வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலின் இரு அத்தியாயங்கள்…

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'விரைவில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ள  எனது ‘குடிவரவாளன்’ நாவலின் அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?), அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்! ஆகிய இரு அத்தியாயங்களை உங்கள் வாசிப்புக்காக இங்கு தருகின்றேன்.

அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)

நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்தோபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: “இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி.” அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை ‘பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..’யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, “எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?” என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: “எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்” என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.

இளங்கோ: “என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே..”

“இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்” என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: “நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே”

இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: “வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்?”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 139 _ ஒரு பதிவுக்காக: வியாளம் பற்றிய அமரர் வெ.சா.வின் கேள்வியும், சில கருத்துகளும்….

வெங்கட் சாமிநாதன்‘தமிழ் ஹிந்து’ இணைய இதழில் (அக்டோபர் 16, 2013)  அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்‘ என்றொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதில் அவர் ‘வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.’ என்று எழுதியிருந்தார்.\

அவர் குறிப்பிட்டிருந்த ‘வியாளம்’ என்னும் சொல் பற்றிய எனது கருத்துகளை அங்கு பதிவு செய்திருந்தேன். அதனையும், அது பற்றிய கருத்துகளையும் (அமரர் வெங்கட் சாமிநாதனின் கருத்து உட்பட) இங்கு பதிவு செய்கின்றேன்.


வ.ந.கிரிதரன் on October 21, 2013 at 8:30 am
வெ.சா.வின் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும். \

வெ.சா.அவர்கள் தனது ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம். தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற
விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும்
படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.

Continue Reading →

மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.

மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.

பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம்.  எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும்  எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.

அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.

Continue Reading →

கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் பாவாரம் ஓர் அறிமுகம்

கவிஞர் கந்தவனம்

த.சிவபாலுதிருமுறைகளுள் தொகுக்கப்பட்ட தேவாரங்கைள ஒத்தவையாக கவிநாயகர் வி. கந்தவனம் அர்களால் யாக்கப்பட்ட பாவாரப் பனுவலில் பாடப்பட்டுள்ள பாக்கள் அனைத்துமே இறையியல் போற்றி, ஏற்றிச் சாற்றப்பட்ட சாற்று கவிகளாகவே அமைந்துள்ளமையை இறையியலை நன்கு அறிந்து சாந்தலிங்க அடியார் தொடக்கம் புகழந்தும் பாராட்டியும் உரை தந்துள்ளமை அதற்குச் சான்றாக அமைகின்றன.

எப்பொரள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் உறுதுணையாக அமைய வேண்டும் என்னும் இல்வாழ்;வின் மெய்மையை உணர்ந்து அதன்வழி வாழ்ந்து இறையியலைத் தன்சென்னியில் வைத்து மக்களை நல்வழிப்படுத்தி வருபவர் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள்.

நான் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற பெரும் பண்பினைக் கொண்டு ஒழுகும் வழக்கலாறு எம்மவர்களிடையே பண்டுதொட்டு நிலவிவரும் வழக்கலாறு. “இறைதொண்டு செய்வதல்லால் யாமொன்றும் அறியோம் பராபரமே’ என இறைவனிடம் தம்மை அர்ப்பணித்து செயற்படுபவர்கள் இவ்வுலவில் அருகிவிட்டனர் என்றேகொள்ளலாம். அத்தகைய அருமையான மக்கள் மத்தியிலே தான் தெரிந்தெடுத்தக்கொண்டு தனிவழியாகச் சென்று இறைமார்க்கத்தை தன்சென்னியில் நிலைபெறுமாறு எண்ணுதியேல் அன்றி வேறு ஏம் அறியாராக இறையியலைத் தன்னை பின்பற்றிவரும் சிவ அடியவர்களைப் பக்குவப்படுத்தி தான் தெளிந்து கொண்ட மார்க்கத்திலே மற்றவர்களையும் ஆற்றுப்படுத்துகின்ற பெரும் பணியினை இன்று கனடாவில் செய்துகொண்டிருக்கக்ககூடியவர்களுள் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் முதன்மையானவர் என்று துணிந்துகூறலாம். சமயத்தொண்டு சமூகத்தொண்டு எனத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருவதினை நாம் தினந்தினம் காண்கின்றோம்.

