ஆய்வு: காரை.இறையடியானின் ‘தமிழமுதம்’

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ள அறிஞர்கள் பலராவர். அவர்களுள் காரை.இறையடியான் தனித்திறன் பெற்றவராக விளங்கியவர். எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பணி புரிவதையே முழு நோக்கமாகக் கொண்டு அயராது பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டவர். காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை. இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். 17.11.1935-ல் புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த காரை.இறையடியான் பத்து நூல்களைச் செதுக்கியுள்ள இந்தச் செந்தமிழ்ச் சிற்பியை அவரின் படைப்புகள் வாயிலாக அடையாளம் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

“தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென
ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்’’1

என்று அறிவுநம்பியும்,

“இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாவலர் இறையடியானுக்குத்  தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடமுண்டு’’ 2

என்று திருமுருகனும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறத் தகுதி உடையவராய் மதிப்புரைக்கும் இறையடியானின் வரலாறு அறிய வேண்டியுள்ளது.
தமிழமுதமும் வாழ்வியலும் ‘தர்காப்புலவர்;;;’, ‘தனித்தமிழ்த்தென்றல்’, ‘பாவலர்மணி’, ‘கவிமாமணி’, எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவர்தம் படைப்புகளில் ‘தமிழமுதம்’ பாவலரின் உயிர்வேட்கையைப் புலப்படுத்தும் விதமாக ஒப்;பற்ற கவிதையாக விளங்குகிறது. மேலும், தமிழமுதத்தில் உவமை, உருவகம், சொல்லாட்சி, பொருள்நலம், நடைநலம், கற்பனை, எதுகை, மோனை போன்றவைகள் தமிழமுதத்தில் இடம் பெற்றுள்ளதை காணமுடிகிறது. இறைமை, தமிழ்நாடு, இயற்கை, காதல், மழலைஅமுதம், திருநாள், சான்றோர், தமிழ்த்தொண்டர்கள், சொல்லாட்சி இன்பம், வெண்பாவிருந்து, மருத்துவம், பல்சுவை என்னும் பதின்மூன்று பகுதிகளாக தமிழமுதம் அமைந்துள்ளது.

மொழிப்பற்று
மொழி என்பது ஒரு கருவி. தாய்மொழி ஒருவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நம்மிடையே உயிர்ப்புடையதாகவும் இருக்கும். தாய்மொழியைப் பேணிக்காத்துக்;கொள்ள வேண்டும். ஒருவனுடைய மொழியையும், இனத்தையும் அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது. தமிழ் மொழியைப்பற்;றி பாரதி சொல்வது போலவும் பாவேந்தர் சொல்வது போலவும் தமிழில் புதிய புதிய ங}ல்களை ஆக்கித்தரல் வேண்டும். இதனைப் பாரதியார்,

“ பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” 3

என்பார். பாவேந்தர் பாரதிதாசனும்,

“ தமிழர்க்குத் தமிழ் மொழியில் சுவடிச்சாலை
சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும்
தமிழிலாப் பிற மொழி நூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்” 4

என்று வலியுறுத்துகிறார்.

காரை.இறையடியான் இறைவனிடம் முறையிடும்போது பொன்னும் பொருளும் வேண்டாது ‘இறைவா இன்தமிழ்தா’ என்று வேண்டுகிறார். மொழி புதிய புதிய துறைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய வேண்டும். அப்பொழுதுதான் மொழி வளமையடையும். அதை உணர்ந்த பாவலர் காரை.இறையடியான் மொழியிடத்தும் அவற்றோடு தோன்றிய இலக்கியங்களோடும் பற்றுக் கொண்டவர் என்பதை அவரது பாடல் வழி அறியமுடிகிறது.

“ மூக்கிழுக்கும் நறுங்காற்று முறையிலும்
மூச்சை வெளியாக்கும் போதும்
ஊக்கமுடன் நறுமணம் உணர்தலினும்
உயிர்த்தமிழை நுகரும் பேற்றை
நீக்கமிலாப் பெருவாழ்வே நிலையான
நின்னருள்தா இற்றை ஞான்றே” 5

மேலும்,

“ முறைமன்றில் தமிழ்த்தாய்க்கு முடிசு10ட்ட வேண்டும்” 6

என்றும் தமிழ் மொழியின்மீது உள்ள ஆக்கப்பணிகளைக் குறிப்பிடுகிறார்.

