முனைவர் தாரணியின் சிந்தனை மற்றும் கவித்துளிகள்!

-  முனைவர் ஆர். தாரணி -சிந்தனைத்துளிகள்!
1. அவன் பக்கெட்டை உதைத்தான் (He kicked the bucket) என்று பொருள் வரும் வாக்கிய அமைப்பு ஆங்கிலத்தில் அவன் இறந்துவிட்டான் என்ற பொருள் தரும் ஒரு இடியம் (idiom).. நம்மை பொறுத்தவரை பக்கெட் (bucket) குளியலறையில் அல்லது துணி துவைக்க பயன்படுத்துவோம். ஆனால், ஆங்கிலேயர்களின் கலாச்சாரப்படி, முன்பு பன்றிகளை இறைச்சிக்காக கொல்ல வேண்டி அவற்றை மேலிருந்து கீழே வரும் மெல்லிய சுருக்கு கயிற்றில் கழுத்தைக்கட்டி அந்த பன்றிகளை ஒரு பக்கெட் மேல் நிற்கவைத்து, பின் அவற்றை பக்கெட்டை உதைக்க செய்வது என்ற செயலில் ஆரம்பித்து, பின் மனிதன் இறப்புக்கும் – அது அவன் இயல்பாக இறந்தாலுமே இவ்வாறு கூறுவது வழக்கம் ஆகி, தற்போது ஆங்கில மொழியின் வழக்கில் இருந்து வருகிறது.  படித்தவர்கள் மத்தியில் அதிகம் இல்லாவிடினும், ஆங்கிலத்தில் தற்போதும் உபயோகத்தில் இருக்கும் வழக்காகவே உள்ளது. (பக்கெட் லிஸ்ட் (The Bucket List என்ற ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்பு)

2. எல்லாமே வலிப்பதால், எந்த வலியுமே வலிப்பதாய் உணர முடியவில்லை!  —ரிச்சர்ட் மான்டேல் எழுதிய ஓநாய் கூடம் புத்தகத்திலிருந்து Nothing Hurts, or Perhaps it’s that everything hurts, because there is no separate pain that can be picked out. (Quoted from Wolf Hall by Richard Mantel)

3. தங்களுடைய குட் நேம் (good name) என்ன என்று கேட்பதும் இன்றைய அளவில் படித்தவர்கள் மத்தியில் கூட பரவலாக பயன்படும் ஒரு ஆங்கிலப்பிரயோகமாய் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் அப்படி ஒரு பிரயோகமே இல்லை என்பதுதான்  நிதர்சனம். இந்த குட் நேம் வந்தது ஹிந்தியில் இருந்து – ஆப்கா சுப நாம் க்யா ஹெய் (Subha naam means good name)என்ற ஹிந்தி பிரயோகத்தை அப்படியே மாத்திப்போடு என்ற மொழி மாற்றமே குட் நேம் என்னும் பிரயோகம். நேம் (Name)  என்பது மட்டுமே ஆங்கிலத்தில் போதும். ஒரு ஆங்கிலேயரிடம் What is your good name? என்று கேட்டால் கொஞ்சம் திருதிருவென விழிக்கத்தான் செய்வார்.

4. எங்கேயோ பார்த்த ஞாபகம், எப்போதோ வாழ்ந்த ஞாபகம் என்று தமிழ் சினிமா பாடல் வரிகளில் வரும். அது உளவியல் ரீதியாக அனைத்து மனிதர்களின் வாழ்விலும் நேரக்கூடிய உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்திற்கு குறிக்க பயன்படுத்தும் சொல் தேஜா வு (Deja Vu) என்ற ஒரு பிரெஞ்சு வார்த்தை. ஆங்கிலத்தில் உளவியல் வல்லுநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் ஆங்கிலம் பேசும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வகையில் நம் தமிழில் சிலர் முகத்தில் ஜொலிக்கும் தேஜஸ் என்னும் விசயத்திற்கு கொஞ்சம் நெருங்கிய சொந்தம்தான் தேஜா வு. பிரெஞ்சு மொழியில் தேஜா வு என்றால் முன்பே பார்த்தது என்று பொருள். இந்த தேஜா வு அனுபவத்தின் உச்சக்கட்டமே பின்னால் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவது போன்றதொரு அபார சக்தி – சினிமா நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வருவது போன்று ரயில் விபத்து விமான விபத்து போன்று பல விஷயங்களை முன்பே கூறுவது. இந்த தேஜா வு அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.

