வாசிப்பும் , யோசிப்பும் 321 : எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய வீரகேசரி மதிப்புரை!

அண்மையில் சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் அனந்த அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எனது ஆய்வு நூலான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய நூல் மதிப்புரையொன்றினை 29.12.2018 வெளியான…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 321: இலக்கணமும், ஜெயமோகனும்! நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!

அண்மையில்  எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவில் கண்ட கேள்வி பதிலொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.  கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் இலக்கணம் பற்றியும், அவ்வப்போது இலக்கணம் மீறப்படுவது பற்றியும், பின்னர் இவ்விதம் மீறப்பட்டவற்றை இலக்கணம் உள் வாங்குவதும் பற்றிய தன் எண்ணங்களை ஜெயமோகன் மிகவும் எளிமையாக ஆனால் தர்க்கச்சிறப்புடன் எடுத்துரைத்திருக்கின்றார. அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


கேள்வி பதில் – 60  
இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? –  கேவிஆர். –

ஜெயமோகன்ஜெயமோகனின் பதில்:ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது. பண்டைய படைப்புகளைப் பற்றி நாம் ஊகங்களால்தான் விவாதிக்க இயலும். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சாதாரணமாக ஒப்பிட்டால்கூட தொல்காப்பிய இலக்கணங்களை சங்கப்பாடல்கள் ஒரு பொருட்டாகவே கொண்டிருப்பனவல்ல என்பதையும் சொல்லப்போனால் ஆரம்பகால சங்கப்பாடல்களை ஒட்டியே தொல்காப்பியம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியும். தொல்காப்பியம் கண்டிப்பாக நற்றிணை குறுந்தொகை புறநாநூற்றுப் பாடல்களின் காலத்துக்குப் பிற்பட்டது. உதாரணமாக சங்கப்பாடல்களில் தொல்காப்பியத்தில் உள்ள ஒட்டகம் பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியத்தைவிட சங்கப்பாடல்களில் வடமொழிச்சொற்கள் மிகக் குறைவு. மேலும் பிறப்பு அடிப்படையினாலான சமூகப் பிரிவினை சங்க காலத்தில் வலுவாக இருந்தது என்றாலும் இழிசினர் என ஒருவகை மக்களை வகுத்த முதல் மூலநூல் தொல்காப்பியமே. பேராசிரியர் ஜேசுதாசன் இதை மிக விரிவாகவே விளக்குவதுண்டு. கைக்கிளையும் பெருந்திணையும் [ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம்] இழிசினருக்கு [ஏவலர், வினைவலர்] உரியதென தொல்காப்பியர் வகுத்ததை சங்கப்பாடல்கள் ஏற்றிருந்தால் மாற்பித்தியாருக்கும் நக்கண்னையாருக்கும் எப்படி புறநாநூறில் இடம் வந்தது? கொல்லனும் குறவனும் எழுதிய நம் பெருமரபு எப்படி வினைவலனை இழிசினனாகக் கருதியிருக்க முடியும்?

சங்க இலக்கியங்களின் திணை, துறை பகுப்பு மட்டுமல்ல அகம், புறம் பகுப்புகூட மிகவும் ‘குத்துமதிப்பாகவே’ செய்யப்பட்டுள்லது. உதாரணமாக புறநாநூறில்வரும் மாற்பித்தியாரின் பாடல்களை மருதம் திணையில் குறுந்தொகையில் சேர்த்தால் என்ன இலக்கணப்பிழை வரும்? பல பாடல்கலை வரிகளை மட்டும்வைத்துப் பார்த்தால் திணை மாற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். திணையை வகுத்த உடனேயே திணைமயக்கம் என்று ஒரு விதிமீறலை நம் மரபு அனுமதித்தது. இலக்கணத்தை வகுத்ததுமே ‘வழூஉ‘ என அதற்கு மாறானதையும் அங்கீகரித்தது. ‘பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளான’ சிலப்பதிகாரத்தின் வடிவம் அதற்கு முன் இல்லை. சிலப்பதிகாரமே அதை நம் மரபில் உருவாக்கியளித்தது. கம்பனின் சொற்புணர்ச்சி முறைகளின் பல்லாயிரக்கணக்கான புதியவழிகளை அதற்கு முந்தைய நூல்களில் காண முடியாது. ஒட்டக்கூத்தர் அதனாலேயே கம்பரைக் கவிஞராக ஏற்க மறுத்தார்.

