அறிஞர் அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்!

அறிஞர் அ.ந.கந்தசாமிஇன்று வாழ்க்கையில் வெற்றியடைவது பற்றிய நூல்கள் பல வெளிவருகின்றன. இத்துறையில் ஆங்கிலத்திலுள்ள பல அரிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன. இத்துறையில் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்கள் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே அறிஞர் அ.ந.கந்தசாமி ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் அரியதொரு நூலினை எழுதியுள்ளாரென்பதும், அது தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 1966இல் வெளிவந்துள்ளதென்பதும் வியப்புக்குரியவை. மேற்படி நூலினை ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் பெயரில் வெளியிட்ட பாரி பதிப்பகம் பின்னர் அகிலனின் நூலொன்றிற்கும் மேற்படி பெயரினை வைத்து வெளியிட்டது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது; கண்டிக்கத் தக்கது.

என்னைப் பொறுத்தவரையில் தமிழில் சுயமாக இத்துறையில் எழுதப்பட்டுள்ள நூல்களில் அ.ந.க.வின் ‘வெற்றியின் இரகசியங்கள்’ நூலும் முக்கியமானதோர் இடத்தைப் பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய தமிழ் இலக்கிய உலகுக்கு அ.ந.க.வின் இன்னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த நூலினை, வாழ்க்கையின் வெற்றிக்குப் பயனுள்ள இந்த நூலினைப் ‘பதிவுகள்’ இதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற வகையில் நீங்களும் இந்நூலினைப் படித்து யாம் பெற்ற இன்பத்தைப் பெறுவீராக! மேற்படி நூலினை நூலகம் இணையத் தளத்திலும் நீங்கள் வாசித்துப் பயன்பெறலாம்… உள்ளே