ஒரு நிஷ்காம கர்மி

- வெங்கட் சாமிநாதன் -நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம்  படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை. மாலை ஆறு மணிக்குத் தான் அது விழித்தெழும். எழுந்ததும் சித்ரஹாரும் காந்தான் ஹிந்தி சீரியலும் தான் கதி என்றிருக்க வேண்டும். உலகம் முழுதும் அப்போது பெட்டியின் முன் கண்கொட்டாது அமர்ந்திருக்கும். ஆதலால் டேப் ரிகார்டர் தான் வேண்டும்  சமயத்தில் எல்லாம் உயிர்த் தெழும். கிட்டப்பாவிலிருந்து குமார் கந்தர்வா வரைக்கும் எனக்கு வேண்டும் பாட்டைப் பாடுவார்கள். அந்த 1988=ம் வருடத்தில் தான், ஏதோ ஒரு மாதம். ஒரு நாள். சங்கீத் நாடக் அகாடமியிலிருந்து நண்பர் கே.எஸ் ராஜேந்திரன் வந்திருந்தார். அந்நாட்களில் அவ்வப்போது வந்து என் தனிமையை மறக்கச் செய்த நண்பர்களில் அவரும் ஒருவர். அந்த பாபா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் சிகித்சை தொடங்கிய நாட்களிலிருந்து தொடக்கம். ஹாஸ்பிடல் தில்லியின் வடக்கு ஓரம்.. என் வீடு தில்லியின் தெற்கு ஓரம். விபத்துக்கு முந்திய காலங்களில் சினிமாவோ, நாடகமோ, நாட்டியமோ விழாக்களோ எதுவானாலும் மையம் கொள்வது அந்த மண்டி ஹௌஸ் சந்திப்பில் தான். சங்கீத நாடக் அகாடமியும் அங்கு தான். ஆக, என் மாலைப் பொழுதுகள் எப்படிக் கழியும் என்பது என் எல்லா நண்பர்களைப் போல அவருக்கும் தெரியும். வந்தவர் சங்கீத நாடக் என்னும் அகாடமியின் பத்திரிகைக்காக இந்திய நடனங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்றார். கால் முறிவானதால் நான் நீண்ட விடுமுறையில் இருந்தேன். படிக்க எழுத நிறைய நேரம் கிடைத்த ஒரு சௌகரியம். கால் எலும்பு முறிந்து நடக்க முடியாது போனாலும் ஒரு அசௌகரியத்தை ஈடு செய்ய ஒரு சௌகரியம் பிறந்து விடுகிறது. கையெழுத்துப் பிரதியாகக் கொடுத்தாலும் எடுத்துக்கொள்ள, தெரிந்தவர்கள் தயங்குவதில்லை. அது சாஹித்ய அகாடமியின் என்சைக்ளோப்பீடியாவோ, பத்திரிகைகளோ, அல்லது பேட்ரியட் லிங்க் போன்ற தனியார் பத்திரிக்கைகளோ, எதாக இருந்தாலும், அதில் இருந்தவர்கள் என் நிலை தெரிந்தவர்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)

வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)In our Translated World என்னும் கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்த இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘டொராண்டோ’ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ள இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘தமிழ் இலக்கியத்தோட்டம்(கனடா);  ‘டிரில்லியம் அறக்கட்டளையி’ன்’   நிதியுதவியுடன் வெளியிட்டுள்ள தொகுப்பு. இவ்விதமானதொரு தொகுதிக்கு நிதியுதவி வழங்கிய ‘டிரில்லியம் அறக்கட்டளையும், இவ்விதமானதொரு தொகுதியினை வெளியிட முனைந்த தமிழ் இலக்கியத் தோட்டமும், வெளியிட்ட பதிப்பகமான TSARஉம் பாராட்டுக்குரியவை. இந்த நூலினை எனக்கொரு பிரதியினை அனுப்பிய எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும் எனது நன்றி. இத்தொகுப்பினை நான் வாசித்தபொழுது இதனை நான் அணுகியது பின்வருமாறு: இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரின் தொகுப்பு பற்றிய நோக்கம், இத்தொகுப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் படைப்புகள். தொகுப்பாளரின் நோக்கத்துக்கமைய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று இவ்விதமான அணுகுமுறையின் மூலம் தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தேன். அது பற்றிய எனது கருத்துகளின் பதிவுகளே இக்கட்டுரை.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்![ அணமையில் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதைகளும், நானே மொழிபெயர்த்த அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் ஒரு பதிவுக்காக இங்கு பதிவுகள் வாசகர்களுக்காக பிரசுரமாகின்றன. – வ.ந.கி. ]

1. ஒரு பொறாமைமிக்க கவிஞன்!

– வ.ந.கிரிதரன்

எனக்குப் பறவைகளின்மேல் பொறாமையாகவுள்ளது.

சிலநேரங்களில் என்னை அவற்றிடத்திலிருத்தியுள்ளவாறு
கனவு காண்கின்றேன்.