Continue Reading →

கவிஞர் சோலை மாயவனின் இரு கவிதைகள். ஆங்கில் மொழிபெயர்ப்பு : முனைவர் ர.தாரணி –

-  முனைவர் ஆர். தாரணி -1. விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி – சோலை மாயவன் : ஆங்கில மொழியாக்கம் முனைவர் ஆர். தாரணி –

பனைமரத்துக் கள்
பன்றிக் குடல்
சுருட்டுப் பீடி
கருப்பட்டி கலந்த பொங்கல்
வானத்தைப் பிளக்கும்
கொம்பின் பேரிசை
பம்பை உடுக்கையில்
மிளிரும்
கொண்டாட்டத்தின்
உச்சபச்ச அலங்காரம்
எம் வயற்காட்டின்
தேசம் முழுவதும் பரவும்
பெண்கள் சமைத்த
பொங்கலின் அதீத ருசி
இவைகள் ஏதுமற்றுப்போன நிலத்தில்
தனித்து அலைகிறான்
அடிமாட்டு விலைக்கு
வயற்காட்டை விற்றபின்
சாத்தான் எனும் பெயரால்
என் முப்பாட்டன்

Continue Reading →

ஜெயகாந்தன் மறுவாசிப்பு: மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்!

ஜெயகாந்தன்ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு நேற்று முன்தினம் மெல்பனில், இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது. அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.

ஜெயகாந்தன் வாழும்போதே ( அவர் நீண்ட காலம் எழுதாமலிருந்தமையால்) எழுத்துலகிலிருந்து மறைந்துவிட்டதாகவும் பத்திகளில் பறைசாற்றி, வித்துவம் காட்டிக்கொண்டிருந்தவர்களை, அவ்வாறு எழுதவைத்ததன் மூலம் தன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்துக்கொண்டிருந்தவரைப்பற்றி, அவர் வாழும்போதும் மறைந்த பின்னரும் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன். எனவே எனது தரப்பில் அவர் குறித்து புதிதாக எழுதுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைப்புடன்தான் மெல்பனில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வதியும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன். அங்கு சென்ற பின்னர்தான், ஜெயகாந்தனை இன்னமும் மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும் சிலரையும் முதல் முதலில் சந்திக்கவும் நேர்ந்தது. அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகர் வட்டத்தின் அன்றைய சந்திப்பில் முதல்தடவையாக கலந்துகொண்டபோது, ஜெயகாந்தன் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய மூன்று சிறுகதைகளையே வாசிப்பு அனுபவப்பகிர்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தமையும் தெரியவந்தது. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கதைகள் அவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் எழுதிய கதைகள். ஆறுதசாப்தங்களையும் கடந்து ஜெயகாந்தன் பார்த்தறியாத ஒரு ஊரில் பேசப்படுகிறது என்றால், அந்த ஆளுமையின் மேதாவிலாசம் எத்தகையது…? இந்தக்கொடுப்பினை எத்தனை நவீன இலக்கியப்படைப்பாளிகளுக்கு கிட்டும்? ஜெயகாந்தனை மறுவாசிப்புச்செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் எதுவுமே பேசாமல் ஜெயகாந்தனின் மொழியில் மெளனமே பாஷையாக இருந்துவிட்டு எழுந்துவருவதற்காகத்தான் சென்றேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ”இறுதி மணித்தியாலம்”

நூல்  : இறுதி மணித்தியாலம்.- மேமன்கவி -ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக”இறுதி மணித்தியாலம்” எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன  கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.  மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.   அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: நற்றிணையில் புற விழுமியங்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.

சங்க காலத்தை ஆண்ட அரசன், வள்ளல், வீரன் பற்றிய செய்திகள்
நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும் அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் தம் நாட்டு மக்களுக்காக எதிரி நாட்டுடன் போர் புரிந்துப் பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி வறியவர்களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும் தம் மக்களையும் செழுமையுடனும் சீரும்சிறப்புமாக வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின்வழி அறியமுடிகிறது.

