காவ்யா தமிழ் இதழ் மற்றும் திலகபாமா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா!

திலகபாமா

காவ்யா தமிழ் இதழ் மற்றும் திலகபாமா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! [தகவல்:  திலகபாமா mathibama@yahoo.com ]

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் —03: அச்சுப்பிசாசை விரட்டுவதற்கு அயராமல் உழைத்த பெருந்தகை இலக்ஷ்மண ஐயர்

 இலக்ஷ்மண  ஐயர்எழுத்தாளர் முருகபூபதிபடைப்பாளிகளையும்   பத்திரிகையாளர்களையும்  கல்வித்துறை  சார்ந்த  ஆசிரியர்கள்,  விரிவுரையாளர்கள்,    பேராசிரியர்கள்   மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்   ஒரு  பிசாசு  இருக்கிறது.   இது  கண்களுக்குத்தெரியும்   பிசாசுதான்,   ஆனால்   எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்.  எங்கே  எப்படி  காலை வாரிவிடும்  என்பதைச்சொல்லமுடியாது. மானநட்ட  வழக்கிற்கும்  தள்ளிவிடும்  கொடிய  இயல்பு  இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான்  அச்சுப்பிசாசு. மொழிக்கு  ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான்.  1990  ஆம்  ஆண்டு  மறைந்த  எங்கள்  கல்விமான்  இலக்ஷ்மண  ஐயரை  நினைக்கும்  தருணத்தில்   அவர்  ஓட ஓட விரட்டிய  இந்த  அச்சுப்பிசாசுதான்  எள்ளல்  சிரிப்போடு   கண்முன்னே  தோன்றுகிறது. இலக்ஷ்மண  ஐயர்   கொழும்பு  மலே வீதியில்  அமைந்த  கல்வி  அமைச்சில்   தமிழ்ப்பிரிவின்  வித்தியாதிபதியாக  பணியாற்றிய  காலத்தில்  எங்கள்  நீர்கொழும்பூர்  விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின் ( தற்பொழுது  இந்து மத்திய  கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது)   பழைய  மாணவர்  மன்றத்தை  உருவாக்கியிருந்தோம் பாடசாலையில்  எமது  மன்றம்  நடத்திய  நாமகள்  விழாவுக்கு  பிரதமவிருந்தினராக  இலக்ஷ்மண  ஐயரை  அழைப்பதற்காக  சென்றிருந்தோம்.

Continue Reading →

சிறுகதை -”எங்கேயும் மனிதர்கள் “

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்த புத்தகம். வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூட தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன் போல் பார்த்துப்பார்த்து தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன. ஆனால் இந்த பூம்பட்டு புத்தகம்  மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. .சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான். எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது ?  கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ? கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும்  சுமிக்கு,  தோள் பையில் அந்தர்தியானமாகிப்போன புத்தகம் கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம் தான். அந்த கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்கு  சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.! என்னமோ சந்திர மண்டலத்துக்குப்போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும். இந்தா இருக்கும் கேரளா .  கண்மூடி கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள். மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று  யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே ? அரைக்கண் உறக்கத்தில், ஏதோ  ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை  ஞாபகப்படுத்துகிறாள்  விமானப் பணிப்பெண் . அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட,  அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டு விட்டாள். குளித்து, ஜெபித்து,நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய ‘டொராண்டோ ஸ்டார்’ ஆசிரியருக்கான கடிதம் பற்றி..