Continue Reading →

மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்!

மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்! “யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்” என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து, பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.

வடமராட்சியில் பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர். 1977 ஆம் ஆண்டில் இவர் கல்லூரி மாணவன். தீவிர வாசிப்பில் ஈடுபாடும் இலக்கியத்தின் பால் நேசிப்பும் மாணவர்களுக்கு வருமாயின் அதற்கு ஆசிரியர்கள், அல்லது குடும்ப உறவினர்கள்தான் காரணமாகியிருக்கவேண்டும். இக்காலத்தில் மாணவர்களை இலக்கியத்துறையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களை காண்பது அரிது. இரத்தினவேலோன் தனது 19 வயதில், மாணவப்பருவத்தில் தினகரன் வாரமஞ்சரியில் புரளும் அத்தியாயம் என்ற சிறுகதையை எழுதி, அது வெளிவந்தகாலத்தில் எவ்வளவு புலகாங்கிதம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்துவிடலாம். அச்சில் வெளிவந்த முதல்கதையை அவரே எத்தனை முறை மீண்டும் படித்துப்பார்த்திருப்பார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், பின்னாளில் அவரது எழுத்துக்களையும் ஒரு மாணவி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்வார் என்பதை எழுதத் தொடங்கிய காலத்தில் இவர் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். செல்வி எம். திருமகள் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி, தமிழ் சிறப்புக்கலைமாணித் தேர்வின் நிறைவாண்டுப்பரீட்சையின் ஒரு பகுதியை முழுமை செய்யும் பொருட்டு, இரத்தினவேலோனின் சிறுகதைகளை ஆய்வுசெய்து சமர்ப்பித்துள்ளார். இதில் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. உயர்தரப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்றும், தரப்படுத்தலினால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர் இரத்தினவேலோன். எனினும், பின்னாளில் இவரது கதைகளையே ஒரு மாணவி பல்கலைக்கழகத்தில் படித்து ஆய்வுசெய்துள்ளார்.

எழுதத் தொடங்கியது முதல் நாற்பது ஆண்டுகாலத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் நாற்பத்திநான்குதான். அவற்றில் 41 கதைகள் ஐந்து தொகுப்புகளாக வரவாகியுள்ளன. அவை: புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், நெஞ்சாக்கூட்டு நினைவுகள், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய். தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சுடர், ஜீவநதி, முதலான இதழ்களில் கதைகளையும் எழுதியிருக்கும் இரத்தினவேலோன், பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக மூன்று நூல்களையும், தேர்ந்தெடுத்த ஆக்கங்களின் தொகுப்புகளாக மூன்று நூல்களையும் இலக்கிய வாசகர்களுக்கு வழங்கியிருப்பவர். இவரது சில நூல்கள் வட- கிழக்கு மாகாண விருதும், வடமாகாண விருதும் பெற்றவை.

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் 01: “வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும்” – மகாத்மா காந்தி; ” வாசகர் வட்டங்கள் நண்பர்களை உருவாக்கும்” – முத்துக்கிருஷ்ணன்; மெல்பனில் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சிவக்குமார்

முருகபூபதிமுன்னுரைக்குறிப்பு
பல வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ( க.நா.சு) – (1912-1988) அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த படித்திருக்கிறீர்களா? நூலின் இரண்டு பாகங்களும் படித்தேன். இன்றும் என்வசம் அந்த நூல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. “பாதுகாப்பு” எனச்சொல்வதன் அர்த்தம் புரியும்தானே!?  கா. ந. சு. வாசகருக்கு மாத்திரமல்ல படைப்பாளிகளுக்கும் தரமான நூல்களை இனம்காண்பித்திருந்தார். அவர் படித்த சிறந்த தமிழ் நூல்களை நயந்து மற்றவர்களும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கத்தூண்டுவிதமாக எழுதினார். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது எளிதானது அல்ல என்பார்கள். அவரது குறிப்பிட்ட நூல்களை படித்ததுமுதல், நானும் எனக்குப்படித்ததில் பிடித்தமான நூல்களைப்பற்றி ” படித்தோம் சொல்கின்றோம்” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவருகின்றேன். இலங்கை, தமிழக, மற்றும் புகலிட படைப்பாளிகளின் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எனது ஊடக, இதழியல் நண்பர்களும் அவற்றை விரும்பி ஏற்று பிரசுரித்தும் பதிவேற்றியும் வருகின்றனர். அவற்றைப்படிக்கும் அன்பர்களில் சிலரும் என்னுடன் தொடர்புகொண்டு தமது எதிர்வினைகளை தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட நூல்களை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விசாரிப்பதுண்டு.

அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தோன்றியது முதல் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்தோம். காலத்துக்குக் காலம் இதன் ஒருங்கிணைப்பாளர்களாக யாராவது ஒருவர் இயங்குவார். எதிர்பாராதவகையில் மெல்பன் வாசகர் வட்டம் என்ற அமைப்பினை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருங்கிணைத்துவரும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அயராத சீரிய இலக்கியத் தொண்டு என்னை பெரிதும் கவர்ந்தது. அவர் படைப்பிலக்கியவாதியல்ல. தேர்ந்த வாசகர். அதனால் இந்த வாசகர் முற்றம் என்ற எனது புதிய தொடரை அவரிலிருந்து ஆரம்பிக்கின்றேன். இதுவரைகாலத்தில் மறைந்த இலக்கிய ஆளுமைகள், சமூகப்பணியாளர்கள், மற்றும் கலை, இலக்கியவாதிகளை, பெண்ணிய ஆளுமைகளைப்பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருக்கின்றேன். ஆனால், தேர்ந்த வாசகர்கள் பற்றிய குறிப்புகளை இதுவரையில் எழுதவில்லை. எதற்காக இந்தக்குறையையும் வைக்கவேண்டும் என்பதற்காக எழுதும் புதிய தொடர்தான் இந்த வாசகர் முற்றம். இந்த தொடர்பத்தியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இடம்பெறமாட்டார்கள். எம்மத்தியில் வாழும் தேர்ந்த வாசகர்கள்தான் வருவார்கள்.

கலைஞர்களுக்கு, குறிப்பாக சினிமா நடிகர் நடிகையர்களுக்கு ரசிகர்கள் இருந்தால்தான் அவர்களின் திரைப்படம் ஓடும். அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும். தயாரிப்பாளர்களும் இந்த ரசிகர்களை நம்பித்தான் கோடிக்கணக்கில் முதலிட்டு, திரைப்படங்கள் எடுக்கிறார்கள். அந்தப்பணம் மட்டுமல்ல, திரை ரசிகர்களும்தான் சினிமாவுக்கு மூலதனம். அவ்வாறு இசை, நடனம் முதலான துறைகளையும் ரசிப்பதற்கு ரசிகர்கள் வேண்டும். அதனால், இந்தக்கலைஞர்களுக்கும் ரசிகர்கள்தான் தேவை. அப்படியானால் எழுத்தாளர்களுக்கு? அவர்களும் வாசகரை நம்பித்தான் எழுதுகின்றனர். ” இன்னமும் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தமிழ் இலக்கிய நூல் ஆயிரம் பிரதிகள் விற்றாலே பெரிய சாதனைதான்” என்று ஒரு சந்தர்ப்பத்தில் (அமரர்) சுந்தரராமசாமி சொன்னார்.

Continue Reading →

இரு-மொழி இரணைக் கவிதைகள்-6: எமது சிங்களச் சகோதரருக்கு: நீங்களும் நாங்களும் ஒருவரடா! (TO OUR SINHALESE COMPATRIOTS: YOU AND WE ARE ONE, MAN!)

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எமது சிங்களச் சகோதரருக்கு:
நீங்களும் நாங்களும் ஒருவரடா!    

நீங்களும் நாங்களும் ஒருவரடா 
ஏங்குறார் எம்மக்கள் நீதிக்கடா.

பௌத்தம் எம் சைவப் பிள்ளையடா
கௌதமன் கந்தனின் தம்பியடா.

