பதிவுகளில் அன்று: இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த ‘சே’ குவேரா) கவிதைகள்!

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –

இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா)எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை என இவரது இலக்கியபங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. சித்தார்த்த ‘சே’ குவேரா, சிசேகு, ரமணிதரன் போன்ற பெயர்களில் இவர் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதிய கவிதைகள் இவை. இவரது கவிதைகளின் மொழி சொற்களைக் கையாள்வதில் தனித்துவம் வாய்ந்தது. இவரது இன்னுமொரு பெயர் எனக்கு மிகவும் பிடித்த புனைபெயர்களிலொன்று. ‘திண்ணைதூங்கி’ என்னும் புனைபெயரில் இணையத்தில், இணைய இதழ்களில் இவர் விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கின்றார்.  சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகள் பலவற்றை இவர் திண்ணைதூங்கி என்னும் பெயரில் பதிவு செய்திருக்கின்றார். பதிவுகள் இணைய இதழின் விவாதங்களிலும் (ஆரம்ப காலகட்டத்தில்) இவர் கலந்துகொண்டிருக்கின்றார். விவாதத்தளத்தை நிர்வகித்தவர்களில்  இவருமொருவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். பதிவுகள் மூலம் எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில் இவருமொருவர். – பதிவுகள் – –


1.

பதிவுகள் தை 2001   இதழ்-13
சித்தார்த்த ‘சே’ குவேராவின் (அ)கவிதைகள்

பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன்
கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.

கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத்
தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை
பின்னும்
இன்னும்
விற்றுப் பிழைக்கும் கலைஞன்.

தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து,
அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய்
செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.

மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான்,
புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் – இடையன்.

வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும்
இவனுக்கு எண்ணமோ, இன்னும்
கடையச் சடைத்துத் தொலைந்த
கட்டி வெண்ணெயில்.

காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப்
புசிக்கும்
வெண்ணெய்.

2.
விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு,
சொற்கள் மட்டுமே தேறும்.
கோர்த்த சொற்களைக் குலைத்து,
குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும்
சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால்,
சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.

விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும்
வீணுக்கு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.

Continue Reading →

(முகநூல்) மீவுமனிதத்துவம்/டிரான்ஸ் ஹுமனிசம்

மீவுமனிதத்துவம்/டிரான்ஸ் ஹுமனிசம் முஜீப் ரகுமான் (– முகநூல் பல ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் . முகநூலில்  உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர். இவரது வலைப்பதிவு: ‘நட்சத்ரவாசியின் தளம்’ (https://natchathravasi.wordpress.com/). இவரைப்போன்ற பலரின் பயனுள்ள பதிவுகள் இங்கு மீள்பதிவு செய்யப்படும். – பதிவுகள் –


“உடலின் பயனற்ற பாகங்களை” அகற்றுவது

உயிரணுக்களைக் கையாள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களால் வழங்கப்பட்ட மனிதர்களை வளர்ப்பதற்கும் வடிவமைப்பதற்கும் சாத்தியக்கூறுகள் ஆபத்தானவை என்று தோன்றலாம், ஆனால் இப்புலத்தின் ஆரம்ப நாட்களில் சில விஞ்ஞானிகள் முன்னறிவித்ததை ஒப்பிடும்போது அவை பழமைவாதமானவை மட்டுமே.

