அனாரின் தொகுப்பில் கிழக்கிலங்கை நாட்டார் (காதல்) பாடல்கள்!

பொடுபொடுத்த மழைத்தூத்தல் – எனும் எனது புதிய தொகுப்பு (கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்), க்ரியா பதிப்பகத்தினரால் எதிர்வரும் 2013 ஜனவரி 11ஆம் திகதி, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவருகின்றது. புதியதொரு அமைப்பில் இந்நூலைத் தொகுத்திருக்கிறேன். மிகுந்த நிறைவும் மகிழ்ச்சியும் தரும் வகையில் க்ரியா பதிப்பகத்தினர் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இத்தொகுப்பை  வடிவமைத்திருக்கிறார்கள்.