கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ்ப்புதினங்கள்

குரு அரவிந்தன் இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே!

Continue Reading →

கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ் புதினங்கள்

‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு..

 'இலக்கு'வின் இந்த மாத நிகழ்வு..வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. 02.12.2014 – செவ்வாய்க் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு, (அழைப்பில் திங்கட்கிழமை என்று தவறாக அச்சாகி இருக்கிறது,,) மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. அழைப்பை இணைப்பில் காண வேண்டுகிறோம். வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்..

தங்கள் வருகையை எதிர் நோக்கும்..
ப. சிபி நாராயண். , ப. யாழினி

Continue Reading →

அவுஸ்திரேலியா: தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு!

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  வருடாந்தம்  தமிழ் எழுத்தாளர்   விழாவை  கலை  இலக்கிய  ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்   அனுபவப்பகிர்வு  நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த   காலங்களில்  சிறுகதை,  கவிதை …

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 67: எஸ்.பொ எழுதிய கடிதமொன்று….

வாசிப்பும், யோசிப்பும் 67: எஸ்.பொ எழுதிய கடிதமொன்று....2000ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய எஸ்.பொ. அவர்கள் உலகப் பயணமொன்றினை ஆரம்பித்து டொராண்டோ வந்திருந்தார். வருவதற்கு முன்னர்  என் முகவரிக்குக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். நான் அதுவரையில் எஸ்.பொ. அவர்களை நேரில் சந்தித்ததில்லை. அவரது படைப்புகள்வாயிலாகவே எனது அவருடனான அறிமுகமிருந்தது. அக்கடிதமானது அவரது பெருந்தன்மையினையும், இளம் எழுத்தாளர்களைச் சந்திக்க அவர் கொண்டிருந்த விருப்பினையும் புலப்படுத்தியது. இதனால் அவர் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதற்கு முன்னர் அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் இணைந்து வெளியிட்டிருந்த ‘பனியும் பனையும்’ தொகுப்பு நூலில் எனது சிறுகதையான ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ சிறுகதையினையும் சேர்த்திருந்தார். அவ்விதம் அவர் அந்தச்சிறுகதையினை அத்தொகுப்பில் உள்ளடக்கியிருந்த விடயம் எனக்கு அந்த நூல் வெளிவந்து பல வருடங்களுக்குப் பின்னரே தெரிய வந்தது. அச்சிறுகதை அத்தொகுப்பில் வெளிவந்ததற்குக் காரணகர்த்தாக்கள் எஸ்.பொ.வும், இந்திரா பார்த்தசாரதியுமே என்று நினைக்கின்றேன். அத்தொகுப்பு மூலம் எஸ்.பொ. புலம் பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு மிகப்பெரிய, ஆக்கபூர்வமான பங்களிப்பினை  ஆற்றியிருக்கின்றாரென்பதே என் கருத்து.

Continue Reading →

இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்…

இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்...இந்த மாதம் இற்றைத் திங்கள் நிகழ்வு: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

நிகழ்ச்சி நிரல்:  தமிழகத்தில் கனிமவள, தாது மணல், ஆற்றுமணல் கொள்ளைகளும் சகாயம் ஆய்வுக்குழு விவகாரமும்: உண்மை என்ன?

சிறப்புப் பேச்சாளர்கள்: முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிமவளக் கொள்ளை சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் | சிவ இளங்கோ: தலைவர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் | தமிழகச் சிறைகளில் கைதிகளின் அவல நிலை: உமர்கயான். தமிழினியன். சே.ஜெ , ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: இயக்குனர் ருத்ரைய்யா நினைவுக் கூட்டம்…

30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை. நினைவை பகிர்ந்துக் கொள்பவர்கள்:வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்),…

Continue Reading →

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.

espo59.jpg - 60.16 Kb

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்  26-11-2014 மறைந்தார்.  கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த –  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது. எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு –  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன். மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  –  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து அவரை    பிரதம பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு. 1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.   அந்த உறவு எவ்வாறு   அமைந்தது    என்பதுபற்றிய  தகவல்களை  இந்தத் தொடர்   ஆக்கத்தில்    பதிவுசெய்யவில்லை. கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறைய   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு  எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் –  அவர்தம்   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது. மூத்த    இலக்கிய  சகா  எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின்  துயரத்தில் பங்கேற்று   இந்த   ஆக்கத்தை  தொடருகின்றேன்.

Continue Reading →

அனைவரையும் நினைவு கூர்வோம்!

அனைவரையும் நினைவு கூர்வோம்!அறம் வெல்லுமோ இல்லையோ என்று கவலைப்படுவதற்குப் பதில் நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இவ்வளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசு ஏன் வென்றது? என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. சர்வதேச, பிராந்திய அரசியலைத் தமக்குச் சார்பாகத் தந்திரமாகக் கையாண்டார்கள். நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டோம். தமிழ் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள், பிளவுகள்தாம் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இரண்டு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வேறானவையாக இருந்த போதிலும், ஆட்சிக் கட்டிலிருக்கும்போது அக்கட்சியினர் தமிழர்களுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும், சிறீலங்கா கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன். சிங்களம் ஆட்சி மொழியாகி தமிழர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் காலத்திலென்றால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்டு,  83 இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வன்முறைகள் தமிழர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டன, இருவர் ஆட்சியிலும் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.

Continue Reading →

இனிய நண்பர் செல்வா கனகநாயகம்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் குரு அரவிந்தன் இனிய நண்பர் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் திடீர் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மேடைகளில் அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்திருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தேவை அறிந்து பின்னாளில் மேடைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார்.  எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரைகளைக் கேட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றேன். எனக்கு அவர் அறிமுகமானது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம்தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நூல் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பேராசிரியர் செல்லவா கனகநாயகத்தைக் கேட்டிருந்தது மட்டுமல்ல அந்த நூலை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுபப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாள் மாலை நேரம் 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.

Continue Reading →