தமிழ் ஸ்டுடியோவின் 5 வது ஊர் சுற்றலாம் வாங்க

தமிழ் ஸ்டுடியோவின் 5 வது ஊர் சுற்றலாம் வாங்கநாள்: 15-09-2012 & 16-09-2012
இடம்: கழுகு மலை (கோவில்பட்டி), குற்றாலம்.
கட்டணம்: அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம் தொடங்கவிருக்கிறது. தேசாந்திரி போல் சுற்றுவதற்கு நாம் கோணங்கியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோணங்கியோடு ஒரு நாள் முழுவதும் இருப்பதும், அவர் கையால் வைத்துக் கொடுக்கும் கருப்பட்டி காப்பியைக் குடிக்கவுமே நான் அடிக்கடி கோவில்பட்டி செல்ல விரும்புவேன். இந்த முறை இந்த வாய்ப்பு கலந்துக் கொள்ளும் அனைவருக்கும்.

Continue Reading →

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும்நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும். இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் ஷஇனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்| என்கின்றனர். கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

Continue Reading →

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வு

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வுஇப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நூல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நூலுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.   கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத் தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நூல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நூல் வித்தியாசமான ஒரு நூலாக இருக்க வேண்டுமென எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். நூலைத்திறந்து உள்ளே நோக்குகையில் நூலின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நூல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

Continue Reading →

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்புயாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.

மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடகவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Continue Reading →

Global Tamil Forum: Sri Lanka masks tyranny with selective democracy

Global Tamil Forum: Sri Lanka masks tyranny with selective democracy– 25 August 2012 – Global Tamil Forum condemns Sri Lankan Government’s indefinite closure of 13 of the 15 state-run universities on the island, in response to strikes over privatisation of the higher education system, politicisation of key appointments in the sector and military training of all university entrants. This latest act to undermine academic freedom and institutional autonomy is a continuation of heavy militarisation of the island to maintain social control and curb any democratic opposition. Denial of university places for qualified Tamil entrants through a discriminatory education policy in the 1970s was a major trigger of the Tamil youth rebellion. The Rajapaksa regime’s use of force and intimidation to rule the population threatens all forms of freedom for expression – the very foundation of democracy. Attacks on journalists, media establishments and human rights activists continue with widespread impunity to censor any criticism of the Government. Centralising powers to the President has already severely compromised the independence of the judicial system on the island and consequently there is breakdown in the rule of law. The UK foreign Office has last week issued a travel advisory warning British citizens of an upsurge in nationalism, sexual offense and anti-Western (particularly anti-British) rhetoric in Sri Lanka.

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் (98)

(98) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு யார் எப்போது எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நினைவு படுத்திச் சொல்வது கடினம். வந்தார்கள். பிறகு வேறு வீடு கிடைத்ததும் சென்றார்கள். சிலர் தேவசகாயம் போல் தமக்கென வீடு கிடைத்த பிறகும், “என்னத்துக்கு அங்கே போய்க் கிடந்துக்கிட்டு..” என்று அலுப்புடன் என்னுடனேயே தங்கினார்கள். இந்த வீட்டில் கிடைக்கும் நண்பர்கள் குழுவையும் அது தந்த கலகலப்பையும் ஆனந்தத்தையும் வீட்டு தனியே போய் எங்கோ முடங்கிக் கிடப்பானேன்.

Continue Reading →

‘நூல்தேட்டம்’ நூலகவியலாளர் என். செல்வராஜா!

'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா!உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.

Continue Reading →

கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை நினைவாக தமிழ்ழ் ‘விக்கிபீடியா’க் குறிப்புகள்: முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 – செப்டம்பர் 21, 2005) .

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி மீள்பிரசுரமாகும் கட்டுரை. தமிழ் விக்கிபீடியா இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (19)

19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமி“உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் “நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.

Continue Reading →

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினமும் , சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றனின் ‘நிஜத்தின் நிழல்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும்!

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினமும் , சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றனின் ‘நிஜத்தின் நிழல்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் (09 செப்டம்பர் 2012 மாலை 4.30) 

Continue Reading →