நாட்டுப்பற்று
இந்தியக் கவிஞர்கள் பாக்கிசுதானியரையும், சீனரையும் கவிதை வரிகளால் சாடினார். காரணம் இந்தி நாட்டின் ஆட்சிபரப்பைக் கைப்பற்றத் துணிந்தபோது இவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். பாவலர் காரை.இறையடியான் பாக்கிசுதானியரை நோக்கி திருக்குர்ஆன் போற்றும் அன்பு நெறியையும், நபிகள் நாயகம் பொன்மொழியினையும் போற்றாமல் அவர்களின் செயல்களைக் கண்டு வெகுண்டெழுகிறார்;. சீனம் இந்திய மண்ணில் காலையெடுத்து வைத்தபோதும்; பொங்கி எழுந்த கவிஞர் காரை.இறையடியான் ‘நம்ப வைத்து கழுத்தறுத்த’ அவர்களை

“ நண்பு மிதித்தனன் கொட்டு முரசம்- சீன
நரிகளை யோட்டிக் கொட்டு முரசம்” 7

என்று குறிப்பிடுகிறார்;;.

தேசப்பற்று
கவிஞர்கள் பெரும்பாலோர் தேசியம் பற்றி பேசவோ எழுதவோ அஞ்சுவார்கள். ஆனால் காரை.இறையடியான் தேசியம் பற்றி பேசியிருப்பது அவரது தனிச்சிறப்பை  புலப்படுத்துகிறது.

“ ஒரு மொழி ஒரு நிலம் ஒரு குலம்- இந்த
ஒருமையின் விளைவுதான் தேசியம்” 8;

என்றும்,

தேசியம் என்பதே இறைவனின் படைப்பு என்கிறார் பாவலர் காரை.இறையடியான்.

வாணிபச்சிந்தனை
அன்றாட வாழ்க்கையில் மக்களுக்குத் தேவையான பொருள்களைப் பதுக்கிக் கொள்ளையடிக்கும் கள்ளச்சந்தைக் காரர்களைப் பாவலர் விட்டுவைக்கவில்லை. சமுதாயத்தில் உள்ள சிக்கல்களைப் படைப்புகளில் கையாண்டிருப்பது இவரது சிறப்பம்சமாகும். கள்ளக் கடத்தலைத் தடுக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டும் என்று அரசு என்கிறார். மேலும், போலியான பொருள்களை விற்பனை செய்தல், செயற்கையான பற்றாக்குறையை உண்டாக்கிக் கொள்ளையடித்தல், ஒரு பொருளைக் காட்டி வேறு பொருளை விற்பனை செய்தல் இவையெல்லாம் நாட்டை நாசம் செய்வனவாம் என்று பின்வரும் பாடல் வழி விளக்குகிறார்.

“   உணவுப் பொருளினை உள்ளே பதுக்கியே
ஊழல் பெருக்காதே- உன்றன்
உள்ளம் தடுக்காதே”

அரசியல்சிந்தனை
அரசியல் வாதிகள் தங்களுடைய வாழ்க்கையை வளமாக்குவதை கடுமையாக சாடுகிறார். ஏழ்மையை போக்க ஓயாது உண்மையாக உழைக்க வேண்டும் அரசியல் வாதிகள் என்று வற்புறுத்துகிறார் கவிஞர் காரை.இறையடியான்.

“ ஏழைகளின் பேரைச்சொல்லி
ஏமாற்றி வாழும் கூட்டம்
ஆழமாய், மேடைப்பேசி
ஆக்கத்தைத் தாம் சுருட்டல்
ஊழாமோ? ஊழலாமோ? ” 9

கொடைச்சிந்தனை
கவிஞர் காரை.இறையடியான் ‘குருதிக்கொடை’ என்னும் தலைப்பில் குருதிப்பெருக்கினால் உயிர் பிரியும் நிலையில் உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற உறுதுணையாக இருக்கும். எனவே உடல் நலத்தோடு இருப்பவர்கள் குருதிக்கொடை அளிக்க முன்வர வேண்டும் என்கிறார்.

‘ ஈகைச் சிறப்போ இரத்தக் கொடையென்க’ என்று அவற்றின் சிறப்பை விதந்தோதுகிறார் கவிஞர் காரை.இறையடியான்.