தித்தன் என்னும் சோழ மன்னன் உறையூரை ஆட்சி செய்தான் என்பது “வீரை வேண்மான் வெளியன் தித்தன்” (நற்.58) என்னும் பாடலடி விளக்குவதைப் பார்க்க முடிகிறது. மேலும்,

“எழுது எழில் சிதைய அமுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்” (நற்.379) என்ற பாடலடி தலைவியின் கண்களுக்கு சோழனின் குடைவாயிலில் உள்ள ஊரில் இருக்கின்ற நீல மலரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.அதுமட்டுமன்று,தலைவியின் கைகள் சிவந்திருத்தலைப் பாண்டிய மன்னனின் பொதியலில் பூத்த காந்தள் மலரைப் போன்று சிவந்தன என,

“மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே” (நற்.379)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.சோழன் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையும் கொண்டவர் என்று “படுமணி யானைப் பசும்பூட் சோழர்”(நற்.227)என்னும் பாடலடி விளக்குகின்றது.இப்பாடல்களின் வழி மன்னர்கள் சங்க காலத்தை ஆண்டு வந்தனர் என்றும் அவர்கள் செல்வ செழிப்புடன் நாட்டை வளர்த்தும் வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது.

Continue Reading →

அவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் செங்கதிர் இதழின் ஆசிரியருமான த. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர். மெல்பன், கன்பரா மற்றும் சிட்னியைச்சேர்ந்த எழுத்தாளர்களும் ஒன்றுகூடும் இந்நிகழ்ச்சியில் நூல்களின் அறிமுகம், கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும்.

நிகழ்ச்சிகள்:
நூல் அறிமுகம் – வாசிப்பு அனுபவப்பகிர்வு
சந்திரிக்கா சுப்பிரமணியம்: சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் – ( வரலாறு)
கார்த்திக்வேல்சாமி: நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)
கலையரசி சின்னையா: முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் (புனைவுசாரா இலக்கியம்)
எஸ். எழில்வேந்தன்: ‘செங்கதிரோன்’ கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)

Continue Reading →

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்றது. ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு முன்னர், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் ‘ செங்கதிர்’ இதழின் ஆசிரியருமான செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், ” கிழக்கிலங்கையின் கலை இலக்கிய செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையைத்தொடர்ந்து இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், கனடாவில் வதியும் செழியன் எழுதிய, வானத்தைப்பிளந்த கதை ( ஈழப்போராட்ட நட்குறிப்பு) நூலை திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) நூலை திருமதி சாந்தி சிவக்குமாரும், தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய, பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை ( நாவல்) நூலை டொக்டர் நடேசனும், தமிழக எழுத்தாளர் அம்பை எழுதிய காட்டில் ஒரு மான் (சிறுகதைகள்) நூலை திருமதி விஜி இராமச்சந்திரனும் அறிமுகப்படுத்தி, தமது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியைத்தொடர்ந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2016 இல் நடந்த ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளும், 2016 – 2017 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நிருவாகிகளுக்கான பரிந்துரைப்படிவங்களை (Nominations) “அக்கினிக்குஞ்சு ” இணைய இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. யாழ். பாஸ்கர் சமர்ப்பித்து தெரிவுகளை நடத்தினார்.

Continue Reading →

போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம்! – சிவராசா கருணாகரன் –

 - சிவராசா கருணாகரன் - – எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற்  பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால்  `பதிவுகள் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் –


மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.

தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது?  அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் – ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.

Continue Reading →

மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்!

உண்மையிலேயே எனக்குச் சில நேரங்களில் ஈழத்தமிழர்களை நினைத்தால் வியப்பாகத்தானிருக்கும். அவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத சமூக, அரசியற் பிரிவுகள் இருந்தபோதிலும் உலக அரங்கில் இன்று தமிழர் என்னும் அடையாளமாகத் திகழ்பவர்கள்…

Continue Reading →