கவிதை; திருவிழாவில் தொலைந்து போதல்

- தம்பா (நோர்வே) -விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

Continue Reading →

சிறுகதை: பேராண்டி….!

ஶ்ரீராம் விக்னேஷ்–  கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர்  இளசை அருணா ஆகியோரைத்  தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு,  நவம்பர்  –  2004 ல்,  எட்டயபுரம் – பாரதியார்  மணிமண்டபத்தில்  வைத்து  வெளியிடப்பட்ட,  “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத்  தொகுப்பில் வெளிவந்த   சிறுகதை  இது.) –


பெளர்ணமி  நிலவின்  ஆக்கிரமிப்பு  மீண்டும் ஒரு  பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின்  மெல்லிய வருடலினால், உடம்பை  இலேசாக  நெளித்துக்கொண்டேன்.

என்னைத்  தோளில்  சுமந்தபடி  நடந்துகொண்டிருந்த  தாத்தாவின்  கம்பீரம்  என்னை  உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.

தெற்கே  இரண்டு  மைலுக்கப்பால்,  ரயில்  பாதையில்  புகையைக்  கக்கிக்கொண்டு  குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின்  ஒலி  தெளிவாகக்  கேட்டது.

“பேராண்டி…. மணி  ரண்டு  ஆயிடுச்சுல…. சினிமா  முடிஞ்ச  உடனே கிளம்பியிருக்கணும்….  ரொட்டிக்கடைக்குப்  போனதால  லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா  கெட்டியா  உக்காந்துக்க…. தூங்கிக்  கீங்கி  விழுந்துடாதல…. இன்னும்  சத்துநேரத்தில  வீடு வந்திடும்…. சரியா…..”

“ நான்  ஒண்ணும்  தூங்கல்ல  தாத்தா….” பதில்  கூறினேன்  நான்.

இலேசாகத்  திமிறினார்  தாத்தா. அவர் பேச்சிலே  சிறிது  கோபம்  அடுத்து  வெளிவந்தது.

“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு  கூப்பிடச் சொல்லிக்கிட்டு  வர்றேன்…. நீ என்னமோ  ஓம்புட்டு  இஷ்டத்துக்கு  இழுத்து  உட்டுக்கிட்டே  போறே…. சொல்லுலே….”

“சரிலே…. பேராண்டீ………………..”  சத்தமாகச்  சொன்னேன்  நான்.

“கெக்கெக்கே….” என்று  தனது  பொக்கை  வாயால்  சிரித்துக்கொண்டார்  தாத்தா. தன்னோடு  சரிக்குச் சரியாக  நான்  பேசுவதில்  அவர்  கண்ட  இன்பம்  என்னவோ!

“பேராண்டி…. எனக்கொரு  சந்தேகம்….”  மெதுவாகக்  கேட்டேன்.

தாத்தா  உற்சாகமானார்.

“கேளுல…. கேளு…. என்னா  சந்தேகம்…. எப்ப  உனக்கு  கல்யாணம்  பண்ணி வைக்கப்  போறேன்னு  கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல  ஒண்ணு  கட்டிக்கிட்டு,  அப்புறமா  உனக்கு  ஒண்ணு  கட்டி  வெக்கிறேன்….”

சொல்லிவிட்டு  மீண்டும்  “கெக்கெக்கே….” சிரிப்பு  தாத்தாவுக்கு.

மீண்டும்  நெளிந்தேன்  நான்.  பதிலடி  கொடுக்க  நினைத்தேன்.

“எதுக்கு  பேராண்டி  ஆளுக்கு  ஒண்ணு…. பேசாம  நாம  ரண்டுபேருமா  ஒரு  பொண்ணையே  கட்டிக்குவோம்….”

தாத்தாவுக்கு  பெரிய  குஷி.  அவர்  சிரித்த சிரிப்பின் குலுக்கலால்  என்  அடிவயிறு  கலங்கியது.

எனக்கு  சிறிது  கோபம்.  பேசாமல்  இருந்தேன்  நான்.  தாத்தா  என்னை  உலுக்கினார்.