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதமும், 'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்')  மற்றும் A SQUIRREL AND I (ஓர் அணிலும் நானும்) ஆகிய ஆங்கிலக் கவிதைகளும்.அண்மையில் ‘டொராண்டோவி’ருந்து வெளிவரும் ‘டொராண்டோ ஸ்டார்’ தினசரியில் ஏப்ரல் 2, 2013இல் வெளியான ‘தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்’ பற்றி ‘டெப்ரா பிளாக்’ ((Debra Black) எழுதிய கட்டுரை பற்றி,  கனடிய பல்லின இலக்கியம், மற்றும் கனடிய இலக்கியம்’ பற்றிய எனது கருத்துகளைச் சிறியதொரு வாசகர் கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். அதனை ‘டொராண்டோ ஸ்டார்’ தனது ஏப்ரல் 4, 2013 பதிப்பிற்கான ஆசிரியர் கடிதத்தில் ‘Shedding light on ethnic literature’ என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. அக்கடிதத்தையும், அது கூறும் கருத்துகளையும், அத்துடன் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதையினையும் இம்முறை ஒரு பதிவுக்காகப் பதிவு செய்கின்றேன். மேற்படி கடிதம் சிறியதாகவிருந்தாலும் அது கூறும் விடயம் மிகவும் முக்கியமானது. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆனபடியால் கனடிய இலக்கியமென்றால் மேற்படி மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி மட்டுமே கொண்டதாகப் பலர் கருதிவிடுகின்றார்கள். ஆனால், கனடா பல்லின மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலொன்று. இங்கு வாழும் பல்லின மக்களால் அவர்களது மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகமான ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சு சமூகத்தவரோ அதிகமாக அறியமுடியாத நிலையே நிலவுகின்றது.

Continue Reading →

தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழர் வாழ்க்கை நெறி

[அண்மையில் இலண்டனில் ஆகஸ்ட் 14 தொடக்கம் – ஆகஸ்ட் 18 வரை நடைபெற்ற ‘உலகத் தமிழியல் மாநாடு 2013’இல் ஆகஸ்ட் 15 அன்று  வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.- நுணாவிலூர் கா. விசயரத்தினம். ]

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தொல்காப்பியம் என்னும் நூலை ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 – கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் ‘திரணதூமாக்கினி’ எனவும், ‘சமதக்கினியாரின் புதல்வர்’ எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.

Continue Reading →

தாகூர் 150

தாகூர்சுப்ரபாரதிமணியன்இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த குருதேவ என அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் பல்முகத் தன்மை கொண்டவராக விளங்கின கவிஞர், ஓவியர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.  இது அவரின் 150 வது பிறந்த் தின  நூற்றாண்டு…(2012) தாகூரின் கவிதைகள் பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பேசப்பட்டவை. இந்தியக் கவிதை மரபில் வியாசரும், கபிரும், ராம்பிரசாத்தும் அவரை வெகுவாக பாதித்திருக்கிறார்கள். வங்காள நாட்டுப்புற இசையோடு தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் அவரது கவிதை உலகும் இசையறிவும் பல சிகரங்களை அடைந்தன. இயற்கையும் மனித உணர்வுகளுமான வெளிப்பாடுகள் அவரை, அவர் கவிதைகளை இன்னும் செழுமையாக்கின. முப்பதுகளில் நவீனத்துவமும், யதார்த்தமும் இணைந்த பரிசோதனை முயற்சிகளாக வங்காள இலக்கியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரின் கீதாஞ்சலி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

Continue Reading →

தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து ‘காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு’ எனும் தலைப்பில் நடாத்தும் ஒருநாள் தேசியக் கருத்தரங்கு!

தமிழ்த்துறை  சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து ‘காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு’ எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை அக்டோபர் திங்கள்…

Continue Reading →

பேசாமொழி 9 வது இதழ் வெளிவந்துவிட்டது – லெனின் விருது சிறப்பிதழ்!

நண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன்,…

Continue Reading →

இலண்டன் மாநகரில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகம்!

இலண்டன் மாநகரில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின!இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது ‘இலக்கிய மாலை” நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 – 08 – 2013) மாலை இலண்டன் ‘மனோர் பார்க்” (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் ‘இலக்கிய மாலை” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான ‘இப்படியுமா..?” – சிறுகதைத் தொகுதி, ‘அழியாத தடங்கள்” – கட்டுரைத் தொகுதி, ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?”, ‘மண் மறவா மனிதர்கள்”, ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த ‘இலக்கிய வித்தகர்” த. துரைசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

Continue Reading →