Continue Reading →

நூல் வெளியீடு: காவ்யா : பறந்து மறையும் கடல்நாகம்

நூல் வெளியீடு: காவ்யா : பறந்து மறையும் கடல்நாகம் காலம்:  ஜனவரி 1, 2016 மாலை 5.30 மணி.| இடம்: 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை…

Continue Reading →

ஆய்வு: மூலப்பாட இனவரைவியலாக்கத்தில் முல்லைப்பாட்டின் சூழமைவு!

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -முல்லைப்பாட்டினை நப்பூதனார் எனும் நல்லிசைப் புலவர் ‘முல்லை’ப்பூவை, திணையாகவும் நிலமாகவும் கொண்டு அக ஒழுக்கத்தினை விரித்துரைத்து செய்யுளாக இயற்றியுள்ளார். ஒரு நிலத்தை தெரிந்து கொள்ள முற்பட்டால் முதலில் அந்நிலத்தில் வாழக்கூடிய கருப்பொருளான உயிரினங்களை உள்வாங்க வேண்டும். பின்பு நிலத்தில் வாழும் தெய்வம் தொடங்கி, மக்கள் புள், பறை, செய்தி, யாழ், பறை என இன்னபிற இனங்களையும் உள்வாங்கி இனங்கான வேண்டும். அவ்வகையில் முல்லைப்பாட்டு  அகமாக இருப்பினும் இரண்டு வகையான கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. அகவாழ்கையில் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவி, அவளது ஊர் வாழ்க்கையும், அதற்கு நேராக போர்க்களத்தில் பாசறையின்கண் நிகழும் போர்ச்செயல்பாடு, அதனைச் சுற்றி நிகழும் வாழ்க்கை எனக் கட்டமைக்கிறது முல்லைப்பாட்டு.

தொல்காப்பியர் இதனை ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ (தொல்.1007)  என்பர். போர்களத்தில் போர்க்காகச் சென்ற தலைவன் முல்லை அகத்திணையின் புறத்திணையை ஒட்டியே வாழ்வதையும், தலைவி வீட்டில் தலைவனுக்காக ஆற்றியிருத்தலும், தலைவன் தலைவிக்காகப் போர்வினை முடிவுக்குக் காத்திருத்தல் என்ற இருமையும் முன்னின்று ‘முல்லை’க்கான இருத்தல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.
இனவரைவியல் ‘Ethnography’  விளக்கம்

இனவரைவியல் மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்பாட்டு நிலைகளை விளக்கமாக அமைக்கும் ஒரு வகை எழுத்தாக்கம். இது சமுதாயப்பண்பாட்டு மானிடவியலுக்கு ஊன்று கோலாகச் சுழல்வது. இப்பதம் ‘Ethnography’  என்னும் ஆங்கிலச்சொல். ‘ethnos’ ‘graphin’ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race)  இனக்குழு (ethnic group)> மக்கள் (People) என்று பொருள். ‘graphinenin’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’  என்பது பொருள்” ஆகையால் தான் இனவரைவியல் தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி வரைவாக்கம் செய்வதாகும்.

Continue Reading →

பத்தி 2 இணைய வெளியில் படித்தது

ஊடகங்களுக்கு மனசாட்சி உண்டா? இருக்க வேண்டுமா? – கீற்று இணையக் கட்டுரையை முன் வைத்து  – சத்யானந்தன்

இந்தக் கேள்வி முதலில் எழுப்பப் படலாமா என்ற சர்ச்சைக்கே இடமுண்டு. ஊடக சுதந்திரம் என்ன விலை கொடுத்தாலும் நிலை நாட்டப்பட்டுப் பேணப் பட வேண்டியதே. ஊடகங்களே ஒரு சமுதாயத்தின் ஒற்றைச் சாளரம் என்றே சொல்லி விடலாம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஊடகத்தில் வெளிவருபவையின் உள்நோக்கம், அரசியல், வணிக நோக்கம் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டால் சமூகத்தின் முன் எந்த விஷயமுமே வெளிச்சமுமாகாமல் விவாதிக்கவும் படாமல் பெரிய அநீதிகள், சுரண்டல்கள், மீறல்கள் எதுவுமே வெளிவராமற் போகும். தம் உரிமைகள் என்ன என்று மக்களுக்கு நினைவூட்டும் அதைப் பறிக்கும் செயல்களை வெளிச்சமிடும் அரும்பணிக்கு இடமே இன்றிப் போகும். சமுதாய மாற்றத்துக்கு நம்பிக்கை தரும் ஒரே பாதை அடைபட்டுப் போகும்.