நிலமானது வசந்தத்தில் பூத்துக்குழுங்கும்போது
அவை இங்கு, வடக்குக்கு தெற்கிலிருந்து
வருகின்றன.

அவை களைப்பற்றுப் பறப்பவை.

Continue Reading →

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – நூல் வெளியீட்டு விழா

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழாஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ்வாலயத்திலிருந்து பிரபந்தப் பெருந்திரட்டு மதகுருமார்கள், சமயப் பெரியார்கள், அறிஞர்கள் இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் சகிதம் புலவர் ஊஞ்சல் பாடிய வல்லைவாளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது.

Continue Reading →

கனடா: “உரையாடல்” இலக்கிய சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாள் மாற்றம்!

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்! எதிர்வரும் சனிக்கிழமையன்று (25.01.14) “உரையாடல்” ( கலை, இலக்கிய மும்மாத இதழ்) வெளியீட்டு நிகழ்வு ஸ்காபுரோ சிவிக்சென்ரரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.…

Continue Reading →

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது – 2013

1_theodorebaskaran5.jpg - 20.96 Kbனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஆவர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன்  போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன்  சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம்  ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)  ஆகிய நூல்களைப் பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.     காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது.  சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை 2009  இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராக உள்ளார்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 36 : கோபிநாத்தின் ‘நீயா நானா’ பற்றி நான்!

கோபிநாத்தின் 'நீயா நானா' பற்றி நான்! ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன்நண்பர் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் கூறியதால் இன்று (ஜனவரி 19, 2014)  கோபிநாத்தின் ‘நீயா நானா’ பார்க்கவேண்டுமென்று நினைத்தேன். சந்தர்ப்பமும் அமைந்தது. இதுதான் நான் முதல்முறையாக ‘நீயா நானா’ நிகழ்வொன்றினை முழுமையாகப் பார்ப்பது. கல்லூரியில் படிக்கும் ஏழை , பணக்கார மாணவர்களின் உளவியலை அவர்களுடனான உரையாடல் மூலம் கோபிநாத் வெளிக்கொணர்ந்தார். இந்நிகழ்வின் முக்கியமானதோர் அம்சமாக அவர் ஏழை மாணவர்கள் பக்கத்திலுள்ளவர்களிடம் ‘நேரு இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும், பணக்கார மாணவர்கள் பக்கத்திலிருந்தவர்களிடம் ‘அம்பேத்கார் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் இரண்டு நிமிடங்களாவது பேசக் கூறியபோதூ அவர்களிலொ ருவராளாவது பேச முடியவில்லை. அப்பொழுது கோபிநாத் மாணவர்களைப் பார்த்து இதனைப் பார்வையாளர்களிடமே மதிப்பிட விட்டுவிடுகின்றேன். என்று கூறியதுடன் மாணவர்களைப் பார்த்து இதே நேரம் உங்களிடம் இரு நடிகர்களைப் பற்றிப் பேசுமாறு கூறினால் பேச மாட்டீர்களா என்று கேட்பார். மாணவர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கேள்வியது. இன்னுமொரு மாணவர் அரசியல்வாதியாகப் போக விரும்புவதாகக் கூறியிருப்பார். அவராலும் நேரு, அம்பேத்கார் பற்றிச்சிறிது நிம்மிடங்களாவது பேச முடியவில்லை. வெட்கப்பட வேண்டிய விடயமிது. அதனையும் கோபிநாத் சுட்டிக்காட்டியிருப்பார்.

Continue Reading →

ஆய்வு: முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்

முன்னுரைதமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும்…

Continue Reading →

ஆய்வு: முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்

முன்னுரைதமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும்…

Continue Reading →

ஆய்வு: கற்பகத்தருவான பனை

ஆய்வு: கற்பகத்தருவான பனைநுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஒரு முளையிலையுடைய செடியானதும் ஒற்றைத்தடி மரவகையானதுமான பனை, புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினமாகும். பனை தானாகவே வளர்ந்து மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களையும,; பாவினைப் பொருட்களையும் அதன் வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதால் அதைக் ‘கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்’  என்றும், ‘கற்பகத்தரு’ என்றும் போற்றுகின்றனர். பனை கூர்மையான முனைகளைக் கொண்ட ஓலைகளையும் செதில் போன்ற கருத்த தண்டுப் பகுதியையும் உடைய உயரமான மரமாகும். இது வெப்ப மண்டலப் பரப்பெல்லைகளில் வரட்சிகளைத் தாங்கி இயற்கையில் தானாகவே வளரக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. பனையை ஒரு மரம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆனால் தொல்காப்பியர் (கி.மு. 711) ‘பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘புறக்கா ழனவே புல்லெனப் படுமே’ (பொருள் 630) – புற வயிர்ப்பு உடையனவற்றைப் புல்லென்று சொல்வர், அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன என்றும், ‘அகக்கா ழனவே மரனெனப் படுமே’ (பொருள் 631) – உள்ளுறுதி உடையன மரமென்று கூறப்படும் என்றும் குறிப்பிட்டமை நோக்கற் பாலதாகும்.

Continue Reading →