அஞ்சலி: முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்!

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம், தேசாபிமானி  ஆகியவற்றில் தொடர்ச்சியாக  எழுதியிருக்கிறார். ஆங்கிலம்,   சிங்களம்  ஆகிய மொழிகளில்  சிறந்த  புலமை இவருக்கிருந்தமையால்   அரசியல்  மற்றும்  இலக்கிய  மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும்   செயல்பட்டார்.   இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்  மூத்த  உறுப்பினராகவும்  இவர்  இயங்கிய காலத்தில்   சங்கத்தின்  மாநாடுகள்,   கருத்தரங்குகளில்  பல சிங்களத்தலைவர்கள்,    எழுத்தாளர்களின்  உரையை  அழகாக  தமிழில் மொழிபெயர்த்தவர்.

இலங்கை   கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்து  அதிருப்தியுற்று வி.பொன்னம்பலம்   வெளியேறி  செந்தமிழர் இயக்கம்  என்ற அமைப்பை   உருவாக்கிய வேளையில்  வி. பொன்னம்பலத்துடன் இணைந்து  இயங்கியவர். இலங்கை   அரசசேவையில்  பணியாற்றியிருக்கும்  சிவா சுப்பிரமணியம்   சிறுகதைகள்,   கட்டுரைகள்,  விமர்சனங்கள் முதலானவற்றையும்   சிங்களச் சிறுகதைகளின்  தமிழ் மொழிபெயர்ப்புகளையும்   மல்லிகை   இதழில் எழுதியவர். குணசேனவிதான  என்ற   பிரபல  சிங்கள  எழுத்தாளரின்  பாலம என்னும்   தேசிய  ஒருமைப்பாட்டை  வலியுறுத்திய  பிரபல்யமான  சிங்களச் சிறுகதையை  தமிழில்  மொழிபெயர்த்தவர்.  இதே சிறுகதையை   ஆங்கில  மூலத்திலிருந்து  தமிழ்நாட்டில்  ஜெயகாந்தன்   மொழிபெயர்த்து  தமது  கல்பனா   இதழில் வெளியிட்டிருப்பதும்   குறிப்பிடத்தகுந்தது.

Continue Reading →

சென்னைப்புத்தகக் கண்காட்சியில் ஓவியா பதிப்பக நூல்கள் விற்பனைக்கு…!

சென்னையில் ஜூன் முதலாந்திகதியிலிருந்து நடைபெறவுள்ள புத்தகக்கண்காட்சியில் ஓவியா பதிப்பக நூல்களும் Marina Books பதிப்பகத்தாரின் அரங்கு எண் 202இல் விற்பனைக்காக வைக்கப்படும். முல்லை அமுதன் தொகுத்தளித்த ‘எழுத்தாளர்…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் ‘வேலிகள்’!

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் 'வேலிகள்'!1. போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்! எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவின் முகநூற்பதிவு!

எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா தனது முகநூலில் பின்வருமாறு பதிவொன்றினையிட்டிருந்தார்.

“கிளி நொச்சியில் மு்னனாள் போராளிகளின் வீடுகளை இராணுவம் கையளித்த ஓருமாதமாகியும் அங்கு குடியேறவோ காணியுள் பிரவேசிக்கவோ அரச அதிபர் தடை விதித்துள்ளார். காணியை பார்க்கச் சென்றவர்களை பொலீசை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர். அத்தனை குடும்பங்களும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள் என்பதும் தனித்து பெண்களும் குழந்தைகளுமே உள்ள குடும்பங்களாகும். பல லட்சம் செலவளித்து கட்டிய வீடுகள் இவை என்பதுடன் ஆதரவற்ற நிலையில் இவர்கள் அல்லல் படுகிறார்கள் என்பதும் உண்மை ஒவ்வொரு காரியாலயங்களாக இழுத்தடிக்கப்பட்டு அலைக்களிந்தாலும் காணிகளை தர மறுக்கிறார்கள். இக்காணிகளை யாராவது ஆட்டையப் போட நினைக்கிறாங்களா? சாக்குப்போக்குகள் சந்தேகமாகத்தான் உள்ளன…இச் செய்தியை ஊடகங்களும் ஏனைய வலைத்தளங்களும் பகிர்ந்து கொள்வதன்மூலம் அநாதரவான பெண்களுக்கு உதவமுடியும் நண்பா்களே”