“பேராண்டி…. என்னலே  உம்முண்ணு  இருக்கே…. நீ  கேக்கவந்த  விசயத்தை  மறந்திட்டியா…. சரிசரி….  இப்ப  கேளு….”

“இப்ப  உம்பேரு  என்ன  உண்டோ…. அதே  பேருதான்  எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது  ஏன்….?”

Continue Reading →

(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ ? டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )

– பாடகர் டி.எம்.எஸ் (டி.எம்.செளந்தரராஜன்) அவர்களின் நினைவு தினம் மே25. அதனையொட்டிய நினைவு பகிர்தல் –

எழுத்தாளர் உமா வரதராஜன் & டி.எம்.எஸ்

பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மறைந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.. ஒருவரின் மரணத்தை அவன் இறந்த நாளிலிருந்து கணிப்பதுதான் வழமை. ஆனால் ஒரு கலைஞனின் மரணம் வேறு விதமாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு . புகழ் வெளிச்சம் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகலத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து அவன் தனக்குள் சிறிது சிறிதாக மரிக்கத் தொடங்குகின்றான். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் டி.எம்.எஸ். அவர்களை நான் சந்தித்தேன். நான் அவரை சந்தித்த போது அவருக்கு எண்பத்தொன்பது வயது.

உரையாடல் சுவாரஸ்யம் கொண்ட ஒரு கட்டத்தில் ”வா … என் அறைக்குள்ளயே உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம் ” என த் தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்று விட்டார் .
‘புகழின் வெளிச்சத்தில்’ வாழ்ந்து பழக்கப் பட்ட ஒரு கலைஞனின் அந்திம காலத்து தனிமையின் இருளையும் ,துயரத்தையும் அவருடன் கழித்த அன்றையப் பகல் பொழுதில் உணர்ந்தேன்.

”தில்லையம்பல நடராஜா ”,’தாழையாம் பூ முடிச்சு..’,ஒரே ஒரு ஊரிலே ..’ பாடல்களை எல்லாம் பெட்டி மொடல் பிலிப்ஸ் ரேடியோவில் நான் ஆர்வத்துடன் கேட்ட அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தேன். அப்போது சின்னப் பையனாக அறியாப் பருவத்தில் இருந்த நான் வானொலிப் பெட்டியின் பின்புற துவாரம் வழியாக அவற்றைப் பாடிய டி.எம்.எஸ்.ஸை தேடிய கதையையும் கூறினேன். …எம்.ஜி.ஆர்.,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் . போன்றோர்கள் திரையில் தோன்றி வெளிப்படுத்திய குணச்சித்திரங்களை திரைக்குப் பின்னால் குரல் வழியாக நடிப்புடன் பாடிய அவருடைய அபூர்வ ஆற்றலைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே போனேன். என் சிறு வயதில் பிரியத்துக்குரிய நடிகர் எம்.ஜி.ஆர். தன் பாடல்களில் அவர் முன் வைத்த கருத்துகளால் உலகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என நான் நூறு வீதம் நம்பியதையும் ,அவற்றை இருநூறு வீத நம்பிக்கையுடன் டி.எம்.எஸ். பாடிய தொனியையும் சிலாகித்துக் கூறினேன்.

இறந்த காலங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து ,எதிர் காலம் பற்றிய கனவுகளையே அவர் வெளிப் படுத்த முயன்று கொண்டிருந்தார்..நான் அவரை அவ்வப்போது நிகழ் காலத்துக்கு கொணர மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..அசாத்தியமான எதிர்கால ஆசைகளுக்கும் , ஒளியின் கனவாகிப் போன இறந்தகாலத்துக்கும் ,தனிமையின் துயரும்,இருளும் படிந்த நிகழ்காலத்துக்கும் நடுவே மாறி மாறி அவருடைய ஊஞ்சல் பயணித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் தூக்கக் கலக்கத்தில் பேசுவது போல் அவர் வார்த்தைகள் வெளிவந்தன .

”ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா? தனிமை… இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை…ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்னுடைய அப்போதைய சம்பாத்தியத்தில் இந்த சென்னையின் அரை வாசிப் பகுதியையே வாங்கியிருக்கலாம் … ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.ஜாலியாக வாழ்ந்து விட்டேன்…. இப்போது யாருமில்லை… உன்னைப் போல் எங்கிருந்தோ ,எவனோ ஒருவன் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான்…அதுதான் நான் தேடிய பெரிய சொத்து….”

