ஆய்வு: இணையமும் தமிழும்

ஆய்வு!கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்துவிட்டது.

காலந்தோறும் மரபு வழிச் சாதனங்களால் பேச்சு வழக்கில் செய்தி பரிமாற்றம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு இசைச் சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுபட்டு புதிய தொழில் நுட்பங்களாகிய தகவல் தொடா்பு வளா்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல் தொடார் புச் சாதனங்கள், மின் வழிச் சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், அச்சு வழிச் சாதனங்கள், மின் இதழ்கள் போன்றவை மேம்படுத்தி வருகின்றன.  புதுப்புதுக் கோணங்களில் தகவல் தொடா்பினை மின்னணுச் சாதனங்களான ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்களைக் குறிப்பிடுகின்றனா்.  களப்பணியைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கருவிகள் தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இணையம்
இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கண்டுப்பிடிப்பு என்று கூறலாம். மிக பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களை பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், என கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொரு வரும் பல்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளனா்கள். இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளை பற்றி தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனா்.

உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுது தேவையான ஒன்றை பற்றி, தெரிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்க கருவிகளான அலைபேசி மற்றும்  திறன்பேசி, நுண்ணரிபேசி, வில்லை, மாத்திரை, கணினிபோன்றவற்றில் இணைய வசதிபெற்று தகவல்களை தெறிந்து கொள்ளலாம்.

இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாறலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறசெய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளர்ந்து கொண்டே வருகின்றது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர்  ஆகப் பெறின்” ( குறள் – 666)

என்ற குறளில் எண்ணியவர்  எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவா் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவா் என்று திருவள்ளுவா் குறிப்பிடுவது போல் நீங்கள் எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் முதல் இணையதளம்
தமிழை இணையதளத்தில் கொண்டு சோ்க்கின்ற முயற்சியில் முதலிடத்தில் இருப்பவா்கள் சிங்கப்பூர்  மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆவார் தமிழ் இணையதளத்தின் தந்தை என்று போற்றப்படுபவா் சிங்கப்பூர் பேராசிரியா்  நா.கோவிந்தசாமி ஆவார். இவா் ஒரு முறை சீனாவிற்குச் சென்ற பொழுது அவரது நண்பரிடம் தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு வியந்த அவரது நண்பா் “எங்களின் சீன மொழியைப் போலப் பெருமை வாய்ந்த மொழி உங்களின் தமிழ் மொழி. ஆகவே எங்கள் மொழியைப் போலவே உங்கள் மொழியும் இணையத்தில் ஏற்றலாம்” என்று கூறினார். அதன் விளைவாகத் தமிழை இணையத்தில் ஏற்றும் முயற்சியில் நா.கோவிந்தசாமி ஈடுபட்டார்

“1995 அக்டோபாரில்  சிங்கப்பு+ர் அதிபா்  திரு.ஓங் டாங்சாங் தொடங்கி வைத்த Journey Words home and nation anthology of singapore 1984 – 1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையம் பதிவேற்றம் செய்யப்பட்டது.”  இதைச்சாதித்த Internet Research and Development Unit குழுவில் கோவிந்தசாமியும் அவரோடு இணைந்து பணியாற்றிய டாக்டர்  டான்டின் வி.லியோஸ் மற்றும் கோக்யாங் ஆகிய இரு வல்லுநர்களும் முதல் தமிழ்ப் பக்கத்தை வலையேற்றினார். இவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

தமிழில் இணைய வளர்ச்சி
தமிழ் வளர்ச்சிக்குக் கணினி இணையத் தொழில்நுட்பம் பரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகு தான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்து நாடுகளுக்கிடையே உடனுக்குடன் பரவின. எழுத்துருச் சிக்கலும், தட்டச்சுப் பலகைச்சிக்கலும் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும்  உருவாக்கப்பட்டன. தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்த சிக்கல் ஒரளவு தீர்ந்த நிலையிலும் எழுத்துருச் சிக்கல் இருந்து வந்தது. பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குறி (Unicode) நுட்பத்தில் தமிழ்த் தட்டச்சக்கு வழி பிறந்தது. அச்சு இதழ்கள்போல் தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப் படைப்புகளை உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும் பங்காற்றுகின்றன. செய்திகளையும் வலைப்பபூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்ற செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதர்கள் பலர் எழுத முன் வருகின்றனர்.

வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமின்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பலவும் பல்வேறு வடிவங்களில் தமிழ்வழியில் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் தமிழ்ப்படைப்புகளுக்கும் அச்சுவழி கிடைக்கும் தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே படிக்க கிடைக்கும். தற்பொழுது அந்நிலை மாறி புதுப்புது எழுத்தாளர்களின் படைப்பக்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றது. இது வாசகர்  வட்டத்தை பெரியதாக விரிவுபடுத்துகின்றது.

இணையத்தில் அச்சு வடிவ அகரமுதலிகள் போல மின் அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி க்ரியா அகராதி கதிரைவேள்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சர்ந்த பதிவுகள் பல பதிவேற்றிப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய பதிவுகள் பல உள்ளன. தற்பொழுது உள்ள பதிவுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் குறைவாகவே உள்ளனா;. தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மற்றும் உரையாடல் செய்ய இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல் மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு  வலைப்பு, சமுக வலைத்தளம் இணையக்குழு, விசைப்பலகை, திறன்பேசி, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாட்டு நோக்கில் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன.

தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்க பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. “உத்தமம்” என்ற அமைப்ப உலகெங்கும் பரவி வாழும் தொழில் நுட்ப அறிஞர்களால் தமிழ்க்கணினி இணையத் தொழில் நுட்பத்திற்கென்று உருவாக்கப் பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.

“மதுரைத்திட்டம்” என்னும் தமிழ் தளம் தமிழின் அhpய நூல்கள் 353 எண்ணிக்கையிலான தம் வலைப்பு+ பக்கத்தில் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல தமிழ் இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன. இத்திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழர்ன் மரபுச் செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.

உலகெங்கும் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப் பட்டுள்ளன. அவை தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரடடித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ்ச் சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக் காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்துமாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய  உயிர் பெற்றுள்ளது. தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக வளரும்.

தமிழ் இணைய மாநாடுகள்
உலகில் எந்த ஓர் அமைப்பு அல்லது நிறுவனமாக இருந்தாலும் அது தோன்றுவதற்கு முன்பு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மாநாடுகள் கருத்தரங்குகள் மிக முக்கியப் பங்கினை வகிக்கின்றன. தமிழ் இணையதளங்கள் அதிகமாக தோன்றிய காலக்கட்டத்தில் அதன் வளர்ச்சிப்பணியை எட்டுவதற்கும் பல கருத்தரங்குகளும் மாநாடுகளும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்பட்டன. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 14 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. அம் மாநாட்டில் முழுக்க முழுக்க தமிழ் மென்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் கருத்துரைகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்தி  தீர்வு கான்பது மாநாடுகளின் நோக்கம் மற்றும் உறுதிமொழியே இருந்தது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பயன்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவி இணையம் என்று கூறலாம். இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்து வெளிநாடுகளுக்கு உடனுக்குடன் பரப்ப முடிந்தது.

தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்க பல மாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தி தமிழ் இணைய மேம்பாட்டிற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழ் செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன கட்டற்ற செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பு+க்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத முன் வந்துள்ளனர்.

பார்வை நூல்கள்
இணையமும் இனிய தமிழும் – துரையரசன்
தமிழ்க்கணினி – இணையப் பயன்பாடுகள் – துரை. மணிகண்டன்

kprakashkpd@gmail.com