உதவிதான் செய்யவில்லை. உபத்திரவமாவது செய்யாமலிருக்கலாம். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். முன்னாள் போராளிகள் அனைவரின் நல்வாழ்வுக்காகத்தானே போராடினார்கள். எல்லாவற்றையும் இழந்து, எல்லாவற்றையும் துறந்து போராடினார்கள். யுத்தம் மெளனிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாகவிடப்பட்டபோது சமூகம் அவர்களைப்புறக்கணிக்கிறது. இது வருந்தத்தக்கது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 173 : பால்ய காலத்து நண்பர்களும், முகநூலும்!

ஆர்.விக்கினேஸ்வரன்ஆர்.விக்கினேஸ்வரன்முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.

விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.

அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:

“எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர்  வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 – 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல….கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ”பதிவுகள்” இதழின் ஆசிரியர் ”கிரி” (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 172 :இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா! | தமிழகமும், திராவிடக்கட்சிகளும், மூன்றாவது அணியினரும்.. | ‘டொராண்டோவில் மகிந்த ராஜபக்சவும், முள்ளிவாய்க்காலும்’

1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!

இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று.  2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான ‘அசாம் ரைபிள்சி’னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.

இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.      

போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.

Continue Reading →

சிறுகதை: ஆண்களும் பூதமும்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான். சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப்  பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகிவிடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட் பண்ணவேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்துபோயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்கமுடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்துபோயிருந்தேன். அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும்வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவனிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும்.

முதல் நாள் இரவு ஒன்பது மணியைப்போல் வயிற்றைக் கைகளால் அழுத்திகொண்டு அழத்தொடங்கினான். அடி வயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப் பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தான் மகன். பதினொரு மணியளவில் அண்மையில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன்.

Continue Reading →

ஆய்வு: சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும்

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -காவல்மரம் அல்லது கடிமரம் என்பது பண்டைய தமிழர்களின் குலமரபுச் சின்னம். கடி (காவல்) உடைய மரமாதலால் அதனைக் ‘கடிமரம்’ என்றழைத்துள்ளனர். முதன்முதலாகப் பூமியில் மரம் முப்பத்தியெட்டு (38) கோடி ஆண்டுகளுக்கு முன் டெவோனியன் காலக்கட்டத்தில் (Devonian Period) பாலியோஜிக் ஊழிக் காலத்தில் (Paleozicera) தோன்றியது என அறிவியல் விளம்புகிறது. ஆனால், குலமரபுச் சின்னமாகக் காவல்மரம் எப்பொழுது தோற்றம் பெற்றது ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியே காவல்மரம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என்பது குறித்து அறியமுடியாத அளவிற்குப் பழமைமிக்க ஒன்றாக இக்காவல்மரம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. காவல்மரமாகக் கடம்பு, வேம்பு, மா, வாகை, புன்னை போன்றவற்றைச் சங்கத் தமிழர் கொண்டிருந்தனர். தற்காலத்தில் மாநில, தேசிய மரங்கள் (தமிழ்நாடு – பனைமரம், இந்தியா – ஆலமரம்) என்பது சங்ககாலத்தின் எச்சமாகக் கொள்ளப்படுகிறது.

காவல்மரம் என்பது ஒரே ஒரு மரத்தை மட்டும் குறிப்பதாகப் பல பாடல்களில் பதிவுகள் இருக்கச் சோலைகளில் பல மரங்கள் காவல்மரங்களாகப் போற்றப்பட்டுள்ளமையை,

“…………………காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்”            (புறம்.36:8-9)

