கொரோனா காலகட்டத்தை பிரதிபலிக்கும் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு தொடர்பான ஓர் அறிவிப்பும், வேண்டுகோளும்!

கொரோனா காலகட்டத்தை பிரதிபலிக்கும் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு தொடர்பான ஓர் அறிவிப்பும், வேண்டுகோளும்!கொரோனா காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகள் ஏதோவொரு வகையில் அந்தக் காலகட்டத்தின் அக புற வெளிகளைப் படம்பிடித்துக்காட்டுகின்றன. அவ்வகையில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகின்றன. சாட்சியமாகின்றன.

தமிழ் கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து இதுவரை நான்கைந்து தொகுப்புகள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் (பாரதியார் கவிதைகளின் பெரும்பகுதியை மொழி பெயர்த்துள்ளார், சங்கத்தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்) தனி கவிஞர்களுடைய ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகளெனவும் 10க்கு மேல் வெளியாகி யுள்ளன – அவற்றில் சில இளம்பிறை, உமா மகேஸ் வரி, தமிழச்சி தங்கபாண்டியன்(நூல் வெளியாக உள்ளது), அ.வெண்ணிலா(நூல் வெளியாக உள்ளது, ) அவர்கள் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் குறைந்தபட்சம் 100ஐ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பிற்காக கவிதையை அனுப்ப விரும்பு கிறவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆளுக்கொரு கவிதை அனுப்பித் தரும்படி (டெமி ஸைஸ் தாளில் ஒன்று அல்லது இரண்டு பக்கங் களுக்கு மிகாமல்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கவிதைகள் அனுப்புவோர் தம்மைப் பற்றிய சிறு விவரக் குறிப்பு, புகைப்படம், விலாசம் மற்றும் தங்கள் கவிதையை மொழிபெயர்க்க அனுமதி ஆகியவற்றையும் அனுப்பித்தந்து உதவவும்.

கவிதை அனுப்பவேண்டிய கடைசி தேதி: இவ்வருடம் மே 15.

அனுப்பப்படும் அத்தனை கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பில் இடம்பெறும் என்று உறுதியளிக்க இயலாது. பல்வேறு காரணங்களால் சில கவிதைகள் மொழிபெயர்ப்புக்கு ஏற்றவையாக அமையாதுபோகலாம்.

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அறிவித்தல்: முத்தமிழ் விழா!

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வணக்கம், நாட்டு நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்புக் கருதி ஏப்ரல் 11 ஆம் திகதி நடக்கவிருந்த எமது முத்தமிழ் விழா பிற்போடப்பட்டிருக்கிறது…

Continue Reading →

பாடும் மீன் புத்தகத் திருவிழா மனப் பதிவுகள்!

பாடும் மீன் புத்தகக் கண்காட்சி காண சனிக் கிழமை( 08. 03. ,2020) இரவு தேவநாயகம் மண்டபம் சென்றிருந்தேன். சித்திரலேகாவும் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது என்னுடன் வந்திருந்தார். புதிய புத்தகங்கள் காண அவரும் அவாவினார், அவரும் ஓர் புத்தக ஆர்வலர். நாம் அங்கு போகும் போது மேடையில் நின்று ஜிப்றி ஹசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நூல் பற்றிய அறிமுகம் அது.

ஹசன் காத்திரமான மனிதர் ஏலவே எனக்கு அறிமுகமானவர் அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வாசித்தமையினால் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அவர் உரையைச் செவி மடுத்தவண்ணம் தேவநாயகம் மண்டபத்தினுள் நுழைந்தோம், அவரைப்பற்றி சித்திராவிடமும் கூறினேன்.

தேவநாயகம் அரங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேடையும் அதனை ஒட்டிய பகுதியும்முதலாவது பகுதி அதற்கு இப்பால் இரண்டாவது பகுதி கண்காட்சிப்பகுதி. மேடையில் யில் நின்று ஹசன் உரையாற்றினார் அதனோடு ஒட்டியிருந்த கதிரைகளில் ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் இருந்து அவர் உரையைச் செவி மடுத்துகொண்டிருந்தனர். மிக அதிகமானோர் அது பற்றி எதுவித கவலை யுமின்றி அதே ஹாலில் பரப்பி வைக்கப்பட்டி ருந்த நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்.

Continue Reading →

“மலைகளைப் பேசவிடுங்கள்” வெளியீடும் – மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்” நூல் வெளியீடும்!

“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர்  எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்"  நூல் வெளியீடும்!“மலைகளைப் பேசவிடுங்கள்” வெளியீடும் – மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர்  எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்”  நூல் வெளியீடும்!

‘வண்ணச் சிறகு’ அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே”  கவிதை நூல், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ – அறிமுகம்  ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் “காலம்”  கலை இலக்கிய சிற்றிதழின்  “தெளிவத்தை ஜோசப்”  சிறப்பிதழ் ஆகியவற்றின்  அறிமுகமும்  இம்மாதம்   9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.

முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

Continue Reading →

‘சம உரிமை’ இயக்கத்தினரின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டம் பற்றி…

நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ‘ஹீரோஸ் பிளேஸி’ல் ‘சம உரிமை’ இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.

Continue Reading →

பன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்! அறிவிப்பும் அழைப்பும்!

கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.  நல்ல பயனுள்ள அறிவுப்பரிமாற்றத்திற்கு வருகையும் கட்டுரையும் தருவீர்களாக/ தொடர்புக்கு அழைக்கவும்:  9283275782

Continue Reading →