Continue Reading →

ஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்

ஆய்வுக் கட்டுரைகள் படிப்போம்.பேராசிரியா் மலையமான்தமிழ்மொழி  உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார்.  உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி  இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.

முத்தமிழில் மூன்றாந்தமிழான  நாடகத்தமிழ், கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாக விளங்குவது திண்ணம்.படித்தறியா பாமரா்களும் விரும்பி ரசிக்கும் இக்கலை பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. நாடு +அகம்= நாடகம். அகத்தை நாடி வரும் கலை நாடகம்.  உயிர்ப்பான இக்கலையை இயலும் இசையும் கூடி, எண்வகை மெய்ப்பாடுகளும் சுவையுந் தோன்ற மேடையில் தோன்றி பாடி ஆடி நடித்து வெளிப்படுத்துவா். இத்தகு சிறப்புடைய நாடகமானது மேடை நாடகம், செய்யுள் நாடகம் என இருவகைகளில் இயற்றப்படுகிறது. பேராசிரியா் மலையமான் இயற்றியுள்ள நீா்மாங்கனி, செய்யுள் நாடக வகையைச் சார்ந்தது. இந்நாடகக் கட்டமைப்புத்திறனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பேராசிரியா் முனைவா் மலையமான்:
மலையமான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15.07.1932 இல் நாராயணணன் –பாலகுசாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவா். இயற்பெயா் இராசகோபாலன். போளுரில் தொடக்கக் கல்வி கற்றவா். புலவா்,  முதுகலை முதல் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் முனைவா் பட்டம்வரை பெற்றுள்ளவா். பதிவுத்துறையில் எழுத்தா், வரைவாளா், பள்ளி ஆசிரியா், பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியா், நூலகா், பதிப்பாசிரியா் என பல்வேறு துறைகளில் தனது அயராத உழைப்பையும் சேவைகளையும் புரிந்துள்ளார். தான் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் எழுத்துறையில் தொடா்ந்து தன் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

“சில ஆய்வாளா்கள் கவிதைகளின் சுவை இன்பத்திலே திளைத்து அவற்றை மாந்தி குடிப்பதும் மாந்தா்களுக்கு கொடுப்பதும் வழக்கமாகக் கொள்வா். மலையமானோ மூலத்தையே கண்டறிந்து தமிழ் ஞாலத்திற்குக் கொடுக்கிறார்”2 என்கிறார் இலக்கிய செல்வா் முனைவா் குமரி அனந்தன்.

மலையமான் கவிதைகள்(கவிதை), தமிழ் ஆட்சி மொழி சிக்கல்கள் (ஆராய்ச்சி), நோபில் பரிசு பெற்ற கவிஞா்கள்(வாழ்க்கை வரலாறு), திருக்குறள் துளிகள்(கட்டுரை)  ஆகியவை பெரியவா்களுக்கான இலக்கிய கொடையாக அளித்துள்ளார். சிறுவா் இலக்கியத்துறையில் மிக்க ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பனித்துளிக் கதைகள், பண்புநெறிக் கதைகள், மூன்று அரும்புகள் முதலிய கதை இலக்கிய நூல்களையும் அறிவியல் சிறுகதைகள் உள்ளிட்ட அறிவியல் கதைகள் அறிவியல் வெளிச்சங்கள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரை நூல்களையும் பல்வேறு தொகுதிகளாக எழுதி குவித்துள்ளார்.

நாடகத் துறை:

நாடகத்துறையில் மிக்க ஆா்வமும் ஈடுபாடும் கொண்டு நோயே டாக்டரானால், உதவித் திருமணம், புதுமைப்பரிசு( வரலாற்று கவிதை நாடகம்), இருதலைப் பறவை, திருஞானசம்பந்தர் வரலாற்று நாடகம்,  இரண்டாம் கண்ணகி (சமுதாய நாடகம்) ஆகியவற்றை இயற்றி தமிழ்க்கொடை செய்துள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் தொடா்ந்து 20 வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளமை, இவரது நாடகத்திறனுக்கான சான்று. இராணிமேரிக் கல்லூரி மாணவியா் இவரது நாடகங்களை அரங்கேற்றி சிறப்படைந்தனா்.