என்னும் புறப்பாடல் வெளிப்படுத்துகின்றது. எனவே, ஓரினத்தைச் சேர்ந்த பல மரங்களைச் சோலைகளில் காவல்மரங்களாகப் போற்றியிருக்க வேண்டும். அல்லது, பலஇனத்தைச் சேர்ந்த மரங்கள் காவல் மரங்களாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். சேர அரச மரபானது பல குடிகளைக் கொண்டிருந்தது. இதனைச் சேரர்கள், “உதியன், கடுங்கோ, குடக்கோ, குட்டுவன், கோதை, சேரலன், சேரல், சேரமான், பூழியர் முதலிய குடிப்பெயர்களைக் கொண்டிருந்தனர்” என்று               ஆ. தனஞ்செயன் குறிப்பிடுவார். எனவே, ஒவ்வொரு குடிக்கும் உரிய காவல்மரங்களையும் ஒரே சோலையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என அவதானிக்கலாம். சங்ககாலத்தில் காவல்மரம் குறித்த மக்களின் நம்பிக்கையும் அரசாதிக்கத்தின் பொருட்டு அக்காவல் மரம் அழிக்கப்பட்டமை குறித்தும் இக்கட்டுரை ஆய்கிறது.

காவல்மரமும் மக்களின் நம்பிக்கையும்
காவல்மரத்தினைச் சங்ககால மக்கள் அவர்களின் குலக்குறியாகப் போற்றியுள்ளனர். ஒரு இனக்குழு தம் மூதாதையருடன் உறவு வைத்துக் கொள்ளும் அஃறிணை யாவும் குலக்குறியாகக் கருதப்படும். “குலக்குறியியல் பற்றி விளக்கம் அளிப்போர், ‘தாவரங்கள்,விலங்குகள், சடப்பொருட்கள் ஆகியவற்றோடு தனிமனிதரோ ஒரு வர்க்கத்தினரோ கொண்டிருக்கும் குறியீட்டுத் தொடர்பினைக் குறிக்கும் சொல்தான் குலக்குறியியல்’ என்றும், ‘உறவுமுறையின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழும் மக்களுக்கும், தாவர வகைகள், விலங்கினங்கள், இயற்கை பொருட்கள் போன்றவற்றிற்கும் இடையில் ஒருவகைப் புதிரான தொடர்பு நிலவுகிறது என்பது பற்றிய நம்பிக்கையே குலக்குறியியல்’ என்றும் விளக்குவர் (ஆ. தனஞ்செயன்,1996:2)” இத்தகைய குலக்குறியாகக் காவல்மரம் விளங்கியுள்ளது. எனவேதான், அம்மரங்களை வீரர்கள் இரவு, பகல் என்று இருவேளைகளிலும் காவல் காத்துள்ளனர்.

Continue Reading →

ஆய்வு: ஏலாதி உணர்த்தும் ஈகை

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.அடிநிமிர்பு இல்லாச் செய்யுட் தொகுதியால் அறம்,பொருள்,இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று பன்னிருபாட்டியல் இலக்கணம் பகர்கிறது.பதினெட்டு நூல்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.அறநூல் பதினொன்றில் ஒன்றாக ஏலாதி என்ற நூல் விளங்குகிறது. மருந்தால் பெயர் பெற்ற நூல் ஆகும்.ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு,  மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்.மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார்.இந்நூலில் இடம்பெறும் ஈகை செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஈகை என்பதன் பொருள்
தமிழ் – தமிழ்  அகர முதலி ஈகை என்பதற்கு கொடை,பொன்,இண்டு,புலி தொடக்கி,காடை,காற்று,கற்பக மரம்,இல்லாமை,ஈதல்,கொடுத்தல் என்று பல்வேறு விளக்கமளிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி ஈகை என்பதற்கு கொடை,பொன்,கற்பகம்,ஈங்கை,காடை என்று பல்வேறு பொருள் தருகிறது.

ஈகையே அழகு
ஈகை என்ற இயல்பு உயர்குடியில் பிறந்த நான்கு வேதங்களிலும் வழிநடப்பவர்களுக்கு எக்காலத்திலும் அழகைத் தரக்கூடியதாகும்.இதனை,

…………………………வள்ளன்மை – என்றும்
அளிவந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு   (ஏலம்.1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.மேலும் மற்றொரு (ஏலம்.3)பாடலில் ஈகை செய்தல் அரிது என்று  (தானம் அரிது)  எடுத்துரைக்கிறது.

Continue Reading →