சாதியும் பேதமும் சகதியடா
பீதி எம் தீவினைப் பிளக்குதடா.

உம்மொழி-எம்மொழி இரண்டையுமே
நம் மொழிகள் என வளர்ப்பமடா.

ஆங்கிலம் எங்கள் இணைப்பு-மொழி
பாங்குடன் அதனையும் பேண்போமடா.

சிங்களத் தீவையே ஈழம் என்று
எங்களின் தொல் மொழி சொல்லுதடா.

சண்டைகள் எங்களைச் சிதைக்குதடா
பண்புடன் ஒற்றுமை படைப்போமடா.

சிறுமனச் சிந்தனை துறப்போமடா
வெறுப்பையும் பயத்தையும் ஒறுப்போமடா..

நடந்த பல் கொடுமைகள் மறப்போமடா
திடந்தரும் செயல்களால் வளர்வோமடா.

நீங்களும் நாங்களும் ஒருவரடா
ஏங்குறார் எம்மவர் நீதிக்கடா.

நான்கு சோதரராய் வாழ்ந்திடுவோம் – எம்
நான்கு மதங்களால் நலன்பெறுவோம்.

எமக்கும்உமக்கும் இது ஒர்இலங்கை – இங்கு
சமத்துவப் பிணைப்புடன் வாழ்வமடா.

Continue Reading →

எதிர்வினை: வாசிப்பும், யோசிப்பும் 320 – எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

முருகபூபதிLetchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Dec. 24 at 11:51 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்! என்ற தலைப்பில் நீங்கள் பதிவிட்டுள்ள உங்களதும் மற்றவர்களதும் எதிர்வினைகளைப்படித்தேன். இறுதியில் கவிஞர் சேரன் எழுதியிருக்கும் வசனங்களைப்பாருங்கள்.

“Cheran Rudhramoorthy:  பிரபஞ்சனை இங்கே அழைத்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம். அவர் என்னுடைய முகனூலில் இல்லை என்பதால் அவரைத் தொடுக்க முடியவில்லை. கனடாவின் நல்ல இலக்கியவாதிகளின் பரிந்துரையால்தான் பிரபஞ்சன் வருகை சாத்தியமானது. எனினும் பிரபஞ்சன் வந்த பிற்பாடு எவரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் பலமுறை லோகேந்திரலிங்கத்தை அழைத்து பிரபஞ்சனுடன் பேச வேண்டும் என்று கேட்டேன். சாத்தியப் படவில்லை. இறுதியில் அவர் தமிழகம் திரும்பும் முன்பு சிறிது நேரம் பேச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பிரபஞ்சன் சொன்னதை இங்கு எழுத முடியாது. இந்த இணைப்பில் Nagamany Logendralingam, Canada Uthayan என்பதை நண்பர்கள் தொடுப்புச் செய்தால் மேலதிக விவரங்கள் தெரிய வரலாம்”

Continue Reading →

தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (5)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -

[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]

அத்தியாயம் ஐந்து!

“பகைமை இயக்கத்திற்கு வழமை போல் இது பொறுக்காத விடயம். அவர்களும் இதைப் போல் ஒன்றைத் தாமும் தயாரிக்க முற்பட்டார்கள் சரியாக அமையவில்லை. ஆயுத இருப்பு இருப்பதால், எல்லாம் மிஞ்சப் போனால் இயக்க மோதலை தொடங்கி விடுகிற, சேட்டைகளைப் புரிவதாக அது மாற்றம் பெற்று விடும். நெருக்கடியான காலகட்டம். அச்சமயம்  அவர்களிற்கு வேற புதிய பிரச்சனைகளும்  ஏற்பட்டதால் இதை பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டார்கள். திரும்ப எப்ப சூழ் கொள்ளும் என அறிய முடியாது?  அதனால் எல்லா ஏ.ஜி.ஏ. அமைப்புகளுக்கும் கணிசமாக‌ பணம் தேவையாயிருந்தது. குறைந்த பட்சம் ஒரிரு ஏ.ஜி.ஏ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்று ஜி.ஏ. கருதியது. அனைத்து இயக்கங்களுக்கும் கடை விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரி விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி உதவியை எதிர்பார்க்க முடியாது. எனவே இப்படி பல்வேறு வழிகளில் சேரும் பணமே இயக்கத்தை இயக்க உதவின.”