சொற்போர்களுக்கு இடையிலான உயிரியலாளர்கள் மற்றும் உயிர் வேதியியலாளர்களின் குறிப்பிடத்தக்க தலைமுறையில் ஜான் டெஸ்மண்ட் பெர்னல் என்பவரும் ஒருவர் – இதில் ஜேபிஎஸ் ஹால்டேன், ஜோசப் நீதம், ஜூலியன் ஹக்ஸ்லி மற்றும் கான்ராட் ஹால் வாடிங்டன் ஆகியோர் அடங்குவர் – அவர் வளர்ச்சி மற்றும் மூலக்கூறு உயிரியலின் அடித்தளங்களை அமைத்தார், அதே நேரத்தில் அவற்றை வளர்ச்சிபெற்ற கருத்தாகமாக செய்தார் அறிவியலின் சமூகப் பாத்திரங்களின் உறுதியான பார்வைக்கு அவை முன்னேறுகிறது. பெர்னலின் நீட்டிக்கப்பட்ட கட்டுரை தி வேர்ல்ட், தி ஃபிளெஷ் அண்ட் தி டெவில் (1929) என்பது இன்று நாம் உயிரி தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் ஒழுக்கத்தால் வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஹால்டேனின் ஊகங்களுக்கு விடையிறுப்பாகும், அவை கேம்பிரிட்ஜில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்வேஸ் ஆய்வகத்தில் திசு வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டன.

டேடலஸ் , அல்லது சயின்ஸ் அண்ட் தி ஃபியூச்சர் (1924) இல் இனப்பெருக்கம் பற்றிய ஹால்டேனின் கணிப்புகள், பல விஞ்ஞானிகள் இன்று ஆபத்தை விளைவிப்பதைத் தாண்டியதைத் தாண்டி ஊகிக்கவும், விரிவுபடுத்தவும் ஒரு தயார்நிலையைக் காட்டினால், அது உயிரி தொழில்நுட்பம் எங்கு செல்லக்கூடும் என்பது பற்றிய பெர்னலின் எண்ணங்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. இறுதியில், “உடலின் பயனற்ற பாகங்களை” அகற்றி அவற்றை இயந்திர சாதனங்களுடன் மாற்றலாம்: செயற்கை கால்கள் மற்றும் உணர்ச்சி சாதனங்கள் மிகச் சிறந்த வேலையைச் செய்கின்றன. முடிவில், இந்த சைபோர்க் இருப்பு ஒரு வகையான “மூளையில் ஒரு மூளையாக” மாறும், இது ஒரு உடலுக்குப் பதிலாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களின் விநியோகிக்கப்பட்ட அமைப்பு வரை இணைக்கப்பட்டுள்ளது:

Continue Reading →

(முகநூல்) மிகாயீல் ஃபூக்கோ ((Michel Foucault ): அதிகாரம் மற்றும் போராட்டம்

மிகாயீல் ஃபூக்கோ முஜீப் ரகுமான் (– முகநூல் பல ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் . முகநூலில் முகநூலை உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் எனத் தன் முகநூலில் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர். இவரது வலைப்பதிவு: ‘நட்சத்ரவாசியின் தளம்’ (https://natchathravasi.wordpress.com/). இவரைப்போன்ற பலரின் பயனுள்ள பதிவுகள் இங்கு மீள்பதிவு செய்யப்படும். – பதிவுகள் –


மிகாயீல் ஃபூக்கோவின் ஆரம்பகால வாழ்க்கை இரண்டாம் உலகப் போரினால் தீர்க்கமாகக் குறிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலரிடம் அவர் ஏன் ஒரு தத்துவஞானியாக மாற முடிவு செய்தார் என்று கேட்டதற்கு , ஃபூக்கோ பதிலளித்தார்: “நான் பத்து அல்லது பதினொரு வயதில் எப்போது ஜெர்மானியரராக மாறுவோமா அல்லது பிரெஞ்சுக்காரராக இருப்போமா என்று எங்களுக்குத் தெரியாது. குண்டுவெடிப்பில் நாங்கள் இறந்துவிடுவோமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது ”. அவரது பதினாறு வயதிற்குள், ஃபூக்கோ “ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே அறிந்திருந்தார்”: அந்த பள்ளி வாழ்க்கை அவருக்கு “வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட சூழலை” வழங்கும். இதற்கு, ஃபூக்கோ அறிவு “தனிப்பட்ட இருப்பைப் பாதுகாப்பதற்கும் வெளிப்புற உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் செயல்படுகிறது” என்று கூறினார். அறிவு என்பது “புரிந்துகொள்வதன் மூலம் உயிர்வாழும் ஒரு வழிமுறையாகும்”.

