நூல் மதிப்புரை“செம்மையான வரலாறு’’

உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். அவற்றுள்ளும் செம்மொழித் தகுதியுடைய மொழிகள் என்று பார்த்தால் பத்து மொழிகள்தான் தேறும். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் செம்மொழிக்கென்று வரையறுக்கப் பெற்றிருக்கும் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கும் ஒரே மொழி, தமிழ் மொழிதான். இது உணர்ச்சிவயப்பட்டுக் கூறும் கூற்றன்று. மொழியியலாளர்கள் ஒத்துக்கொண்ட உண்மையாகும். அந்த உண்மையைத் தெளிவுபடுத்தும் நூல் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் ‘தமிழ்ச் செம்மொழி வரலாறாகும்’. ஒன்பது உட்தலைப்புகளில் தமிழ்ச்செம்மொழி வரலாறு விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

Continue Reading →

‘ஞானம்’ ஆகஸ்ட் 2011 வெளிவந்து விட்டது!

அன்புடையீர், வணக்கம்! ‘ஞானம்’ இதழ் பற்றிய கருத்துகளை அறியத்தாருங்கள். அன்புடன், தி. ஞானசேகரன், ஆசிரியர் ‘ஞானம்’“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்”editor@gnanam.info

Continue Reading →

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011!

கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011. - நோயல் நடேசன் - கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.

Continue Reading →

‘நாம்’ வெளிக்கொணரும் ‘தனி’!

”தனி” – இதழ் இருமாதங்களுக்கு ஒரு முறை கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இதழ் சிறப்பான முறையில் நண்பர்களுக்கு வணக்கம்!  ”தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது. “தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக  அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள்.  ”தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.

Continue Reading →

கா. விசயரத்தினத்தின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’

எழுத்தாளர் கா. விசயரத்தினம்கிடைக்கப் பெற்றோம்![‘பதிவுகள்’ இணையத் தளத்தில் உங்களது நூல்கள் பற்றிய விபரங்களை வெளியிட விரும்பினால், பிரதியொன்றினை எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள் -] இலண்டனில் வசிக்கும் எழுத்தாளர் கா. விசயரத்தினத்தின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ ( Ancient Tamils Social Imbalances’) நூல் கிடைக்கப் பெற்றோம். ஆசிரியரின் 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தமிழர் இலக்கியம், சமயம், அரசியல், கட்டடக்கலை,  எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கித் தொகுப்பின் ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன.  மனுநீதி போன்ற  நூல்கள் போதிக்கும் தீண்டாமை, உடன் கட்டை ஏறுதல் போன்ற பெண்களுக்கெதிராக நிலவிய அடக்குமுறைகளைப் பற்றியெல்லாம் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆசிரியரின் மேற்படி நூலினை வாங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

Continue Reading →

கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் இரு விருதுகள்!

கவிஞர் தீபச்செல்வனுக்கு இரு விருதுகள்!கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது, மற்றும் நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது ஆகிய இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது. நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →

Man Booker Prize 2011 longlist announced. Four first time novelists selected

26 July 2011-  The longlist for the 2011 Man Booker Prize for Fiction - the ‘Man Booker Dozen' - is announced today, Tuesday 26 July. The 13 books on the list include: one former Man Booker Prize winner; two previously shortlisted writers and one longlisted author; four first time novelists and three Canadian writers. The list also includes three new publishers to the prize - Oneworld, Sandstone Press and Seren Books.26 July 2011-  The longlist for the 2011 Man Booker Prize for Fiction – the ‘Man Booker Dozen’ – is announced today, Tuesday 26 July. The 13 books on the list include: one former Man Booker Prize winner; two previously shortlisted writers and one longlisted author; four first time novelists and three Canadian writers. The list also includes three new publishers to the prize – Oneworld, Sandstone Press and Seren Books.

The titles were chosen by a panel of five judges chaired by author and former Director-General of MI5, Dame Stella Rimington. A total of 138 books, seven of which were called in by the judges, were considered for the ‘Man Booker Dozen’ longlist. They are:

Continue Reading →

தொடர் நாவல்: மனக்கண் (4)

4-ம் அத்தியாயம்: தங்கமணி

ஐஸ்கிறீம் பார்லரில் காதலர்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்

“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் “வழமையான இடம்.” இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி “ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அறை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் – சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் – காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

Continue Reading →