பிரான்ஸ்: ‘சமூக பாதுகாப்பு அமைப்பி’ன் மே தின ஊர்வலம்

பிரான்ஸ்: ‘சமூக பாதுகாப்பு அமைப்பி’ன் மே தின ஊர்வலம் ‘அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஒன்றிணைவோம்’. ‘மெற்றோ’: Voltaire. விரிவான விபரங்கள் (தகவல்: யோகன் கண்ணமுத்து – ashokyogan@hotmail.com…

Continue Reading →

கனடா: சுயாதீன – கலை திரைப்படக் கழக விருது 2010 பெறும் வசந்தாதேவி டானியல்!

வசந்தா டானியல்கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது. 

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) – வ.ந.கிரிதரன் –(15 – 19)

 அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து ‘பிராட்வே’ சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:  

‘பதிவுகளி’ல் அன்று: ஜெயமோகனின் கட்டுரைகள் சில ..

[ ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் சில. பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் ]

பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45

சாப்ளின்

ஜெயமோகன்சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க  அதிகாலைச்சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்கு காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்துபைசா கூலிதருவோம். அருமனையில் ஓலைக்கொட்டகைதான் . மழை பெய்ய ஆரம்பித்து விட்ட படங்கள்தான் அதிகமும் வரும் .பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிட பழைய படங்களைத்தான் எல்லாரும் விரும்பிப் பார்த்தார்கள். படங்கள் சாவகாசமாக இருக்கவேண்டும், கொஞ்சம் தூங்கி எழுந்தால் கூட ரொம்பதூரம் ஓடியிருக்கக் கூடாது. பன்னிரண்டுமணிக்கு தொடங்கும் ஆட்டம் காலைநான்குமணிவரை நீளவேண்டும்.ஆகவே ஓவல்டின், ரெமி முகப்பவுடர், சைபால் கால்களிம்பு  முதலிய விளம்பரங்கள் முடிந்தபிறகு துண்டுபடங்கள்போடுவார்கள். லாரல் ஹார்டி நகைச்சுவை, மிக்கி மௌஸ் கார்ட்டூன் இவற்றுடன் சாப்ளின் படமும் இருக்கும். சாப்ளின் ‘கோணக்கால்’ என்று சொல்லப்பட்டார் . லாரல் ஹார்டி மல்லனும் மாதேவனும் என்றும் கார்ட்டூன்படங்கள் பொம்மலாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டன.  

Continue Reading →

Uma Varatharajan’s Unorthodox novel

K.S.SivakumaranUma Varatharajan is an avant-garde writer in Thamil hailing from the East living in Kalmunai, now in retirement from being the Senior Manager of Singer in that area. He writes at leisure and an aesthete at heart with a natural bent towards humour and a slight mischievousness in sarcasm. There are more than 250 creative writers – poets, dramatists, short story writers and novelists – in Thamil in this country. Among them a few writers write differently meaning writing fiction not confining them exclusively to write about ‘progressive’ themes such as social and political problems concerning caste and class differences, and the ethnic imbroglio. But in the writing of a handful of writers psychological and human condition takes primacy. Among the latter group of writers are Uma Varatharajan, A Saanthan, Somapala Ranjakumar, K Saddanathan, Kokila Mahendran and a few others who began writing such fiction in the1970s. One distinguishable quality in their writing was that they paid equal attention to the craft of the medium. This I found a miss in other social realism stories written by veteran writers though who were faithful in concentrating on the content than the structure and were rather careless about the form.

Continue Reading →

Russia and China for Sri Lanka failure, not UN’s Ban’

http://www.channel4.com/

Tuesday 26 April 2011 .Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China. A former senior UN official has defended Secretary-General Ban Ki-Moon after critics accused the UN chief of failing to take on China and Russia in pushing for a war crimes investigation in Sri Lanka. Ban said he lacks the authority to personally order an inquiry into allegations of mass killings of civilians in the final months of the island nation’s bloody civil war in 2009.