1946 ஆம் ஆண்டில் ஃபூக்கோ எக்கோல் நார்மல் சூப்பரியூரில் அனுமதி பெற்றார். 1952 ஆம் ஆண்டில் மனநோயியல் பட்டம் பெற்றார், அவர் பாரிஸில் உள்ள ஹெப்பிடல் சைன்ட்-அன்னேயில் மனநல நோயாளிகளுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், அங்கு அவர் தொடர்ந்து உளவியல் படித்து வந்தார். இந்த நேரத்தில் அவர் லுட்விக் பின்ஸ்வாங்கரின் டிராம் அண்ட் எக்ஸிஸ்டென்ஸை மொழிபெயர்க்கவும் உதவினார் – இதற்காக அவர் ஒரு நீண்ட அறிமுகத்தை எழுதினார். 1953 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில், ஃபூக்கோ லில்லி பல்கலைக்கழகத்தில் உளவியலைக் கற்பித்தார், மேலும் அவரது முதல் புத்தகத்தை வெளியிட்டார்: மன நோய் பற்றிய ஒரு புத்தகம் மற்றும் 1850 முதல் 1950 வரையிலான உளவியலின் வரலாற்றைக் கண்டுபிடிக்கும் ஒரு சிறு படைப்பு. மைசன் டி பிரான்சின் இயக்குநர் பதவியை ஆக்கிரமித்து 1950 களின் நடுப்பகுதியில் உப்சாலா, மேற்கில் பைத்தியக்காரத்தனமான வரலாற்றை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார், இது சோர்போனில் அவரது முதன்மை ஆய்வறிக்கையாக மாறும்.

வார்சா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் கழித்த பின்னர், பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சு நாகரிக மையத்தை மீண்டும் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஃபூக்கோ, ஹாம்பர்க்கில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் இயக்குநராக சுருக்கமாக பணியாற்றினார். அவர் 1960 இல் கிளெர்மான்ட்-ஃபெரண்ட் பல்கலைக்கழகத்தில் உளவியலில் விரிவுரையாளராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார், மேலும் 1961 இல் சோர்போனில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஃபோலி எட் டெரைசனும் 1961 இல் வெளியிடப்பட்டது, மேலும் நைசன்ஸ் டி லா கிளினிக் மற்றும் ரேமண்ட் ரூசலின் வெளியீடு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது 1966 வாக்கில் , லெஸ் மோட்ஸ் மற்றும் லெஸ் தேர்வுகளின் அசாதாரண வெற்றியுடன், ஃபூக்கோ பிரான்சில் ஒரு முன்னணி புத்திஜீவியாகிவிட்டார். அதே ஆண்டு செப்டம்பரில், துனிஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்காக பிரான்சிலிருந்து புறப்பட்ட அவர், பின்னர் 1968 இல் திரும்பி வின்சென்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியர் பதவியைப் பெற்றார். 1969 ஆம் ஆண்டில், L’archéologie du savoir ஆக தோன்றினார்.

Continue Reading →

சுர்ஜித்! இனி என்றும் நீ இருப்பாய் எம் இதயங்களில் நிலைத்து

சுர்ஜித்

– மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. –


மகத்தான பூமியே!! இம்
மண்ணுக்குள் அகப்பட்ட இம்
மழலையை உன்னால்
மீட்டிட முடியவில்லையே!
ஏங்கி, ஏங்கி அப்பிஞ்சு
எவ்வளவு துடித்திருக்கும்?
எப்படியும் தன்னை மீட்பார்களென்று
எண்ணி எதிர்பார்த்திருக்கும்?
உணவின்றி, உறக்கமின்றி
உடல் நொந்து வருந்தியிருக்கும்.
ஏன்? ஏன்? ஏன்?
எதற்காக? எதற்காக? எதற்காக?
இம்மானுடப் பிறப்பு இம்
மண்ணில் எதற்காக?
மலர்ந்து பின் மடியுமிம்
மானுடப் பிறப்பு இம்,
மண்ணில் எதற்காக?
இன்பமொன்றே நியதியாக
இருக்கும் வண்ணம்
இம்மண்ணில் வாழ்வு இல்லையே?
துயர் சூழ்ந்த நிகழ்வுகள்:
துடிக்க வைக்கும் போர்கள்,
இவை போதாதென்று
இவ்விதமான அழிவுகள்
இன்னுமேன் எதற்காக?
தவழ்ந்து நிமிர்ந்த குழந்தை
தடக்கித் துளையினுள் வீழ்ந்து
துடித்து மடிந்ததும் எதற்காக?

