ஆய்வு: நல்லூர் நத்தத்தனார் கூறும் கடையெழு வள்ளல்கள்!

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை காணலாம்.

பாரி
சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்
முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”.
(புறம் 20)

“பாரி பாரி என்று பல ஏந்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”
(புறம் 107)

“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய
பிறக்கு வெள் அருவி விழும் சாரல்
பிறமம்பின் கோமான் பாரியும்”
(சீறு– 89 – 91)

இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →

ஆய்வு: விருதுநகர் வீரரின் அரசியலும் ஆளுமையும்

தலைவர் காமராஜ்.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.

1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாளன்று தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள “விருதுநகர்” மாவட்டத்தில், குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தவர்தான் காமராசர். தாயார் சிவகாமி அம்மாவின் முதல் சகோதரர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை நடத்தி வந்தார். விருதுநகருக்கு அந்தக் காலத்தில் இருந்த பெயர் விருதுப்பட்டி. இவருடைய தந்தை விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமாட்சி (குலதெய்வம்) என்ற இயற்பெயருடைய காமராசரை, அவருடைய தாயார் “ராசா” என்று அன்பாக அழைத்ததால், பின்னாளில் அதுவே, (காமாட்சி, ராஜா) ‘காமராசர்’ என்று பெயர்வரக் காரணமாகவும் அமைந்தது. காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கையும் இருந்தார்.

காமராசர் தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரில் தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள “சத்ரிய வித்யா சாலா உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்தார். காமராசர் தனது பள்ளிப் பருவத்திலேயே, விருதுப்பட்டியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் சென்றுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இவ்வாறான, பொதுக் கூட்டங்கள் அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவர் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராசர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை ‘நள்யாமப்பொழுதொன்றில்… –

– அண்மையில் முகநூலில் எனது கவிதையான ‘நள்யாமப்பொழுதொன்றில்…’ கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். –

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை  'நள்யாமப்பொழுதொன்றில்... - பற்றி....கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்… – வ.ந.கிரிதரன்

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

Continue Reading →

ஆய்வு: நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு

முன்னுரை.
ஆ. இராஜ்குமார்,தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.

தோழி
தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர்.

தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்றுள்ளாள். தலைவியும் தோழியும் ஒட்டிப்பிறந்த கவைமகவு போன்று ஒற்றுமையுள்ளவர்கள். களவு, கற்பு என்னும் இருகோள்களிலும் தோழி இணைந்தே காணப்படுவாள். சங்க இலக்கியங்களில் தலைவி பெறும் முக்கியத்துவத்தில் தோழி பங்கு மிகப் பெரியதாக உள்ளது. தலைவி வருந்தினால் அவளைத் தேற்றுவது அவளுக்காக நற்றாயிடமும் செவிலியிடமும் அதிகப்படியாக தலைவனிடமும் வருந்துவது தோழியே. தோழியின் பண்புகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அறத்தோடு நிற்றல். தமர் வரைவு காப்பு மிகும் போது, காதல் மிகுதியாலும் நொது மலர் வரைவின் போதும், தமர் வரைவு மறுத்தபோதும், செவிலி குறிபார்க்கும் இடத்திலும், வெறியாட்டிடத்திலும், பிறர் வரை வந்த வழியிலும், அவரது வரைவு மறுத்த வழியிலும் தலைவனுக்காக துணை நிற்பவள் தோழியே.

இவ்வாறு தலைவிக்கும், தலைவனுக்கும் அறத்தோடும், தன் மனநிலையில் இருந்து வேறுபடாமல் தோழி துணை நிற்கிறாள். சில இடங்களில் தலைவனை ஆற்றுப்படுத்தும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கண்டித்தும் தலைவனை உரிய நேரத்தில் தலைவியை மணந்துக் கொள்ளுமாறும் தூண்டலாகவும் தோழி விளங்குகிறாள். இது சங்க மரபு இது நந்திக்கலம்பகத்திலும் தொடர்கிறது.

நந்திக்கலம்பகம்

தமிழ்மொழியில் தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். ஆரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன் நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்தி வர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

Continue Reading →

மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை!

மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை!ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான ‘பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)’ திரைப்படம் பேசுகிறது.

அழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் நாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கௌதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கௌதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது.

சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.