உவமை
கவிஞர் காரை.இறையடியானின் தமிழமுதத்தில் சில உவமைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு ஆண் மகன் பெண்ணொருத்தி மீது காதல் கொண்ட பாங்கினை கூறும்போது,

“ தங்கச்சிலை போன்ற தோற்றத்தாள்
தாமரை முகம் போல ஏற்றத்தாள்” 10

என்று கூறியுள்ளார். அதாவது புலவன் ஏதோ ஒரு பொருளைக் கூற நினைத்து அதற்கு அணி செய்ய வேரொரு பொருளை உவமையாகக் கூறிச் செல்கிறார்.

கற்பனை
கவிஞர் காரை.இறையடியான் தனித்தமிழ்க் கொள்கையை கருத்தில் கொண்டு பல அரிய கற்பனைகளைக் காட்டியுள்ளார். பாவலர் அவர்கள் தமிழியத்தின் பெருமையைக் கற்பனை செய்து பாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்.

“ விரை மணத்தை வீசுகின்ற விளங்குமெழிற் சோலை
விரிபொருளாய் வியப்ப10ட்டும் வியன்றமிழோ சாலை” 11

சோலையில் இருந்து மணம் வீசுகின்ற தமிழ் மொழியே எங்கும் உனது புகழ் பரவிக் காணப்படுவதாய் கற்பனை செய்து தமிழின் சிறப்பை உணர்த்தியுள்ளார் கவிஞர்.

திருக்குறள்சிந்தனைகள்
காரை.இறையடியானின் தமிழமுதத்தில் பல இடங்களில் திருக்குறளின் பெருமையை பேசுகிறார். தமிழின் சிறப்பை கூற திருக்குறள் மட்டுமே போதும் என்று பேசுவதை,

“   ஞான்றும் பணிவோடு ஞாலம் புகழ்ந்திடும்
ஞானம் செறிந்தது செந்தமிழே
சான்று பகரெனில் சால்புக் குறளெனச்
சாற்றும் தலைமைத்தாம் செந்தமிழே” 12

என்றும்,

குறளின் கருத்துக்கள் மக்கள் மனதில் என்றும் நின்று வாழ வேண்டுமென,

“  கோன் முறைக்கு நம்மவரைக் கூட்டு-குறள்
கொள்கையெல்லாம் நின் செயலால் காட்டு” 13

என்று குறளின் பெருமை இறையடியானால் கூறப்படுகிறது.

முடிவுரை
காரை.இறையடியான் மொழி, தேசியம், நாடு, வாணிபம், அரசியல், குருதிக்கொடை ஆகியவை பற்றித் தம் கருத்துக்களைத் ஷதமிழமுதம்| நூல் வழி எடுத்தியம்பியுள்ளார். நாட்டைப் பாதுகாக்கவும், வாணிபம் மற்றும் அரசியல் அறத்திற்கும், தனிமனித மேன்மைக்கும் கருத்துக்களமாக காரை.இறையடியானின் தமிழமுதம் திகழ்கிறது. குறிப்பாக இலக்கண இலக்கியப் புலமை ஒன்றாகக் கலந்த மொழிஆளுமை காரை.இறையடியானிடம் காணமுடிகிறது. இவரது தமிழமுதம் தமிழ்கூறு நல்லுலகுக்குக் கிடைத்த நற்பேறு எனில் மிகையன்று.

அடிக்குறிப்புகள்
1.அ.அறிவுநம்பி, காரை.இறையடியானின் இலக்கிய மாட்சி(கட்) பேரா.சாயபு மரைக்காயர், காரை.இறையடியான் கவித்திறன், ப.29
2.இரா.திருமுருகன், மதிப்புரை, ந.மொ.கு, ப.13
3.பாரதி பாடல்கள், பா.01.1787
4.பாரதிதாசன் கவிதைகள், 63, புத்தகசாலை
5.தமிழமுதம், ‘இறைவா இன்தமிழ்தா’-ப.21
6.தமிழமுதம், ‘தமிழ் வேட்கை’-ப.63
7.தமிழமுதம், ‘கொட்டு முரசம்’-ப.75
8.தமிழமுதம், ‘தேசியம்’-ப.72
9.தமிழமுதம், ‘பணிசெய்க பகலைப் போல்’ –ப.82
10.காரை.இறையடியான், தமிழமுதம், ப.106
11.மேலது, -ப.35
12.மேலது, -ப.44
13.மேலது, -ப.170

mujeebvnb77@gmail.com