Continue Reading →

அஞ்சலி: ஆழ்துளை அவலம்

– மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல்…

Continue Reading →

எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் கவிஞர் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல்!

கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்

மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தின் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.

மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?

ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தோரு ஆண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2016 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முதலில் 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் என்னதிது ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா? எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.

சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன் அப்போது. ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

Continue Reading →

வாசகர் கடிதங்கள் சில..

வாசகர் கடிதங்கள்

1. Puthiyavan Siva <puthiyavan1986@gmail.com>

Oct. 28 at 1:14 p.m.

வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.

என்றும் அறிவன்புடன்
புதியவன் 


2. Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Oct. 29 at 6:02 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன்.  பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை!
ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து – அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும்.  அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள்  பார்த்திருக்கலாம். நன்றி.

அன்புடன்
முருகபூபதி


3. Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>

Oct. 29 at 5:17 p.m.

ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.

– தீவகம் வே.இராசலிங்கம்


4.

1. Sunil Joghee <suniljogTo:ngiri2704@rogers.com
Oct. 23 at 1:29 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி….

[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். ‘பதிவுகள்’ அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது.  எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு  முன்னர் இந்தியப் பழங்குடி  மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள்  நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது.  – ஆசிரியர், பதிவுகள்.]

Continue Reading →

வாணர் வன்னியரா அல்லது குறும்பரா?

வரலாறுகீழ்கண்ட கல்வெட்டு குறும்பர் என்கிறது.

1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கியாண்டு 1.
2 ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
3 லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்பு(லி)
4 நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே)
5 யூர் நாடி சதுர்வேதிமங்கலத்து (வா)ரிக்கு..
6 த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு து(ளை)..
7 ……யால்…………………..

தெலுங்கில் கொடுக்கு மகனைக் குறிக்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி கொடுக்கு என்றால் தமிழில் மகன் என்று பொருள் கூறுகிறது. இக்கல்வெட்டில் கொடுக்கு என்றச் சொல் கொடுக்கன் என மகனைக் குறிக்க வருவது நோக்கத்தக்கது.

வாண அரசர்கள் பல்லவரோடு மணவினை செய்துகொண்டு பிள்ளைகளுக்கு பட்டான் பெயரை சூடிக்கொண்டதால் வயிரமேகன் பெயர் வாணர்களுக்கும் வழங்கலாயிற்று. இந்த வயிர மேகன் கம்பவர்ம காலத்தவன்.

விளக்கம்: வாண அரசரும், குணம் நிரம்பியவரும் (குணமந்தை > குணமந்தன்), குறும்பர் தலைவருமான (கோலாலன்) வயிரமேகனார் மகனும் ஆன சிற்றண்புலி நாட்டின் அதிபன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே) யூரை நாடிச் சென்று அங்கத்து சதுர்வேதிமங்கல குளத்திற்கு (வாரிக்கு) .. இருபது கழஞ்சு பொன் கொடையளித்தான் என்பது செய்தி. வயிரமேகன் இறந்தபின் இவன் இக்கொடை நல்கியிருக்க வேண்டும்.

Continue Reading →

திருப்பூரில் உலகத் தமிழர்களின் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாய் வெளியீடு!