Continue Reading →

இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்

- சுப்ரபாரதிமணியன் -” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள்  ஒன்றுகூட சந்தர்ப்பங்கள்  இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான  தொழிற்சங்கங்கள் இருந்தன.  எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில்  தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.சமுதாயத்திலிருந்தே இலக்கியம் வருகிறது. அது எந்தக்காலத்திலும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் “ என்றார் எழுத்தாளர் இரா.முருகவேள் ஞாயிறு அன்று திருப்பூரில்   நடைபெற்ற  ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை & அன்னையர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார்.

கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம் 12/5/19 ஞாயிறு ,. எம்கேஎம் ரிச் ஹோட்டல், ராயபுரம் பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் காலனி அருகில், திருப்பூரில் நடைபெற்றது. எம்கேஎம் ரிச் ஹோட்டல்  உரிமையாளர் எம்கேஎம் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். .தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) வரவேற்புரை :தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ). பயிலரங்கங்கள் நடைபெற்றன .சிறுகதை பயிலரங்கம் ( இரா.முருகவேள், சுப்ரபாரதிமணியன் நடத்தினர் .)., கவிதை பயிலரங்கம் ( நறுமுகை தேவி,சுபசெல்வி நடத்தினர்) பாடல்கள் பயிலரங்கம் ( துருவன் பாலா, துசோபிரபாகர் நடத்தினர் ) கனல்   “ அரசியல் கவிதைகள் “ என்றத் தலைப்பிலும்., சிவதாசன் மரபுக்கவிதையும் ஓசையும் என்றத் தலைப்பிலும்  உரையாற்றினர் 

அன்னையர் தினththaiththaithத்தை முன்னிட்டு சுப்ரபாரதிமணியன்   ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “ பெண்களும் தொழிற்சங்கங்களும் :என்ற நூலினை  munnittu எழுத்தாளர் இரா.முருகவேள்  வெளியிட பேராசிரியை சுபசெல்வி munniபெற்றுக்கொண்டார்.( இதை திருப்பூர் சேவ் அமைப்பு வெளியிட்டுள்ளது .) கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை, கதை எழுதுவது பற்றிக் கற்றுக் கொண்டனர்.மகிழ்ச்சியடைந்தனர்.

Continue Reading →

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் – லெனின்

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்– “மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்” என்னும் வலைப்பதிவொன்றினை எழுத்தாளர் A.K..ஈஸ்வரன் நடாத்தி வருகின்றார். “மார்க்சிய அடிப்படைகளை நூல்களாக எழுதுதல்” என்பதைத் தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கிவரும் தளமிது. அத்தளத்திலிருந்து இக்கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம் மிகவும்  பயனுள்ள மீள்பிரசுரம் என்பதால். –

(மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்பதின் தோற்றத்தையும், அதன் உட்கூறுகளையும் லெனின் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். மார்க்சியம் எந்தவித குறுங்குழுவாதத்தின் அடிப்படையில் தோன்றியவை கிடையாது, உலக நாகரிக வளர்ச்சியின் தொடர்க்சியே மார்க்சியம். மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்சியம் விடைகளிக்கிறது. மார்க்சியத்தை சுயமாக அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த சிறிய கட்டுரையை பலமுறை படிக்க வேண்டும். மார்க்சியத்தின் இந்த மூன்று உட்பிரிவுகளையும் தனித்தனியாக என்ன பேசிகிறது என்பதை மனதில் நிறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களைப் படிக்கும் போது, அது எந்தப் பிரிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை அறிந்து படித்தால் தெளிவுகிடைக்கும்.)

மார்க்சின் போதனை, நாகரிக உலெகங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான “நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்” என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் “ஒருசார்பற்ற” சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் “குறுங்குழுவாதம்” போன்றெததுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல, உலக நாகரிக வளர்ச்கியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என் பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதைன மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூனறு உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்புநூருல் அயின்திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் ‘பண்பாடும் பெண்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி – சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ‘ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Continue Reading →