Continue Reading →

அஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்

அஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்தமிழ் சிறுவர்களுக்காக ஒரு ஒளிநாடா ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எனது விருப்பதத்தை அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் 1990 களின் நடுப்பகுதில் தெரிவித்த போது அவர் அது நல்ல முயற்சி என்று வரவேற்றார். காரணம் தமிழ் கற்பதற்கான போதிய வசதிகள் அப்போது கனடாவில் இருக்கவில்லை. அதற்காக  சில சிறுவர்பாடல்களை நானே எழுதியிருந்தேன், ஆனாலும் மற்றவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த போது அவர் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் கவிஞர் வி. கந்தவம் அவர்கள் மற்றவர் பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் அவர்கள். அதனால்தான் அலெக்ஸாந்தர் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பாடல் எழுதித் தருவதாக சம்மதம் தந்தார். தமிழ் ஆரம் என்ற அந்த ஒளித்தட்டில் இடம் பெற்று, இன்று பலரையும் கவர்ந்த ‘ஆடுவோம், பாடுவோம் சின்னஞ்சிறு பாலர் நாம்’ என்ற சிறுவர் பாடல் அவர் தந்த வரிகளை வைத்துத்தான் உருவானது. முல்லையூர் பாஸ்கியின் இசையமைப்பில் நேரு அவர்கள் ஒளியமைப்பு செய்திருந்தார்.  அலெக்ஸாந்தர் மாஸ்டரின் அறிவையும், ஆற்றலையம் புரிந்து கொள்ள எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்ததால், அவரது விருப்பத்தோடு அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவரான அலெக்ஸாந்தர் மாஸ்டர் அவர்களை அடிக்கடி அதிபரின் வீட்டில் சந்தித்து உரையாடுவேன். மிகவும் அன்பாகவும், மரியாதையோடும் பழகக் கூடிய ஒருவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான்  இருந்த போது மரபுக்கவிதையை இந்த மண்ணில் நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அவரிடம் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். எனவே கவிஞர் கந்தவனம், பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் ஆகியோரின் உதவியோடு மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ஆரம்பித்தோம். கரு கந்தையா அவர்கள் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக இடத்தை ஒதுக்கித் தந்திருந்தார். அப்போது கனடாவில் இருந்த அனேகமான கவிஞர்கள் புதுக்கவிதை எழுதுவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் மரபுக்கவிதை கற்பதில் ஆர்வமாக இருந்ததால் சுமார் பதினைந்து கவிஞர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர். விரிவுரையாளர்களாக கவிஞர் கந்தவனம் அவர்களும், ம.சே. அலெக்ஸாந்தர் அவர்களும் விருப்போடு செயலாற்றினார்கள். எடுத்துக் கொண்ட பொறுப்பைத் திறம்பட செய்து பல மரபுக்கவிதைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. இன்று 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கவிஞர் கழகத்தில் இருக்கும் பல கவிஞர்கள் அன்று அவரிடம் கவிதை கற்றவர்கள் என்பதை எண்ணி இன்றும் பெருமைப்பட முடிகின்றது. ஒக்ரோபர் மாதம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்த மரபுக்கவிதைப் பயிற்சிப்பட்டறை மார்ச் மாதம் 2005 ஆம் ஆண்டுவரை நடைபெற்று பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்பொழுது தலைவராக இருந்த சின்னையா சிவநேசன் அவர்களும் செயலாளராக இருந்த நானும் அதில் கையொப்பம் இட்டிருந்தோம். அமரர் க.பொ.செல்லையா மாஸ்டரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்திருந்தார்.

Continue Reading →

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக..

- வெங்கட் சாமிநாதன் -அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் ‘டொராண்டோ’ வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் ‘வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்’ என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி,  அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் பேசுகையில் ‘நளினமும் உடல்வாகும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரீத்தி மகேந்திரனின் நடன வெளிப்பாடுகள், ஸ்ரீ மாணிக்கம் யோகேஸ்வரனின் ராகத்துடனும் சாகித்தியத்துடனும் கச்சிதமாகவே பொருந்தி, பக்கவாத்தியக் கலைஞர்களான ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரனின் மிருதங்கத்தோடும், ஸ்ரீ ஞானசுந்தரத்தின் வயலின் இசையோடும், ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது எனத் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக அறியப்பட்ட புகழ்பெற்ற நடன ஆசிரியையான ஸ்ரீமதி உஷா ராகவனை குருவாகப் பெற்ற செல்வி பிரீதி மகேந்திரனின் நடனம் வர்ணிக்கத் தக்க வசீகரமான முறையில் அவரது முதலில் அரங்கேறும்; அரங்கேற்றம் போன்றல்லாது, நாட்டியத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நர்த்தகியாகத் திகழ்ந்தார் என்றும் பாராட்டினார். பிரீதி மகேந்திரனின் சில நடனங்களுக்கு அவரின் அண்ணன் டாக்டர் மேவின் மகேந்திரனும் மிருதங்கத்தை வாசித்து மெருகூட்டியமை மிகவும் சிறப்பைக் கொடுத்தது’ என்றும் மேலும் வியந்து பேசியிருந்தார். 

Continue Reading →