோ

பன்ஸாயி...! காதல் பறவைகள்! பாடும் கவிதைகள்! தீராததோ? ஆறாததோ

“எந்தெந்த நாடும் நமது.
சொந்தம் என்றாகும் பொழுது.
அன்பினில் ஆடும் மனது.
அத்தனை பேர்க்கும்
இனிது!

அமுது!
புதிது!”
– கவிஞர் வாலி

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.

இப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். ‘அலைகள்’ மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் ‘புகுந்த வீடு’. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.

எம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் ‘பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்’ காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.

Continue Reading →

நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)

சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா)சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.

பார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who’s Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.

The Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.

Continue Reading →