Continue Reading →

ஸ்ரீ சத்யசாய் பாபா – புட்டபர்த்தியிலிருந்து கடைசிப் பயணம் வரை

ஸ்ரீ சத்யசாய் பாபா96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய ஆன்மா,  ஏப்ரல் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு  உடலை விட்டு பிரிந்தது. பக்தர்களை விட்டு திடீரென்று பதினோரு வருடங்களுக்கு முன்னதாகவே சத்யசாய்பாபா கடைசி யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாபா காலமாகிவிட்ட போதிலும் இன்னமும் பக்தர்கள் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர் யோகநித்திரையில் உள்ளதாக நம்புகிறார்கள். பாபா மருத்துவமனையிலிருந்த போது, உடல்நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்த பக்தர்கள் ஸ்ரீசத்யசாய்பாபா தங்களைவிட்டு பிரியவில்லையென்று,  மறையவில்லையென்று  நம்பிக்கையோடு சொல்லுகிறார்கள். 24.04.2011 அன்று நாடு புதியதொரு விடியலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது புட்டபர்த்தி சோகத்தில் மூழ்கியது.

Continue Reading →

சிறுகதை: புதிய வருகை

கே.எஸ். சுதாகர் (ஆஸ்திரேலியா)உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன்.

“சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!”

சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே ரெலிவிஷனிற்கு முன்னால் அமர்ந்தான் செல்வா. நேற்றைய தினம் ‘சிற்றியில்’ நடந்த ஊர்வலமொன்று செய்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தது. புதிதாக நாட்டினுள் வருபவர்களுக்கு எதிராக, சுலோகங்களைத் தாங்கியவாறு மெளரி இன மக்களும் வெள்ளையினத்தவர்களுமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

Continue Reading →

சிறுகதை: பவானி அக்கா

சிறுகதைவந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம் படிப்பித்தார். எல்லா வகுப்புகளுக்கும் அவரே சுகாதார ஆசிரியை.அதே போலவே கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் எடுத்த ஆசிரியர்களும் எல்லா வகுப்புகளுக்கும் அவர்களே படிப்பித்தார்கள்.10ம் வரையில் இருந்த எங்க பாடசாலையில்,எல்லா தரத்திலும் ஓரு வகுப்பு மட்டுமே இருந்தது.எ,பி,சி…என பல பிரிவுகள் அவற்றில் இருக்கவில்லை.கிராமம் வேற எப்படி இருக்கும்.ஒரு வகுப்பில் 35- 40 பேர்கள்…என்று இருப்போம்.அதில் அரைவாசிப் பேர்கள் பெண்கள். சொல்ல மறந்து விட்டேன்.வள்ளுவர்,காந்தி, பாரதி..என எல்லாருக்கும் ஒவ்வொருப் பட்டப் பேர்களும் இருந்தன. ஆங்கில  ஆசிரியருக்கு , ‘குஞ்சியப்பு’என பேர் வைக்கப் பட்டிருந்தது.கனகலிங்கம் என அழகான பேர் அவருக்கு இருக்கிறது.அயன் பண்ணின நீள்காற்சட்டையும்,சேர்ட்டும் அணிந்து வாரவர்.ஆனால்,ஒய்வு நேரங்களில் ..சதா வெத்திலை சப்பிக் கொண்டிருப்பார்.வெத்திலைக் குஞ்சியப்பு என்பது தான் முழுமையான பட்டப்பேர்.ஸ்டைலாக இருக்கிற அவர், அப்படி இருப்பதற்கு ஏதும் விவசாயப் பின்ணணி இருக்க வேண்டும்.வெத்திலைப் பழக்கம் பொதுவாக அவர்களுடையது.நுனிப்புல் மேய்கிறவர் தானே மாணவர்கள்.எனவே தான் வாய்யிலே வந்தபேரை அவருக்கு வைத்து விட்டார்கள்.

Continue Reading →