- சுப்ரபாரதிமணியன் -இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா  மற்றும உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding”.இதில்  திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது .இதன் வெளியீடு அறிமுகம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில்  ( NCBH. NBT )    திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  முகப்பில் நடைபெற்றது. சென்னையைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மா ப கணேசன் வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சிக்கு பி ஆர் நடராஜன் (    ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) தலைமை வகித்தார். சண்முகம் (( திருப்பூர் மாவட்ட  தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை அளித்தார்.

பத்திரிக்கையாளர் மா ப கணேசன் பேசுகையில் “ தமிழில் 1960கள் வரை மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியம் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக வெளிவந்தன. அந்த வகையில் பல படைப்பாளுமைகள் பணிபுரிந்தனர் . அதற்குப்பின் தொயவு உள்ளது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளது ஆரோக்கியமானது. மொழிபெயர்ப்புத்துறை இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில் நுட்ப உலகில் மலர்ந்துள்ளதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”  என்றார்

Continue Reading →

ஆய்வு: காதல் வரலாறு

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காதல் ஒரு குழப்பமான வாழ்க்கை. காதல் பற்றிய குழப்பங்களால் மனநோயாளிகளாக வாழ்பவர்களை எண்ணி முடிக்க முடியாது. காதல் உணர்விற்கு இத்தகைய எதிர்மறை தனிச்சிறப்பும் இருக்கின்றது. இத்தகைய தனிச்சிறப்பை சுட்டிக்காட்டுவதால் எங்களைக் கோபிக்காதீர்கள் காதல் விரும்பிகளே!

சமூகவிஞ்ஞானக் களங்களில் காதலித்து இணைந்தவர்கள் ஏராளம். சமூக மேன்மைக்காக உழைப்பதே இவர்களின் காதலுக்கு இதயத்துடிப்பு. இத்தகைய இதயங்களைப் பற்றிக்கொண்டே காதலின் வரலாறை ஆராயப்போகின்றோம்!
காதலாகி கசிந்து உருகிய பின்பு திருமணம் செய்யாமல் விலகியவர்களும் ஏராளம். காதலித்துத் திருமணம் செய்த பின்பு விவாகரத்துக்கு விரைபவர்களும் ஏராளம்.

திருமணம் செய்த பின்பு காதலர்களாக மலர்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்தால் அறிமுகமான பின்பு விவாகரத்துக்கு வழியின்றி சகிப்புத்தனமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பல்வேறு நபர்களிடம் காதல் உறவைக் தொடர்ந்தபின்பு அறிமுகம் இல்லாதவரை திருமணம் செய்பவர்களும் உண்டு. திருமண வாழ்வில் ஈடுபட்டபின்பு பல்வேறு காதலர்களுக்காக ஏங்குபவர்களும் உண்டு. காதலித்தால் கண்டிப்பாக திருமணம் செய்தாக வேண்டுமோ என்பர் நம்மில் சிலர். திருமணம் செய்தவர்கள் மனதார காதல் செய்ய வேண்டுமோ என்பர் இன்னும் சிலர்.

திருமணம் செய்யாவிட்டால் எதற்கு காதலாம் என்று வாதிடுபவர்கள் ஒருபுறம். காதலிக்காவிட்டால் திருமண வாழ்வில் என்ன பலனுண்டு என்று சலித்துக்கொள்பவர்கள் மறுபுறம்.

காதலர்களின் கலப்புத் திருமணம் சமூகவிடுதலையைச் சாதிக்கும் என்கிறார்கள் சமூகப் போராளிகள். காதல் திருமணம் செய்தவர்களை ஆணவப்படுகொலை செய்கிறார்கள் சாதி வெறியர்கள். இத்தனை பெரிய பதட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையில் நாம் பேசியாக வேண்டும் காதலர்களே!

காதல் வேறு திருமணம் வேறு என்பதை எப்படி புரிய வைப்பது என முயல்கிறோம். சம்பந்தம் இல்லாத இவற்றை சம்பந்தம் செய்வதற்கு என்ன அவசியம் என்பதை உணர்த்த முயல்கிறோம்.

Continue Reading →