திலகன் விபரித்துக்கொண்டு போனான்.

செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாத்தாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லை எனவும் தோன்றியது.

கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக் கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண்குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள். சென்னை வானொலியில் அன்று காற்றாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்கள். அதிகமாக அப்படியான அறிவிப்பு அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். அதனால் யாரும் தொழிலுக்குப் போகவில்லை. லிங்கன் வந்து அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது. இருளத் தொடங்கியிருந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவர் அடைந்த அவமானமும் பற்றி எழுத்தாளர் நோயல் நடேசன் எழுத்தாளர் முருகபூபதியின் கூற்றினை ஆதாரமாகக் கொண்டு முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தார்.  அதனைத்தொடர்ந்து அது பற்றி எதிர்வினைகள் சில இடப்பட்டன. அவற்றின் தொகுப்பிது ஒரு பதிவுக்காக.

Noel Nadesan, December 21 at 7:47 PM : “பிரபஞ்சன் கனடாவுக்கு அழைக்கப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார். அவரை ஒரு விழாவுக்கு அழைத்த ஒரு ஈழத்து அன்பர் (?) சொன்னபடி செய்யாமல், ஏமாற்றி திருப்பி அனுப்பிவிட்டார். தமிழகம் திரும்பியதும் பிரபஞ்சன், ” இனிமேல் எனது வாழ்வில் சந்திக்கவே விரும்பாத ஒருவரிடமிருந்து விடைபெற்றேன்” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு ஊரில் இவரை பேச அழைத்து, அந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய பாராட்டு விருது சான்றிதழை பிரேம் போட்டுக்கொடுத்தார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவரை மீண்டும் பஸ் ஏற்றிவிடாமல் நடுத்தெருவில் விட்டுச்சென்றார்கள். நடு இரவு பஸ்ஸையும் தவறவிட்டுவிட்டு, மறுநாள் அங்கிருந்து அதிகாலை ஊர் திரும்பும்போது எதற்கு இந்த வீண் சுமை என்று, அந்த பெரிய விருதுச்சான்றிதழை விதியோரத்தில் வைத்துவிட்டு பஸ் ஏறினார். இதெல்லாம் பிரபஞ்சனின் வாக்குமூலங்கள். எழுத்தாளர்கள் சம்பாதித்தவை புகழ் – விருதுகள் மட்டுமல்ல அவமானங்களும்தான்!!!??? இதுபோன்ற அவமானங்களை இனிமேல் பிரபஞ்சன் சந்திக்கமாட்டார். பிரபஞ்சனை நீண்ட காலமாகப்படிக்கின்றேன். அவர் 1965 – 2004 வரையில் எழுதிய கதைகளின் (செம்பதிப்பு ) இரண்டு பாகங்களையும் தற்போது மீண்டும் படிக்கின்றேன். 115 ஆவது கதை ” சகோதரர் அன்றோ” படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த இலக்கிய சகோதரர் விடைபெற்றுவிட்டார். அவருக்கு எமது அஞ்சலி.  – தகவல் : முருகபூபதி”

Kannan Sundaram: இது பற்றி நானும் அறிந்தேன், ஆனால் பிரபஞ்சன் வழி அல்ல. அவர் சென்றதில் என் நல்லெண்ணத்திற்கும் சிறிய இடம் உண்டு என்பதால் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.

Noel Nadesan : இந்த விடயம் நடந்து பிரபஞ்சனால் எழுதப்பட்டது . உதய ன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் என நான் அறிந்தேன். எழுத்தாளர்களை எழுத்தோடு சம்பந்தப்படுத்தியவர்கள் மதிக்காதபோது பொதுமக்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும? இதேமாதிரி சில விடயங்கள் இலங்கையிலும் நடந்தது . அதில் பாதிக்கப்பட்டவர் வெளியாலே சொல்லாததால் மவுனம் காக்கிறேன். இவை முதலாவதோ கடைசியானதோ அல்ல .

Continue Reading →