அதே சமயம் இந்திய அரசின் ஊடகச் சட்டங்களை வாசித்தவர்கள் அறிவார்கள் சாராம்சமாக சட்டங்கள் சொல்வது சுயகட்டுப்பாடு ஒன்றையே. ஒழுங்குமுறையாளர் கேட்பது ஒரு விளக்கமே. கடும் சட்டங்கள் 1977க்கு முன் இருந்தன. இது ஒரு பெரிய சரடு. பின்னர் காண்போம்.

எனவே ஊடகங்கள் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ சுயகட்டுப்பாடு ஒன்றைக் கண்டிப்பாகக் கொள்ளத் தான் வேண்டும். ஊடகங்களில் வரும் பரபரப்பான பலவற்றை நான் வாசிப்பதே இல்லை. குற்றங்களுக்கும் வம்புகளுக்கும் வதந்திகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம் பல சமயங்களில் தரக்குறைவானவை. எனவே இளையராஜாவுடன் ஊடக நிருபர் ஒருவருக்கு என்ன மோதல் என்றெல்லாம் நான் ஆழ்ந்து போகவே இல்லை. தற்செயலாக இன்று (23.12.2015) தமிழ் ஹிந்து நாளிதழில் ‘வெள்ளச் சேதம் பற்றிய விவாதம் திசை மாற பீப் பாடல் குறித்த சர்ச்சையே காரணமா என்று ஒரு கணிப்புக்கான கேள்வியைப் பார்த்தேன். அது என்னை உலுக்கிப் போட்டது.

Continue Reading →

தேடகம்: விடுமுறை ஒன்று கூடல்!

தேடகம் அமைப்பினரின் இவ்வருடத்துக்கான விடுமுறை ஒன்று கூடல் 27.12.2015  அன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு 1173 Brimley, Scarborough, ON M1P 3G5 இல் அமைந்துள்ள…

Continue Reading →

நாவல்: அமெரிக்கா! (8)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிக்கம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியததானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் இன்றைய தலைமுறையினரும் , அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  – வ.ந.கி. –


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  ‘ஃபாதர்’ ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: “ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க.” ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்–2

. ஃபைதோகிரஸ்! ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை செம்பக்கத்தின் வர்க்கத்திற்குச் சமனாகும்- என்ற தேற்றத்தை உலகிற்குச் சொன்னவர்.

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -அப்போ அறிவெனப்படுவது யாது? அதாவது உறுதியான அறிவெனப்படுவது என்ன என்ற கேள்வி அன்றே எழுந்தது.

வரைவிலக்கணம் சொல்வது பற்றிப் பலர் பேசிக் கொண்டனர் பின்னாளில்.-வரைவிலணக்கம்- இதற்கென்ன வரைவிலக்கணம் என்று கேட்டார்கள்.
வரைவிலக்கணம் கூறுவது என்பது……. ஒன்றைச் சுட்டி, இதுவே இதுவென்றும்..இதுவல்லாவிடில் அது என்றும் அதுவல்லாவிடில் இது என்றும் சொல்லப்பட்டது.

-ஒன்றின் பொதுவான இயல்புகளையும் சிறப்பான இயல்புகளையும் சொல்லுதல்- என்பது வரைவிலக்கணமாகும். என்றும் சொல்லப்பட்டது.

மெய்யியல் என்றால் என்ன என்பதற்கு இன்றுவரை வரைவிலக்கணம் இல்லை. தத்துவம் என்றால் சொல்பவனுக்கும் விளங்காமளல், கேட்பவனுக்கும் விளங்காமல் இருக்கும் ஒரு உரைநடை. என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது. அப்போ என்ன செய்யலாம் ? இது என்ன ?

Continue Reading →